வேளாண்மை உங்களுக்கு
விளைச்சல் எங்களுக்கு
பல்பொருள் அங்காடி
உங்களுடையது.
வர்த்தகம் எங்களுடையது.
பஞ்சு எங்களுக்கு
நூல் உங்களுக்கு
இரயில் எஞ்சின் நாங்கள்
தயாரிப்போம்.
தண்டவாளத்தை நீங்கள்
தயாரிப்பீர்கள்.
பல்கலைக்கழகம் எங்களுடையது
மாணவர்கள் உங்களுடையவர்கள்
அணு உலைகள் உங்களுக்கு
இறையாண்மை எங்களுக்கு
ஆதிக்கம் செய்ய நாங்கள்
“நண்பேன்டா” சொல்ல வேண்டும்
நீங்கள்!
No comments:
Post a Comment