நகர வளர்ச்சியால் சாதியப் பாகுபாடுகளும் தீண்டாமைக் கொடுமைகளும் ஒழிந்துவிட் டன என்ற பொதுவான கருத்தை அடியோடு தள்ளுபடி செய்கி றது ஒரு ஆய்வறிக்கை. தமிழ கத்தின் தலைநகர் சென்னை யில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு எந்த அளவுக்கு இங்கேயும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதி ரான ஒடுக்குமுறைகள் பல் வேறு வடிவங்களில் தொடர் கின்றன என்பதைக் காட்டு கிறது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இவ் வாண்டு செப்டம்பர், அக்டோ பர் மாதங்களில் சென்னை மாநகரில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகிய பட்டிய லின மக்கள் வாழ்கிற பகுதி களில் அவர்களது பிரச்சனை கள், அடிப்படைத் தேவைகள் குறித்த கள ஆய்வை மேற் கொண்டது. இந்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் 31 பகுதிகளில் 80 கள ஆய்வாளர்கள் ஈடுபட்டுத் தொகுத்துள்ள அறிக்கை புத னன்று (டிச.29) செய்தியாளர் கள் முன் வெளியிடப்பட்டது.
இந்த மக்களிடையே ஏற் பட்ட எழுச்சியின் காரணமாக நடுத்தர வர்க்க வேலை வாய்ப்பு களில் சிறிதளவு பிரதிநிதித்து வம் அதிகரித்துள்ளது. எனி னும், சாதிய ஒடுக்குமுறை களுக்கு மாநகரம் விதிவிலக் காக இல்லை. 1991ல் புதிய பொருளாதாரக் கொள்கை செயல் படத் தொடங்கிய பிறகு பத் தாண்டு காலத்தில் நகர விரி வாக்கத்தின் பலன்கள் இந்த மக்களை எட்டவில்லை. இந் தியாவில் பட்டியலின மக்க ளின் எண்ணிக்கை 16.23 விழுக் காடு. தமிழகத்தில் இது 19 விழுக்காடு. ஆனால், சென்னை யில் 1991ல் 13.78 விழுக்காடாக இருந்தது 2001ல் 13.76 விழுக் காடாக சரிவடைந்துவிட்டது. அதேபோல் பழங்குடி மக்கள் தொகையும் 0.2 விழுக்காடாக இருந்தது 0.15 விழுக்காடாக குறைந்துவிட்டது. மாநகரத்தி லிருந்து இந்த மக்கள் வெளி யேற்றப்படுகிற நிலையைத் தான் இது காட்டுகிறது என அறிக்கை கூறுகிறது.
இவ்விரு பிரிவு மக்களும் சென்னையில் சேரிகளில் தான் பெருமளவிற்கு வாழ்கிறார் கள். இதுவே கூட இங்கு சாதி யச் சமூகத் தாக்கம் இருப்ப தைக் காட்டுகிறது. இவர் களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் குடிநீர், கழிப் பறை, சாக்கடை போன்ற அடிப் படை வசதிகள் இல்லாத சேரி களில் குப்பை கூளங்களுக்கு நடுவில்தான் வாழ்கிறார்கள். கூவம், அடையாறு, பர்கிங் ஹாம் கால்வாய் ஆகியவற்றின் கரைகளிலும் நடைபாதை ஓரங் களிலும்தான் பெரும்பாலோர் வசிக்கின்றனர்.
தமிழக அரசு தனது குடிசை மாற்று வாரியம் பற்றி பெருமை யாகக் கூறிக்கொள்கிறது. ஆனால், கடந்த 38 ஆண்டு களில் 72,000 வீடுகள் மட் டுமே கட்டித்தரப்பட்டுள்ளன. இதனைச் சுட்டிக்காட்டிய முன்னணியின் மாநிலத் தலை வர்கள் பி. சம்பத், “2003ல் குடிசையில்லா சென்னை என்று அறிவிக்கப்பட்டிருக் கிற இலக்கு உண்மையில் குடிசைகளை மாற்றுவதாக அல்லாமல், இந்த மக்களை நகரத்தைவிட்டு வெளியேற்று வதாகவே இருக்கும் என்ற ஐயம் எழுகிறது,” என்று கூறி னார்.
துப்புரவுப் பணி, ஆட்டோ, ரிக்ஷா, சுமைப்பணி, கட்டுமா னம் உள்ளிட்ட உடல் உழைப் புச் சார்ந்த தொழில்கள் இந்த மக்கள் மீதே சுமத்தப்படுகின் றன. இவர்கள் குவியலாக வாழ் கிற பகுதிகளில் இவர்களோடு குடியிருக்கும் இஸ்லாமியர் களும் மிகவும் பிற்பட்டவர் களாகவே உள்ளனர்.
“மாநகரத்தில் பலத் தெருக் கள் சாதிப் பெயர்களோடு நீடிக் கின்றன. டாக்டர் அம்பேத்கர் பெயர் சாலைகளுக்கும், தெருக் களுக்கும் சூட்டப்பட்டாலும் கூட அவை அனைத்தும் தாழ்த் தப்பட்டோர் வாழும் பகுதி களிலேயே உள்ளன. அரசுக்கு வெட்கமில்லையா? அவர் தலித் மக்களின் தலைவர் மட் டும்தானா? பொதுவான இடங் களுக்கு அம்பேத்கர் பெயரை சூட்டக்கூடாதா?” -இவ்வாறு கேள்வி எழுப்பினார் சம்பத்.
இவர்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தில் ரூ.3,821 கோடி நிதி செலவிடப்பட்ட தாக முதலமைச்சர் கூறுகிறார். அந்த நிதியிலிருந்து இவர் களது வீடுகள் ஏன் புதுப்பிக் கப்படவில்லை? இது அந்த நிதி வேறு நோக்கங்களுக்கு திருப்பிவிடப்பட்டதையே காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
துப்புரவுப் பணிகளில் அருந் ததியர் மக்கள்தான் பெருமள விற்கு நியமிக்கப்படுகிறார்கள். அவர்களை மரியாதையின்றி அழைப்பது, மோசமான பாத் திரங்களில் குடிநீர் தருவது போன்ற பாகுபாடுகள் அப்பட்ட மாக நடைபெறுகின்றன. வேறு சாதிகளைச் சேர்ந்த சிலர் துப்புரவுப் பணிகளில் நியமிக் கப்பட்டாலும், அவர்களுக்கு அலுவலக உதவி போன்ற வேறு வேலைகள் தரப்படுகின் றன. கழிப்பறை சுத்தப்படுத்து தல் உள்ளிட்ட துப்புரவுப் பணி கள் தலித்துகளின் தலையில் மட்டுமே சுமத்தப்படுகிறது. வீட்டு வேலை செய்யும் தலித் பெண்கள் அந்த வீடுகளின் பூசை அறைகளுக்குள் அனு மதிக்கப்படுவதில்லை என்ற நிலைமையும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
20 முதல் 60 ஆண்டுகள் வரை பட்டா மறுக்கப்படுவது, உயர் பதவிகளில் இருக்கக் கூடிய தலித்துகளுக்குக் கூட வாடகைக்கு வீடு கிடைப்பது கடினமாக இருப்பது, தலித் மக்கள் பகுதிகளில் நியாய விலைக் கடைகள் மிகக் குறை வாகவே இருப்பது, மற்ற பகுதி களிலிருந்தும் நியாயவிலைக் கடைகளில் இவர்கள் பல மணிநேரம் இழுத்தடிக்கப்படு வது, இவர்களது குடியிருப்பு களில் மின்வெட்டு பல மணி நேரம் நீடிப்பது, முதியோர் ஓய் வூதிய பணத்தைக் கொடுப்ப தற்கு சில லஞ்சம் கேட்கப்படு வது, இப்பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லா தது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மறுக்கப்படுவது, இருக்கிற சில விளையாட்டு மைதானங் களும் குப்பை கொட்டும் இடங் களாக மாற்றப்பட்டிருப்பது, சாதிச் சான்றிதழ் பெற பெரும் போராட்டம் நடத்த வேண் டியிருப்பது, கோவில் நிர் வாகங்களில் தலித்துகளுக்கு இடமின்மை போன்ற பல்வேறு பாகுபாடுகளும் சென்னையில் நிலவுகின்றன.
அரசுப் பள்ளிகளிலும் மாந கராட்சிப் பள்ளிகளிலும் பெரும் பாலும் இந்த சமூகங்களின் குழந்தைகளே பயில்கிறார்கள். இரவுப் பள்ளிகள் பற்றி அறி விக்கப்பட்டிருந்தாலும், இரண்டு பகுதிகளில் மட்டுமே இக் குழந்தைகளுக்கான இரவுப் பள்ளிகள் உள்ளன என்ற தகவல்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தனியார் துப்புரவு ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்பாக செய் தியாளர்கள் கேட்டபோது, “அவற்றிலும் தலித்துகள்தான் இப்பணிகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுவதில்லை, இவர் கள் இழிவாக நடத்தப்படுவது தனியார் ஒப்பந்த நிறுவனங் களிலும் தொடர்கிறது,” என்று சம்பத் பதிலளித்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் பற்றிய கேள்விக்கு அவர், “சட் டம் வந்ததோடு சரி, அது செயல்படுத்தப்படாமல் வெறும் வாய்ப்பந்தலாகவே நிற்கிறது. சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முறை யாக நடத்த தேவையான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை,” என்று கூறினார்.
தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், பொருளா ளர் ஆர். ஜெயராமன், செயலா ளர் சாமிநாதன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோரும் செய்தியாளர் சந்திப் பில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment