அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளரும், பொது இன்சூரன்சின் அகில இந்திய நிலைக் குழு செயலாளருமான ஜே.குருமூர்த்தி அலுவலகப் பணி நிறைவு பாராட்டு விழா சனிக்கிழமையன்று (டிசம்பர் 4) சென்னையில் நடைபெறுகிறது.
பொது இன்சூரன்ஸ் நிறு வனங்கள் தேசியமயமாக்கப் படுவதற்கு முன்பே தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமான இந்தியன் மீச்சுவல் கம்பெனி யில் பணியில் சேர்ந்து அங்கு தொழிற்சங்கத்தை உருவாக்கி யவர் தோழர் ஜே.குருமூர்த்தி.
பொது இன்சூரன்சின் அகில இந்திய நிலைக் குழு செயலாளர் ஆன பிறகு ராஜஸ் தான் போன்ற சற்று பலம் குறைந்த மாநிலங்களிலும் கூட சங்கக் கிளைகளின் விரி வாக்கத்திற்கு கவனம் செலுத்தி முன்னேற்றத்தையும் ஏற் படுத்தி உள்ளார். யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் கம்பெனி யின் பணியிலிருந்து நவம்பர் 30 அன்று ஓய்வு பெற்றுள்ளார்.
தலைவர்கள் பங்கேற்பு
சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் கள் அமானுல்லாகான், கே. வேணுகோபால், என்.எம்.சுந்த ரம், ஆர்.சந்தானம், பக்சி, எம். குன்னி கிருஷ்ணன், கே. சுவாமிநாதன் உள்ளிட்ட தலை வர்கள் வாழ்த்துரை வழங்க வுள்ளனர். சென்னை மாநகர தொழிற்சங்க தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
No comments:
Post a Comment