மகாராஷ்டிராவின் ஆதர்ச ஊழல் கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா மீது நில மோசடி குற்றச்சாட்டுக்கள். பெங்களூரு மற்றும் முக்கிய நகரங்களில் பல கோடி ரூ பாய் மதிப்புள்ள பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தனது மகன்களுக்கும் முக்கிய உறவினர்களுக்கும் சட்ட விரோதமாக அடிமாட்டு விலைக்கு வாரி வழங்கியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
1991ம் ஆண்டு கர்நாடக நில மாற்றத்தடைச்சட்டத்தின்படி பெங்களுரூ வளர்ச்சிக் குழுமம் அறிவிக்கை செய்துள்ள நிலங்களை மாற்றுவதோ அடமானம் வைப்பதோ மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை பெறக்கூடிய குற்றமாகும். ஆனால் ஒரு மாநில முதலமைச்சரே அதனை மாற்றி ஆணை பிறப்பித்துள்ளார் இதன்மூலம் நிலக்கொள்ளை கன ஜோராக நடைபெற்றுள்ளது. உதாரணத்திற்கு பானசங்கரி என்ற இடத்தில் 175 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் சட்ட விரோதமாக கையகப்படுத்தப்பட்டு அவரது மகன்கள் கூட்டாளிகளாக உள்ள நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதைப்போல இன்னும் ஏராளமான நிலப் பேரம்.
ஏடியூரப்பாவின் அமைச்சரவை சகாக்கள் 13 பேர் மீது இன்று நிலப் பேர ஊழல் வழக்குகள். மாநில லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் யஹக்டே இந்த ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளார். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சுருட்டப்பட்டுள்ளது. செல்வாக்கு நிறைந்த ரெட்டி சகோதரர்கள் கனிம வளங்களை சூறையாடி வருகிறது தனிக்கதை இவ்வளவும் நடைபெற்ற பிறகும் எடியூரப்பா பதவியில் ஓட்டிக்கொண்டுள்ளார். கட்சித்தலைமையின் ஆசியும் எனக்கு உண்டு என்று அறிக்கை வேறு. எத்தகைய வெட்கக்கேடான நிலையில் பாஜக உள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கட்ட சுப்ரமணிய நாயுடு அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதால் பதவி விலகியுள்ளார். அனைவருமே பதவி விலக வேண்டாமா?
அதேபோல உத்தர்காண்ட் மாநிலத்தில் ரி´கே´ல் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 ஏக்கர் நிலத்தை ரியல் எஸ்டேட் கொள்ளயர்களுக்கு வெறும் 3 கோடி ரூபாய்க்கு கைமாறியுள்ள முறைகேடுகள். இதில் மாநில முதல்வர் ரமேஷ் பொக்ரியாசிங் பாட்டிக் கொண்டுள்ளார்.
ஊழல் புரிவதில் காங்கிரஸ், பாஜக இரண்டும் ஒன்றே வேறுபாடுகள் இல்லை. ஆனால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தேவை என உரத்துக் குரல் எழுப்புகிறது பாஜக ஊழல் கறை படிந்த அது பிரதான எதிர்க்கட்சி வேறு என்ன முரண்பாடு ! இரட்டை வேடம் ! வேடிக்கை ! வேதனை !
No comments:
Post a Comment