Monday, December 20, 2010

சோசலிசம் வலுவடையும் சீர்திருத்தங்கள் குறித்து ரால் காஸ்ட்ரோ கருத்து

கியூபாவில் மேற்கொள் ளப்போகும் சீர்திருத்தங்கள் 1959 ஆம் ஆண்டுப் புரட்சிக் குப்பிறகு உருவான சோச லிச கியூபாவை மேலும் வலுவடையவே செய்யும் என்று கியூபாவின் ஜனாதி பதி ரால் காஸ்ட்ரோ குறிப் பிட்டுள்ளார்.

கியூபாவில் மேற்கொள் ளப்பட்டு வரும் சீர்திருத்தங் கள் பற்றி தவறான செய்தி கள் பரப்பப்பட்டு வருகை யில், பிபிசி செய்தி நிறுவனத் தின் மைக்கேல் ஓஸ், கியூ பாவுக்கே சென்று நேரில் பார்த்தவற்றை தனது செய் தியில் விளக்குகிறார். புரட் சியை சாகடித்துவிடாமல் பார்த்துக் கொள்வதற்கு இந்த சீர்திருத்தங்கள் அவ சியம் என்று ரால் காஸ்ட் ரோ சொல்வதை அவர் பதிவு செய்துள்ளார். 

இதுகுறித்து பிபிசி செய்தியாளர் மைக்கேல் ஓஸிடம் பேசிய ரால் காஸ்ட்ரோ, கியூபா செய்து வரும் மாற்றங்களால் முத லாளித்துவத்திற்கு நாங்கள் திரும்பிவிட மாட்டோம். சுயவேலைவாய்ப்பு மற்றும் சிறிய வர்த்தகம் ஆகிய வற்றை மேற்கொள்ளுமாறு இளைஞர்கள் ஊக்கப்படுத் தப்படுவார்கள். இத்தகைய நடவடிக்கைகள் புரட்சிக் குப் பிறகு உருவாக்கப்பட்ட சோசலிச அமைப்பைப் பலப்படுத்தவே செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புறங்களுக்கு பயணம் செய்த மைக்கேல் ஓஸ், கைவினைக்கலைஞர் கள் போன்றவர்கள் அரசின் புதிய முயற்சிகளால் உற்சா கமடைந்து, தங்கள் வேலை களைச் செய்ய தயாராகி விட்டார்கள் என்று தனது செய்தியில் பதிவு செய்கி றார். இவ்வாறு அவர் பய ணம் செய்த ஒரு கிராமத்தில் சுமார் 60 வேலைகளை அடையாளம் கண்டு, சுய வேலைக்கான வாய்ப்பை அரசு உதவியோடு மக்கள் எடுத்துக் கொண்டிருக்கி றார்கள்.

பாத்திரங்களைச் செய் பவர்கள் இணைந்து ஒரு கூட்டுறவு சங்கத்தை சில கிராமங்களில் உருவாக்கியி ருக்கிறார்கள். பாத்திரத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்றும் புதிதாக உருவாகி யுள்ளது. இதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக் கும் ஆல்பெர்ட்டோ அர குஸ் கூறுகையில், எங்க ளால் ஏராளமானவர்க ளுக்கு வேலை வாய்ப்பைத் தரமுடியும் என்கிறார்.

புதிதாகத் தொழில் துவங்குவதற்கு அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் பேர் உரிமம் கோரி யிருக்கிறார்கள். இவர்களில் 30 ஆயிரம் பேருக்கு ஒரே மாதத்தில் உரிமம் வழங்கி விட்டார்கள். மற்றவர்களுக் கும் உரிமம் தருவதற்கான பணிகள் நடந்து கொண்டி ருக்கின்றன. 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடக்கப்போகும் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தீர்மானகர மான முடிவுகள் எடுக்கப் படவுள்ளன என்கிறார் மைக்கேல் ஓஸ்.

No comments:

Post a Comment