Thursday, December 23, 2010

மகா மெகாவான ஊழல்

மத்திய மாநில அரசு இரண்டும்
மக்களின் இரண்டு கண்களாகும்
மாநில கண்ணோ மத்திய கண்ணோ
மாறி மாறி பழுதுபட்டால்
பார்வைக்கு நிகரான பதவிபோகும்
ஆளும் அமைச்சர்கள் அறநெறிதவறிபோனால்
அரசின் செங்கோள் கேள்விக்குறியாகிவிடும் 
  (அ) கேலிக்குறியாகிவிடும்
வாய்கிழியபேசி வலம்வருவதுமட்டும்
அரசியலுக்கு ஆரோக்கியமாகாது
தொண்டுசெய்வதில் தூய்மையிருந்தால்
தூண்களாகமக்கள் தோள் கொடுப்பார்கள்
மக்களின் வாக்கை பெற்றவரெல்லாம்
தங்களின் போக்கை மாற்றிகொண்டு
நெறிதவறி பதவிவகுத்தால்
நிழல்தந்த மக்களும் வெறுப்பார்கள்
சீமான்களாய் ஆவதற்காகவா
செங்கோட்டைக்கு சென்றீர்கள்
உழைத்துகளைத்தவர்கள் தார்ரோட்டின் ஓரத்திலே
கொழுத்து தழைத்தவர்கள் கார் ஓட்டம் ரோட்டினிலே
பயிர்களை பாதுகாக்க வேண்டியவர்களே
வரப்பெலியாய் பணிகளையயடுத்து பதுக்கி கொண்டால்
கழனியை கண்காணிப்பவர்களுக்கு
களவுபோனது தெரியாமலா போய்விடும்
கிட்டிவைத்து பிடித்து விட்டார்கள்
கிடுக்கிபிடியில் மாட்டி கொண்டீர்கள்
உறங்கியயுண்மையை தட்டியயழுப்பி
உச்ச நீதி மன்றத்திற்கு அனுப்பி விட்டார்கள்
அலைகற்றை ஒதுக்கீடு செய்தவர்கள்
அரசு கருவூலகத்திற்கு இழப்பை தந்திருக்கிறார்கள்
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கூட
கடைந்தெடுத்து வெண்ணையயடுக்காமலில்லை
மனைகுடியிருப்புகளைகூட மறவாதவுறவுகளுக்கு
மறக்காமல் ஓதுக்கிகொடுத்த மகாராஷ்ரா மாண்புமிகு
இந்திய திருநாட்டின் பொருளாதாரத்தை
இயன்றவரையிலும் சிதைவடைய செய்து
எண்ணற்ற ஊழல்களை இதயமற்று செய்பவர்களை
எப்போது கண்டிப்பது எப்போது தண்டிப்பது
உண்மையயப்போதும் தோல்வியடைவதில்லை
பொய்யயப்போதுமே வெற்றிபெறுவதில்லை
ஊழல்களுக்கு உண்மையான தீர்வுகாணூம் நாள்
ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒளிமயமான நாள்


-ஆ. பழனிச்சாமி,
தின ஊழியர்
எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம்,
தஞ்சாவூர். 

No comments:

Post a Comment