Wednesday, December 29, 2010

நகரத்தில் தீண்டாமை இல்லையா? சென்னை ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தரும் உண்மைகள்

நகர வளர்ச்சியால் சாதியப் பாகுபாடுகளும் தீண்டாமைக் கொடுமைகளும் ஒழிந்துவிட் டன என்ற பொதுவான கருத்தை அடியோடு தள்ளுபடி செய்கி றது ஒரு ஆய்வறிக்கை. தமிழ கத்தின் தலைநகர் சென்னை யில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு எந்த அளவுக்கு இங்கேயும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதி ரான ஒடுக்குமுறைகள் பல் வேறு வடிவங்களில் தொடர் கின்றன என்பதைக் காட்டு கிறது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இவ் வாண்டு செப்டம்பர், அக்டோ பர் மாதங்களில் சென்னை மாநகரில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகிய பட்டிய லின மக்கள் வாழ்கிற பகுதி களில் அவர்களது பிரச்சனை கள், அடிப்படைத் தேவைகள் குறித்த கள ஆய்வை மேற் கொண்டது. இந்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் 31 பகுதிகளில் 80 கள ஆய்வாளர்கள் ஈடுபட்டுத் தொகுத்துள்ள அறிக்கை புத னன்று (டிச.29) செய்தியாளர் கள் முன் வெளியிடப்பட்டது.

இந்த மக்களிடையே ஏற் பட்ட எழுச்சியின் காரணமாக நடுத்தர வர்க்க வேலை வாய்ப்பு களில் சிறிதளவு பிரதிநிதித்து வம் அதிகரித்துள்ளது. எனி னும், சாதிய ஒடுக்குமுறை களுக்கு மாநகரம் விதிவிலக் காக இல்லை. 1991ல் புதிய பொருளாதாரக் கொள்கை செயல் படத் தொடங்கிய பிறகு பத் தாண்டு காலத்தில் நகர விரி வாக்கத்தின் பலன்கள் இந்த மக்களை எட்டவில்லை. இந் தியாவில் பட்டியலின மக்க ளின் எண்ணிக்கை 16.23 விழுக் காடு. தமிழகத்தில் இது 19 விழுக்காடு. ஆனால், சென்னை யில் 1991ல் 13.78 விழுக்காடாக இருந்தது 2001ல் 13.76 விழுக் காடாக சரிவடைந்துவிட்டது. அதேபோல் பழங்குடி மக்கள் தொகையும் 0.2 விழுக்காடாக இருந்தது 0.15 விழுக்காடாக குறைந்துவிட்டது. மாநகரத்தி லிருந்து இந்த மக்கள் வெளி யேற்றப்படுகிற நிலையைத் தான் இது காட்டுகிறது என அறிக்கை கூறுகிறது.

இவ்விரு பிரிவு மக்களும் சென்னையில் சேரிகளில் தான் பெருமளவிற்கு வாழ்கிறார் கள். இதுவே கூட இங்கு சாதி யச் சமூகத் தாக்கம் இருப்ப தைக் காட்டுகிறது. இவர் களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் குடிநீர், கழிப் பறை, சாக்கடை போன்ற அடிப் படை வசதிகள் இல்லாத சேரி களில் குப்பை கூளங்களுக்கு நடுவில்தான் வாழ்கிறார்கள். கூவம், அடையாறு, பர்கிங் ஹாம் கால்வாய் ஆகியவற்றின் கரைகளிலும் நடைபாதை ஓரங் களிலும்தான் பெரும்பாலோர் வசிக்கின்றனர்.

தமிழக அரசு தனது குடிசை மாற்று வாரியம் பற்றி பெருமை யாகக் கூறிக்கொள்கிறது. ஆனால், கடந்த 38 ஆண்டு களில் 72,000 வீடுகள் மட் டுமே கட்டித்தரப்பட்டுள்ளன. இதனைச் சுட்டிக்காட்டிய முன்னணியின் மாநிலத் தலை வர்கள் பி. சம்பத், “2003ல் குடிசையில்லா சென்னை என்று அறிவிக்கப்பட்டிருக் கிற இலக்கு உண்மையில் குடிசைகளை மாற்றுவதாக அல்லாமல், இந்த மக்களை நகரத்தைவிட்டு வெளியேற்று வதாகவே இருக்கும் என்ற ஐயம் எழுகிறது,” என்று கூறி னார்.

துப்புரவுப் பணி, ஆட்டோ, ரிக்ஷா, சுமைப்பணி, கட்டுமா னம் உள்ளிட்ட உடல் உழைப் புச் சார்ந்த தொழில்கள் இந்த மக்கள் மீதே சுமத்தப்படுகின் றன. இவர்கள் குவியலாக வாழ் கிற பகுதிகளில் இவர்களோடு குடியிருக்கும் இஸ்லாமியர் களும் மிகவும் பிற்பட்டவர் களாகவே உள்ளனர்.

“மாநகரத்தில் பலத் தெருக் கள் சாதிப் பெயர்களோடு நீடிக் கின்றன. டாக்டர் அம்பேத்கர் பெயர் சாலைகளுக்கும், தெருக் களுக்கும் சூட்டப்பட்டாலும் கூட அவை அனைத்தும் தாழ்த் தப்பட்டோர் வாழும் பகுதி களிலேயே உள்ளன. அரசுக்கு வெட்கமில்லையா? அவர் தலித் மக்களின் தலைவர் மட் டும்தானா? பொதுவான இடங் களுக்கு அம்பேத்கர் பெயரை சூட்டக்கூடாதா?” -இவ்வாறு கேள்வி எழுப்பினார் சம்பத்.

இவர்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தில் ரூ.3,821 கோடி நிதி செலவிடப்பட்ட தாக முதலமைச்சர் கூறுகிறார். அந்த நிதியிலிருந்து இவர் களது வீடுகள் ஏன் புதுப்பிக் கப்படவில்லை? இது அந்த நிதி வேறு நோக்கங்களுக்கு திருப்பிவிடப்பட்டதையே காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

துப்புரவுப் பணிகளில் அருந் ததியர் மக்கள்தான் பெருமள விற்கு நியமிக்கப்படுகிறார்கள். அவர்களை மரியாதையின்றி அழைப்பது, மோசமான பாத் திரங்களில் குடிநீர் தருவது போன்ற பாகுபாடுகள் அப்பட்ட மாக நடைபெறுகின்றன. வேறு சாதிகளைச் சேர்ந்த சிலர் துப்புரவுப் பணிகளில் நியமிக் கப்பட்டாலும், அவர்களுக்கு அலுவலக உதவி போன்ற வேறு வேலைகள் தரப்படுகின் றன. கழிப்பறை சுத்தப்படுத்து தல் உள்ளிட்ட துப்புரவுப் பணி கள் தலித்துகளின் தலையில் மட்டுமே சுமத்தப்படுகிறது. வீட்டு வேலை செய்யும் தலித் பெண்கள் அந்த வீடுகளின் பூசை அறைகளுக்குள் அனு மதிக்கப்படுவதில்லை என்ற நிலைமையும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

20 முதல் 60 ஆண்டுகள் வரை பட்டா மறுக்கப்படுவது, உயர் பதவிகளில் இருக்கக் கூடிய தலித்துகளுக்குக் கூட வாடகைக்கு வீடு கிடைப்பது கடினமாக இருப்பது, தலித் மக்கள் பகுதிகளில் நியாய விலைக் கடைகள் மிகக் குறை வாகவே இருப்பது, மற்ற பகுதி களிலிருந்தும் நியாயவிலைக் கடைகளில் இவர்கள் பல மணிநேரம் இழுத்தடிக்கப்படு வது, இவர்களது குடியிருப்பு களில் மின்வெட்டு பல மணி நேரம் நீடிப்பது, முதியோர் ஓய் வூதிய பணத்தைக் கொடுப்ப தற்கு சில லஞ்சம் கேட்கப்படு வது, இப்பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லா தது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மறுக்கப்படுவது, இருக்கிற சில விளையாட்டு மைதானங் களும் குப்பை கொட்டும் இடங் களாக மாற்றப்பட்டிருப்பது, சாதிச் சான்றிதழ் பெற பெரும் போராட்டம் நடத்த வேண் டியிருப்பது, கோவில் நிர் வாகங்களில் தலித்துகளுக்கு இடமின்மை போன்ற பல்வேறு பாகுபாடுகளும் சென்னையில் நிலவுகின்றன.

அரசுப் பள்ளிகளிலும் மாந கராட்சிப் பள்ளிகளிலும் பெரும் பாலும் இந்த சமூகங்களின் குழந்தைகளே பயில்கிறார்கள். இரவுப் பள்ளிகள் பற்றி அறி விக்கப்பட்டிருந்தாலும், இரண்டு பகுதிகளில் மட்டுமே இக் குழந்தைகளுக்கான இரவுப் பள்ளிகள் உள்ளன என்ற தகவல்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தனியார் துப்புரவு ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்பாக செய் தியாளர்கள் கேட்டபோது, “அவற்றிலும் தலித்துகள்தான் இப்பணிகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுவதில்லை, இவர் கள் இழிவாக நடத்தப்படுவது தனியார் ஒப்பந்த நிறுவனங் களிலும் தொடர்கிறது,” என்று சம்பத் பதிலளித்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் பற்றிய கேள்விக்கு அவர், “சட் டம் வந்ததோடு சரி, அது செயல்படுத்தப்படாமல் வெறும் வாய்ப்பந்தலாகவே நிற்கிறது. சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முறை யாக நடத்த தேவையான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை,” என்று கூறினார்.

தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், பொருளா ளர் ஆர். ஜெயராமன், செயலா ளர் சாமிநாதன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோரும் செய்தியாளர் சந்திப் பில் பங்கேற்றனர்.

வெண்மணி சங்கமம் - 2010 ஆயிரக்கணக்கில் திரண்ட தோழர்கள்























Sunday, December 26, 2010

உடுமலையிலும் தீண்டாமைச் சுவர்!

உடுமலை அருகே கே.ஜி. புதூர் ஜே.ஜே.நகரில் தாழ்த் தப்பட்ட மக்கள் குடியிருப் பிலிருந்து செல்லும் நடை பாதையைத் தடுத்து தீண் டாமைச் சுவர் எழுப்பப்பட் டுள்ளது.

இந்த சுவரை நேரில் பார் வையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் உடனடியாக இதை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வரும் ஜே.ஜே.நக ரில் உள்ள நடைபாதை யைத் தடுத்து சுமார் 300 மீட்டர் நீளத்துக்கு 5 அடி உயரத்தில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்க ளுக்கு வழித்தடம் மறைக் கப்பட்டுவிட்டது.

இது தொடர்பாக தக வல் அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை கமிட் டிச் செயலாளர் சி.சுப்பிர மணியம், மடத்துக்குளம் கமிட்டிச் செயலாளர் வெ. ரங்கநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.கிருஷ் ணசாமி, என்.சசிகலா மற் றும் ஒன்றியக் கமிட்டி உறுப்பினர்கள் ஜெகதீசன், எச்.சுப்பிரமணியம், ஆனந்த குமார், திருமலைசாமி, சுதா சுப்பிரமணியம், ரவி மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் சம்பந்தப் பட்ட இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்பகுதி மக்களிடம் விசா ரித்தபோது, நிலவிற்பனை செய்வோர் நிலத்தின் மதிப் பை அதிகரித்துக் காட்டும் நோக்கத்தில் தலித் மக்கள் குடியிருப்பை மறித்து தடுப் புச் சுவர் அமைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினர்.

தீண்டாமை நோக்கத் தோடு எழுப்பப்பட்ட இந்த சுவரை உடனடியாக அகற்றி, இந்தப் பகுதி மக்களுக்கு பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப் போவதாகவும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரி வித்தனர்.

Saturday, December 25, 2010

கோவை: தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையீட்டால் அரசு நடவடிக்கை- தீண்டாமைச்சுவர் இடிக்கப்பட்டது


தீண்டாமைச்சுவர் இடிக்கப்பட்டது
கோவை அருகே நாகராஜபுரத்தில் தலித் மக் களின் குடியிருப்பை மறைத்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் தீண்டாமைப் பெருஞ்சுவரைக் கட்டி யிருந்தனர். இப்பிரச்சனையைக் கையிலெடுத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அந்தச்சுவரை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி யிருந்தது. இச்சுவர் குறித்து தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்தச் சுவரை இடித்து அரசு அதிகாரிகள் இரு இடங்களில் வழி ஏற்படுத்தித் தந்தனர். நாகராஜபுரம் தலித் மக்கள் இந்நடவடிக் கையால் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கோவை அருகே வேடபட்டி பேரூராட்சியில் உள்ளது நாகராஜபுரம். இங்கு அருந்ததியர், நரிக்குறவர் எனப்படும் மராட்டா இன மக்களுமாக சுமார் 500 தலித் குடியிருப்புகள் உள்ளன. இங்கு நஞ்சுண்ட கவுண்டர் தோட்டம் இருந்த நிலத்தை விஜயகுமார், சேட்டன் சர்மா ஆகிய இரண்டு ரியல் எஸ்டேட் அதிபர்கள் வாங்கினர். இந்த இடத்தை மனைப் பிரிவுகளாக்கி விற்பனைக் கான அனுமதி பெற்றனர். ஆனால் மனைப் பிரிவு களாக்கி விதிமுறைப்படி பேரூராட்சி நிர்வாகத்தி டம் ஒப்படைத்த பூங்காவிற்கான ரிசர்வ் சைட்டில் எந்த அனுமதியும் பெறாமல் 1000 அடி நீளத்திற்கு 10 அடி உயரத்தில் சுவரை எழுப்பிவிட்டனர். அருகில் தலித் மக்கள் குடியிருப்பதால் தங்களது நிலம் விலைபோகாது என்ற தீண்டாமை எண் ணத்துடன் இந்த பிரம்மாண்ட சுவரைக் கட்டி யிருந்தனர்.

இப்பிரச்சனையை அறிந்த கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் சம் பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார் பில் தீண்டாமைச் சுவரை அகற்றி, பொது மக்க ளின் போக்குவரத்து உரிமையை நிலைநாட்டு மாறு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து வெள்ளியன்று தீண்டாமைச் சுவரை கோவை வடக்கு தாசில்தார் சுந்தர்ராஜன், தெற்கு தாசில்தார் லட்சுமி காந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர் சுவரை அகற்றுவதாக உறுதி அளித்துச் சென் றனர்.

இதன்படி சனிக்கிழமையன்று காலை 11 மணி யளவில் வீரகேரளம் பேரூராட்சி செயல் அலுவலர் துரைமணி தலைமையில் அரசு அதிகாரிகள் பொக்லின் இயந்திர உதவியுடன் இடிக்க வந்தனர். சுவரின் மேற்குப் புறத்தில் 30 அடியை முதலில் இடித்து அகற்றி வழி ஏற்படுத்தினர். பின்னர் சுவற்றின் கிழக்குப் புறத்தில் 23 அடியை இடித்து அகற்றினர். சுவரை இடிக்க பொக்லின் இயந்திரம் வந்ததை அறிந்து தலித் பெண்கள் திரளானோர் திரண்டனர்.

சுவரை இடித்து பாதை கிடைத்ததைக் கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மீண்டும் கிடைத்த பாதை வழியாக சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் துள்ளிக் குதித்தும், பெரும் உற்சாகமுடனும் ஒடி விளையாடினர்.

தீண்டாமைச் சுவர் அகற்றப்படும் போது தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப் பாளர் யு.கே. சிவஞானம், மாநிலச் செயலாளர் வி.பெருமாள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அ.ர.பாபு, பொருளாளர் ஆர்.துரைமணி மற்றும் ப.க.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.





தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

வேடபட்டி தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி நீண்டகாலம் வலி யுறுத்தி வந்தது. இந்தக்கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்து தீண்டாமைச் சுவர் சனிக்கிழமையன்று இடிக்கப் பட்டது. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.





மாவட்ட ஆட்சியரிடம் நேரில் நன்றி!

தீண்டாமைச்சுவர் இடிப்பு குறித்து கருத்து தெரிவித்த யு.கே.சிவஞானம், உடனடியாக கோவை மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டதை வரவேற்பதாகத் தெரி வித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் பு. உமாநாத் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் வீரகேரளம், வேடபட்டி பேரூராட்சி அதிகாரி கள் மற்றும் வருவாய்த் துறையினருக்கும் நன்றி தெரிவிப் பதாகவும் கூறினார். பின்னர் நண்பகல் ஒரு மணியளவில் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் மற்றும் வி.பெருமாள் உள்ளிட் டோர் மாவட்ட ஆட்சியர் பு.உமாநாத்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Thursday, December 23, 2010

வெண்மணி நோக்கி ...

வெண்மணி சங்கமம் நிகழ்விற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து
418 ( தஞ்சாவூர் கோட்டம் தவிர்த்து) தோழர்கள் பங்கேற்க உள்ளனர்.
15 மகளிர் தோழர்களும் வருகை தர உள்ளனர்.




மதுரைக் கோட்டத்தில் இருந்து மட்டும் 111 தோழர்கள் ( 13 மகளிர் உட்பட )
வருகை தருவதாகத் தெரிவித்துள்ளனர். இது அக்கோட்டத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 16 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது இன்சூரன்ஸ் மண்டலங்கள் 80 தோழர்கள் வருவதாகத் தெரிவித்துள்ளன.

திருவாரூர் தோழர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்து வருகிறார்கள். சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு கண்காட்சி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்

மகா மெகாவான ஊழல்

மத்திய மாநில அரசு இரண்டும்
மக்களின் இரண்டு கண்களாகும்
மாநில கண்ணோ மத்திய கண்ணோ
மாறி மாறி பழுதுபட்டால்
பார்வைக்கு நிகரான பதவிபோகும்
ஆளும் அமைச்சர்கள் அறநெறிதவறிபோனால்
அரசின் செங்கோள் கேள்விக்குறியாகிவிடும் 
  (அ) கேலிக்குறியாகிவிடும்
வாய்கிழியபேசி வலம்வருவதுமட்டும்
அரசியலுக்கு ஆரோக்கியமாகாது
தொண்டுசெய்வதில் தூய்மையிருந்தால்
தூண்களாகமக்கள் தோள் கொடுப்பார்கள்
மக்களின் வாக்கை பெற்றவரெல்லாம்
தங்களின் போக்கை மாற்றிகொண்டு
நெறிதவறி பதவிவகுத்தால்
நிழல்தந்த மக்களும் வெறுப்பார்கள்
சீமான்களாய் ஆவதற்காகவா
செங்கோட்டைக்கு சென்றீர்கள்
உழைத்துகளைத்தவர்கள் தார்ரோட்டின் ஓரத்திலே
கொழுத்து தழைத்தவர்கள் கார் ஓட்டம் ரோட்டினிலே
பயிர்களை பாதுகாக்க வேண்டியவர்களே
வரப்பெலியாய் பணிகளையயடுத்து பதுக்கி கொண்டால்
கழனியை கண்காணிப்பவர்களுக்கு
களவுபோனது தெரியாமலா போய்விடும்
கிட்டிவைத்து பிடித்து விட்டார்கள்
கிடுக்கிபிடியில் மாட்டி கொண்டீர்கள்
உறங்கியயுண்மையை தட்டியயழுப்பி
உச்ச நீதி மன்றத்திற்கு அனுப்பி விட்டார்கள்
அலைகற்றை ஒதுக்கீடு செய்தவர்கள்
அரசு கருவூலகத்திற்கு இழப்பை தந்திருக்கிறார்கள்
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கூட
கடைந்தெடுத்து வெண்ணையயடுக்காமலில்லை
மனைகுடியிருப்புகளைகூட மறவாதவுறவுகளுக்கு
மறக்காமல் ஓதுக்கிகொடுத்த மகாராஷ்ரா மாண்புமிகு
இந்திய திருநாட்டின் பொருளாதாரத்தை
இயன்றவரையிலும் சிதைவடைய செய்து
எண்ணற்ற ஊழல்களை இதயமற்று செய்பவர்களை
எப்போது கண்டிப்பது எப்போது தண்டிப்பது
உண்மையயப்போதும் தோல்வியடைவதில்லை
பொய்யயப்போதுமே வெற்றிபெறுவதில்லை
ஊழல்களுக்கு உண்மையான தீர்வுகாணூம் நாள்
ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒளிமயமான நாள்


-ஆ. பழனிச்சாமி,
தின ஊழியர்
எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம்,
தஞ்சாவூர். 

""அம்பேத்கர்'' படம் அல்ல பாடம் - செ. சண்முகசுந்தரம்

அண்ணல் அம்பேத்கரைப் பற்றிய திரைப்படம் தமிழ் வடிவத்தில் சமீபத்தில் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. பல நீண்ட தடங்கல்களுக்குப் பின்னர் இப்படத்தை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். அண்ணலாக கேரளத்தின் மம்மூட்டி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அம்பேத்கர் படத்தைப் பற்றிய விமர்சனம் எழுத வேண்டும் என்று சொன்னபோதே வரலாற்றை எப்படி விமர்சனம் செய்வது என்ற சந்தேகம்தான் என்னை ஆட்கொண்டது. அம்பேத்கர் நவீன இந்தியாவின் சமூக வரலாற்றை வடிவமைத்தவர்களுள் மிகவும் முக்கியமானவர். பல நூறு ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவித்து வந்தக் கொடுமைகளை எதிர்த்து உரத்தக் குரலெழுப்பியவர். சமூக விடுதலைக்கான போராட்டக்களத்தின் முன்னணித் தலைவரும், போராளியும்கூட. அப்போராட்டங்களில் எத்தனையோ முறை பாதைதவறி, வன்முறைப் பாதைகளில் செல்ல வாய்ப்புகள் இருந்தபோதும் அதை முற்றாக நிராகரித்தவர். அப்பாதையை அவர் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றுதான் பலரும் விரும்பினார்கள். ஏனென்றால் அப்போதுதான் அவரை சமூக சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து ஒழிக்கமுடியும். ........................... சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட பல ஆத்திரமூட்டல் சம்பவங்களை அவர் எவ்வாறு முறியடித்தார் என்பதை படம் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது. சாதாரண படவிமர்சனம் என்ற நோக்கிலிருந்து நம் பார்வையை விலக்கிவிட்டுப் பார்க்கும்போது ஒரு மிகச் சிறந்த கல்வியை இந்த மூன்று மணி நேரமும் அது தருகிறது என்ற அற்புதத்தை நாம் உணர்வோம். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளையும், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கித் தருணங்களையும் நாம் நினைவில் வைத்திருப்போமானால் படத்தின் ஓட்டம் எவ்வளவு அற்புதமாக அமைந்துவிடுகிறது தெரியுமா? தன் தந்தையைக் காண குதிரை வண்டியில் தன் சகோதரனுடன் சென்றபோது இன்ன சாதி என்று தெரிந்ததும் வண்டிக்காரர் தொடர்ந்து வண்டு ஓட்ட மறுத்து அம்பேத்கரை கீழே இறக்கிவிடும் காட்சிகள் நம் ரத்தத்தை கொதிக்கச் செய்கிறது. மிகச் சாதாரண வரிகளாகப் புத்தகங்களில் படிப்பவை காட்சிப்படுத்தப்படும் போது எவ்வாறு வலிமையடைகிறது தெரியுமா? அதனால்தான் படத்தை வெளியிடாமல் இத்தனை ஆண்டுகளா தடுத்து வைத்திருந்தார்கள் போலும்.
 குடும்பத்துச் சோதனைகள் பலவற்றையும் சகித்துக் கொண்டு உயர்படிப்பை நிறைவுசெய்யும் அம்பேத்கரை நம் கண்முன் நிறுத்துகிறார் மம்முட்டி, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலும், இங்கிலாந்தில் பார் அடலாவும் படிக்கும் போதும் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை நேரடியாக அவ்விடங்களுக்குச் சென்று படமாக்கியதன் மூலம் படம் நம் மனதில் ஆழப்பதிகிறது.
 லண்டன் வட்ட மேசை மாநாட்டுக் காட்சிகள், அங்கு நடைபெறும் சொற்பொழிவுகள் அனைத்தும் மிக ஆழமான விவாதத்தை உருவாக்கவல்லவை. தாழ்த்தப்பட்ட வகுப்பை பிரதி நிதித்துவம் செய்வது தான் மட்டுமே என்று அம்பேத்கர் நிரறுவும் விதமும், அதற்கு காந்தியடிகளின் பதிலும் வரலாற்று ஆவணங்கள். தாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளத் தொகுதி வழங்கும் பிரிட்டிrVரின் அறிவிப்பை மிகக்கடுமையாக எதிர்க்கும் காந்தி எரவாடா சிறையில் சாமு வரை உண்ணாவிரதம் தொடங்குகிறார். அப்போது அம்பேத்கருக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலையில் மம்முட்டி தன் நடிப்பைத் தொட்டிருக்கிறார். காந்தியின் உயிரா அல்லது தனது இன மக்களின் நலனா என்று தீர்மானிக்க முடியாமல் அம்பேத்கரும் கூட சற்றே திணறித்தான் போகிறார். ஏனென்றால் காந்தி அப்போதைய இந்திய மக்களுக்கு ஒருவாழும் கடவுள். ஒரு வேளை காந்தி இறந்துவிட்டால் அதுதான் சமூக மக்களின் மேல் ஏற்படுத்தும் பாதிப்பையும், மேல் சாதி இந்துக்களின் கோபம் தாழ்த்தப்பட்ட சாதி மேல் தான் பாயும் என்பதையும் அறிவுப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட அம்பேத்கர் காந்தியின் உயிரைக் காப்பாற்றுகிறார். பூனா ஒப்பந்தத்தின் விளாவாக அகில இந்திய தீண்டாமை எதிர்ப்புக்கழகம் காந்தியால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு தீண்டப்படாதோருக்கான சேவைக் கழகமாக அதனை மாற்றியமைத்தார். அதிலும் திருப்தி அடையாமல் ""ஹரிஜன சேவா சங்கம்''  எனப் பெயரிட்டழைத்தார்.
 ஏரவாடா சிறைக் காட்சிகளும், உண்ணாவிரதமும், பூனா ஒப்பந்தமும் படத்தில் மிகச் சிறந்த முறையில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. அம்பேத்கரின் வாழ்வோடு பிண்ணிப் பினைந்துள்ள அவரது குடும்ப நிகழ்வுகள், உதாரணமாக முதல் மனைவி நோய்வாய்பட்டு இறந்த போவதும், பின்னர் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்காக அவருக்கு அமைந்த வாய்ப்பும் படத்தில் காவியமாக அமைந்து விடுகின்றன. விடுதலைக்குப்பிறகு தனக்குக் கிடைத்த சட்ட அமைச்சர் பதவியை இந்தியாவின் அரசியல் சட்டம் வகுக்க எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதும், தன் கனவுச் சட்டமாகிய இந்து சிவில் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் நேரு பின் வாங்கிய விதமும், அதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ததும் வெறும் படக் காட்சிகள் அல்ல, வரலாற்று ஆவணங்கள், இந்து மதத்தை துறக்கவேண்டும் என்ற அவரது நெடுநாளைய கனவு அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிறைவேறுகிறது. அவர் புத்தமதத்தைத் தழுவுகிறார். புத்தமதத்தை தழுவும் காட்சிகளோடு படமும் நிறைவடைகிறது.
 பரோடா சமஸ்தானத்தில் பணிபுரியச் செல்லும் அம்பேத்கர் மஹர் என்ற கீழ்சாதியைச் சார்ந்தவர் என்பதால் தங்க இடம் கிடைக்காமல் படும் அல்லலும் அவருடன் பணிபுரியும் கீழ்நிலை ஊழியர்கள் கூட தண்ணீர் தர மறுக்கும் சூழலும் எவருக்கும் கண்ணீர் வரவழைப்பவை.
 வட்டமேசை மாநாடும், காந்தி d அம்பேத்கர் வாதங்களும், எரவாடா சிறையில் காந்தியின் உண்ணாவிரதப் போராட்டமும், பூனா ஒப்பந்தமும் படத்தின் முக்கிய மையமாகத் திழந்து போகிறது. பூனா ஒப்பந்தத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான அரசியல் உரிமையை தட்டிப் பறித்த காந்திக்கு அம்பேத்கர் விடுத்த முக்கியமான செய்தி என்ன தெரியுமா? ""இனியயாரு முறை இம்மாதிரியான உண்ணாவிரத ஆயுதத்தைப் பயன்படுத்தாதீர்கள்'' என்பதுதான். தீண்டாமை ஒழிப்பு விrயத்தில் காந்தி ஒரு வாய்ச்சொல் வீரர் என்று அம்பேத்கர் தனது ""தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும், காந்தியும் சாதித்தது என்ன?'' என்று நூலில் மிகத் தெளிவாக நிறுவுகிறார். இந்நூலைப் படித்த பின்னர் அம்பேத்கர் படத்தைப் பார்ப்போமானால் காந்தி மீதான அம்பேத்கரின் நியாயமான கோபஹ்கள் சரியானவையே என்று நாம் புரிந்து கொள்வோம். படத்தின் நாயகன் அம்பேத்கர். புனா ஒப்பந்தத்திற்குப் பின்னர் படத்தில் மட்டுமல்ல, நிஜமான வரலாற்று உருவாக்கத்திலும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு வில்லனாக காந்தியடிகள் மாறிப்போனதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது ஒரு வரலாற்று நாயகனை ஆவணப்படுத்தி வெளியிட்ட உள்ளங்களை வாழ்த்தினேன். மனமெல்லாம் நிறைந்திருந்தது.
 (சமீபத்தில் நானும் எங்கள் வீட்டில் உள்ளவர்களும் தேசத்துரோகக் குற்றம் ஒன்றைச் செய்தோம் $$$$$ படத்தை விசிடிdயில் பார்த்தோம். நானும் என் குடும்பத்தினரும் சேர்த்து மொத்தம் ஆறுபேர். அம்பேத்கர் படத்தை திரையரங்கத்தில் பார்த்தபோதும் என்னோடு படம் பார்த்தவர்களின் எண்ணிக்கையும் மொத்தம் ஆறுபேர்தான். என் நண்பனிடம் $$$$$$ படத்தைப்பற்றிச் சொன்னேன். அதை வி.சி.டியில் பார்த்திருக்கக்கூடாது, திரையில் பார்த்தால்தான் $$$$$ உண்மையான எபெக்ட்ஸ் நமக்குத் தெரியும் என்றான். அம்பேத்கர் படத்தைப் பற்றியும் சொன்னேன். வி.சி.டி. எதுவும் கிடைக்குமா? என்றான்.

ஒரு தீர்க்கதரிசி !

ஆத்தா
ஆடு வளர்த்தா
மாடு வளர்த்தா
கோழி வளர்த்தா
நாய் மட்டும் வளர்க்கலே
ஆத்தா ஒரு
தீர்க்க தரிசி !
அடை மழை வெள்ளமென்றால்
அரசு
ஆட்டுக்கும்
மாட்டுக்கும்
தேர்தல் நேரமென்றால்
கோழிக்குக்கூட
நிவாரணம் கொடுக்கும்
நாய்க்கு யார்
கொடுப்பார்கள்?
அது தெரிந்துதான்
ஆத்தா
நாய் வளர்க்கலே
ஆத்தா - ஒரு
தீர்க்கரிசி

-கபிஸ்தலம் எஸ். இராஜேந்திரன்
மயிலாடுதுறை கிளை

டிசம்பர் 25 அழைக்கிறது

முதலாளிகளின் பேச்சையே
நமது மூச்சாக நம்பியவர்கள்
மதியோரின் பசிபோக்க
மாடாய் உழைத்தவர்கள்
கொத்தடிமை குகைக்குள்
கொடுமைகளை அனுபவித்தவர்கள்
உழைப்பால் காலத்தை கழித்த
உத்தம ராஜாக்கள்
விதியை நம்பிவாழ்ந்தவர்கள்
சதியால் வீழ்த்தபட்டவர்கள்
அரிவாள் சுத்தியுடன்
செங்கொடி பிடித்தவர்கள்
கூலிக்காக குரல் கொடுத்த
தினக்கூலி போராளிகள்
தீயுக்கு இரையான
தென்கிழக்கு சிங்கங்கள்
வெண்மணியின் இருளைபோக்கி
வெளிச்சத்தைதந்த கதிரவர்கள்
நீங்காது நினைவில் வாழும்
நிர்ணயிக்கமுடியாத பொக்கிrங்கள்
டிசம்பர் இருபத்தைந்தாம் நாளை
வெண்மணிக்கு முகவரியாக்கி தந்தவர்கள்
தீயில் வெந்திறந்தாலும்
திரும்பிபார்க்க வைத்தவர்கள்
அப்படிப்பட்ட அஞ்சாநெஞ்சங்களுக்கு
அஞ்சலிசெலுத்திட அனைவரும்
அலைகடலெனெ திரண்டுவாருங்கள்
அன்பான வேண்டுகோளையேற்று
சங்கமிப்போம் முக்கடலாய்
சரித்திரம் படைப்போம் ஒன்றுபட்ட மக்களாய்

-ஆ. பழனிச்சாமி,
தின ஊழியர்
எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம்,
தஞ்சாவூர்.

வாழ்த்துகிறோம்!

சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான எல்.ஐ.சியில் விளையாட்டுப் போட்டிகளில், நமது கோட்டத்தை சார்ந்த கீழ்கண்ட தோழர்கள் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற தோழர்கள் அனைவரையும் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சைக் கோட்டம் பெருமையுடன் பாராட்டி வாழ்த்துகிறது.

1. தோழர் S. ஸ்ரீதர், திருவெறும்பூர் 110 மீ தடை ஓட்டம்  முதலிடம்
2.  தோழர். N. பெருமாள், கரூர் கிளை 2  ஈட்டி எறிதல்    மூன்றாமிடம்
3. தோழர். N. பாக்கியலெட்சுமி  உயரம் தாண்டுதல்
    திருச்சி 1    100 மீ ஓட்டம் தத்தித் தப்படி தாவுதல் மூன்றாமிடம்
4. தோழர் ராஜேஷ், காரைக்கால் இறகு பந்து குழு ஆட்டம் மூன்றாமிடம்
5. தோழர் R. நிர்மல்குமார்,  திருத்துறைப்பூண்டி
     உயரம் தாண்டுதல்  நான்காமிடம்
 6. தோழர் K. விஜய் ஆனந்த், குடந்தை 2 குண்டு எறிதல்  ஐந்தாமிடம்

"இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு" - இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் (தமிழில்) தோழர். கே. லெட்சுமணன்

"இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு" என்ற நூல் முதலில் கம்யூனிசத் தலைவர் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களால் மலையாளத்தில் எழுதப்பட்டு 1977ல் நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றினை, போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கு கொண்ட அனுபவத்துடன் முழுமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். வரலாற்று மார்க்கிய கண்ணோட்டத்தோடு எழுதியுள்ள நூலை நமது காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர்
தோழர். கே. லெட்சுமணன் தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளார். "காந்தியின் இறுதி 200 நாட்கள்" என்ற நூலின் சிறந்த மொழியாக்கத்திற்காக 2009ஆம் ஆண்டு "நல்லி திசை எட்டு" விருதினைப் பெற்றவர். உலகப் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என பல நூல்களை தோழர் எழுதியுள்ளார். அந்தவகையில் இந்த மொழியாக்க நூல் அனைவரும் படித்தும் பயன்பெறும் வகையில் எளிய தமிழில் எழுதியுள்ளார். நூலின் விலை ரூ. 500/-

பாஜகவும் ஊழலும் - கடலூர் சுகுமாறன்

மகாராஷ்டிராவின் ஆதர்ச ஊழல் கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா மீது நில மோசடி குற்றச்சாட்டுக்கள். பெங்களூரு மற்றும் முக்கிய நகரங்களில் பல கோடி ரூ பாய் மதிப்புள்ள பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தனது மகன்களுக்கும் முக்கிய உறவினர்களுக்கும் சட்ட விரோதமாக அடிமாட்டு விலைக்கு வாரி வழங்கியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
 1991ம் ஆண்டு கர்நாடக நில மாற்றத்தடைச்சட்டத்தின்படி பெங்களுரூ வளர்ச்சிக் குழுமம் அறிவிக்கை செய்துள்ள நிலங்களை மாற்றுவதோ அடமானம் வைப்பதோ  மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை பெறக்கூடிய குற்றமாகும். ஆனால் ஒரு மாநில முதலமைச்சரே அதனை மாற்றி ஆணை பிறப்பித்துள்ளார் இதன்மூலம் நிலக்கொள்ளை கன ஜோராக நடைபெற்றுள்ளது. உதாரணத்திற்கு பானசங்கரி என்ற இடத்தில் 175 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் சட்ட விரோதமாக கையகப்படுத்தப்பட்டு அவரது மகன்கள் கூட்டாளிகளாக உள்ள நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதைப்போல இன்னும் ஏராளமான நிலப் பேரம்.
 ஏடியூரப்பாவின் அமைச்சரவை சகாக்கள் 13 பேர் மீது இன்று நிலப் பேர ஊழல் வழக்குகள். மாநில லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் யஹக்டே இந்த ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளார். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சுருட்டப்பட்டுள்ளது. செல்வாக்கு நிறைந்த ரெட்டி சகோதரர்கள் கனிம வளங்களை சூறையாடி வருகிறது தனிக்கதை இவ்வளவும் நடைபெற்ற பிறகும் எடியூரப்பா பதவியில் ஓட்டிக்கொண்டுள்ளார். கட்சித்தலைமையின் ஆசியும் எனக்கு உண்டு என்று அறிக்கை வேறு. எத்தகைய வெட்கக்கேடான நிலையில் பாஜக உள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கட்ட சுப்ரமணிய நாயுடு அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதால் பதவி விலகியுள்ளார். அனைவருமே பதவி விலக வேண்டாமா?
 அதேபோல உத்தர்காண்ட் மாநிலத்தில் ரி´கே´ல் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 ஏக்கர் நிலத்தை ரியல் எஸ்டேட் கொள்ளயர்களுக்கு வெறும் 3 கோடி ரூபாய்க்கு கைமாறியுள்ள முறைகேடுகள். இதில் மாநில முதல்வர் ரமேஷ் பொக்ரியாசிங் பாட்டிக் கொண்டுள்ளார்.
 ஊழல் புரிவதில் காங்கிரஸ், பாஜக இரண்டும் ஒன்றே வேறுபாடுகள் இல்லை. ஆனால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தேவை என உரத்துக் குரல் எழுப்புகிறது பாஜக ஊழல் கறை படிந்த அது பிரதான எதிர்க்கட்சி வேறு என்ன முரண்பாடு ! இரட்டை வேடம் ! வேடிக்கை ! வேதனை !

எனக்கு ஒரு ஏக்கம் உண்டு! - செ. சண்முகசுந்தரம்

 மியான்மரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் ஓபாமா ஆற்றிய உரையையும், கோவை பள்ளிக்குழந்தைகள் கொலை வழக்கில் கைதான மோகனகிருஷ்ணன் என்கௌன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியையும் படித்துவிட்டும், கேட்டுவிட்டும் அன்று இரவு உறங்கச் சென்ற பிறகு ஒரு வேடிக்கையான கனவைக் கண்டேன். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கப்படைகளால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும் பெரியவர்களும், பெண்களும் கடந்த சில ஆண்டுகளாக கொல்லப்படுவதற்குக் காரணமான ஜார்ஜ் புஷ்çrயும், பாரக் ஒபாமாவையும் தமிழக போலீசார் கைது செய்து, அவர்களை விசாரிப்பதற்காக ஆப்கானிஸ்தான் கொண்டு செல்ல சென்னை சென்ட்ரலில் ரயில் ஏறும்போது அவர்கள் தப்பித்துச் செல்ல, கூவம் கழிவை எடுத்து போலீசார் மீது வீச, பதிலுக்கு போலீசார் அவர்களைப் போட்டுத்தள்ளினர். நகைச்சுவையான கனவும் கூட.
 ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் கொத்து கொத்தாக மனித உயிர்கள் அமெரிக்கப்படைகளால் பறிக்கப்பட்டுக் கொண்டே வருவதை விக்கிலீக்ஸ் இணையதளம் அப்பட்டமாக வெளிப்படுத்தியதைக் கண்டு அமெரிக்காவோ, அதன் தலைவரோ எந்த வெட்கமும் அடையாமல், பிறிதொரு நாட்டிற்குச் சென்று வேறொரு நாட்டைப் பற்றிய மனித உரிமை மீறல்களைக் குறித்துப் பேச முடிகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து ஒபாமா பேசியவுடன் கைதட்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்து, அவர் பேசும் போது நாகரிகம் கருதி குறுக்கிடாமல் இருந்திருக்கலாம். அதன் பின்னர் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கலாமே! அதற்கானத் தார்மீகத் துணிவு நமது உறுப்பினர்களுக்கு இல்லை என்பது மட்டும் நிச்சயமான உண்மை.
 மீண்டுமொருமுறை தங்களின் என்கௌன்டர் சாகசத்தை கோவையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் தமிழக போலிசார். குழந்தைகளைக் கொன்ற குற்றவாளிகள் கொடூரமானவர்கள். சந்தேகமேயில்லை. அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும். கொலைக்கான முழுத்தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். அவர் கொல்லப்பட்டதனால் பல தகவல்கள், பல உண்மைகள் வெளி வர வாய்ப்பில்லாமல் போய் விட்டது. திரும்ப திரும்ப நாம் வலியுறுத்துவது ஒன்றுதான் எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
 உடனடியான மரணதண்டனை என்பது சமூகத்தின் பொது மனசாட்சிக்கு உகந்து நிறைவேற்றப்படுவதாக இந்த என்கௌன்டரை ஆதரிப்பவர்கள் கூறினாலும் சமூகத்தின் பொது மனசாட்சிப்படி உண்மை எப்போதும் அணிவகுப்பதில்லை. அறநெறிகளை சமூகத்தின் பொது மனசாட்சி எப்போதும் மதித்து நடக்கும் என்று கருதவும் முடியாது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் வருடந்தோறும் வருமானம் அதிகரித்துக் கொண்டே போவதையும், தேர்தல் காலங்களில் ஓட்டுக்குப் பணம் பெறும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதையும் கொண்டு குடியையும், லஞ்சத்தையும் தமிழக சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சி எனவும், அறப்பண்புகள் எனவும் ஏற்றுக்கொள்ள முடியுமா?
 பிரான்ஸ் நாட்டில் கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் கூட பழக்கமாக இருந்த பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைக் காண அதிகாலையிலிருந்தே மக்கள் தங்கள் குழந்தைகளோடு காத்திருந்ததை வரலாறு நமக்கு காட்டும். கைதிகள் துடிதுடித்து சாவதை பொது மக்கள் ரசித்திருக்கிறார்கள். அதே பிரான்ஸ் நாட்டில் இன்றைக்கு மரண தண்டனை ஒழிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் பிரெஞ்சு தேசத்து மக்களின் சமூக மனசாட்சி எப்படிப்பட்டது? அது கொஞ்சம் கொஞ்சமாக அறப்பண்புகளை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறது. கடந்த வருடம் அகதி இளைஞர்கள் இருவர் போலீசாரால் துன்புறுத்தப்பட்ட போது பாரீஸ் நகரமே பற்றி எரிந்தது. அநீதிக்கு எதிரான கோபம் அது. ஆனால் நமது நாட்டில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 6004 விசாரணைக் கைதிகள் காவல் நிலைய லாக்கப்புகளில் மரணமடைந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. சித்திரவதைக்குட்பட்டு படுகாயம் அடைந்தவர்களும், காயமடைந்தவர்களும் எத்தனை லட்சங்களோ?
 இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக ராஜபட்சேவும், ஜார்ஜ்புஷ்சும், ஓபாமாவும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், சர்வதேச நீதிமன்றத்தின் முன் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நீதிமன்றத்தின் படிகளை அவர்கள் கட்டாயம் மிதிக்க வேண்டும்.
 எனக்கு ஒரு ஏக்கம் உண்டு!
 கேரளத்தின் நக்ஸலைட் தலைவர் வர்க்கீஸ் சுட்டுக்கொல்லப்பட்டு 40 ஆண்டுகள் கழிந்தபின் ராமச்சந்திரன் நாயர் மூலம் லெட்சுமணன் என்ற காவல் உயரதிகாரிக்கு ஆயுள் தண்டனை கிடைத்ததுபோல, தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் நடக்கும் என்கெளன்டர் வர்க்கீஸ்களுக்கு ராமச்சந்திரன் நாயர்கள் கிடைக்க வேண்டும். பல லெட்சுமணன்கள் நீதிக்கூண்டேற வேண்டும்.
 நீதியின் தடம் பதியாத இடமேது? காலமேது?

வீதியில் இறங்காமல் விடியாது - இரா. விஜயகுமார், அரியலூர்

40% ஊதிய உயர்வு வென்றெடுத்த மகிழ்ச்சியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தனது 22வது அகில இந்திய மாநாட்டை (60வது ஆண்டு வைர விழா) இந்திய தலைநகரான புதுடெல்லியில் 2010. நவம். 20 - 24 வரை நடத்தியுள்ளது. 2007-ல் கான்பூரில் நடைபெற்ற மாநாட்டில் நம்பிக்கையுடன் 40% ஊதிய உயர்வை வென்றெடுப்போம் என்ற அறைகூவலை வென்றெடுத்த மாநாடாக அமைந்தது. கான்பூரின் மாநாட்டிற்கும், டெல்லி மாநாட்டிற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசங்கள் என்று அசைபோட்டு பார்த்தால் ஊதிய உயர்வு, வீட்டு வசதி கடன் உயர்வு, மூன்றாம் நிலை ஊழியர்கள் 5000 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற பெருமையோடு கொண்டாடி முடித்தாகிவிட்டது.
 இனி நாம் அடுத்த ஊதிய உயர்விற்கு மட்டுமே போராட ஆயத்தமாக வேண்டும் அதுவும் 2012ல், அதுவரை நாம் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் நிலையிலா உள்ளோம் என்பதை பரிசீலிப்போம். 1951 தொடங்கி பலகட்ட போராட்டத்தை ஊழியர்களின் நலன் கருதி போராடி வெற்றி பெற்றுள்ளோம், 1990dகளுக்கு பின் உலகமய, தாராளமய, தனியார்மய காலத்தில் உள்ளோம், இக்காலத்தில் நமது போராட்ட வடிவங்கள், தற்போது தொழிலாளர்கள் அனுபவிக்கும் நலன்களை தக்கவைப்பதற்கும், பாதுகாப்பதற்குமான போராட்டமாக மாறிவருவதை நாம் உற்றுநோக்க வேண்டும். இப்பின்னணியில் நமது ஊதிய உயர்வு வெற்றி. அதுவும், 40% எவ்வளவு பெரியது என்பதை இன்று அதன் பலன்களை அனுபவிக்கும் போது நன்கு உணர முடிகிறது. இதேபோல் AIIEA தனது ஊழியர்களுக்கு மாநாடுகளில் அறைகூவல் விடுக்கும்; அதை வெற்றிகரமாக்கும் என்று நடைமுறையில் பலமுறை நிருபித்துள்ளது.
 இன்று நாம் அனுபவிக்கும் பல பலன்களான PF, Grauity பென்சன் போன்ற பலவும் சோவியத் ரஷ்யாவில் அன்றைய சோசலிச அரசு தொழிலாளர்களுக்கு வழங்கியதை தொடர்ந்து பலநாடுகளில் (இந்தியா உட்பட) பலகட்ட போராட்டங்களுக்கு பிறகே அமலாகியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
 உலகளவில் மிகப்பெரிய பொருளாதார, நெருக்கடிச் சூழலில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர், தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது, புதிய ஊழியர் நியமனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 77% மக்கள் ஒரு நாளைக்கு ரூ. 20/dக்கும் குறைவான ஊதியத்தை பெறுகின்றனர். ஆனால் நமது முன்னாள் நிதியமைச்சர் இந்த அறிக்கை தவறானது என்கிறார் எதார்த்தத்தில் இந்திய மக்கள் தொகையில் 52% விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்துகின்றனர். (64 கோடி மக்கள்) அவர்களின் ஒட்டுமொத்த GDP பங்களிப்பு ஆண்டுக்கு 17% என்றால் சராசரியாக 77% மக்கள் பட்டினி வயிற்றோடுதான் வாழ்கின்றனர்.
 முறைசாரா தொழிலாளர்கள் மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஒருநாள் கூலியான ரூ. 70 பெறுவதற்கு போராட்டங்கள் நடத்துகின்றனர். உலகம் வேறாக இருக்கும்போது எல்.ஐ.சி. ஊழியர்கள் மட்டும் 40% ஊதிய உயர்வை வென்றெடுத்து வாழ்வது தனித்தீவில் வாழ்வதற்கு சமமானது என்பதை நமது 22வது அகில இந்திய மாநாட்டு அறிக்கை சரியாக சுட்டிக்காட்டியுள்ளது, அடுத்து வீட்டுவசதிகடன் இரட்டிப்பு என்பதோடு ஒப்பிட்டால் வயிற்றை நிரப்பவே முடியாத மக்கள் வாழும் நாட்டில் கூடுதலான வீட்டுவசதி கடன் என்பதை பொருத்தி பார்ப்பது அவசியம்.
 உலகளவில் வேலையிழப்பு பல லட்சம் என்று ILO அறிக்கை விட்ட சூழலில், அரசுத்துறையிலே 40% ஊழியர்கள் எவ்வித பணி பாதுகாப்புமின்றி நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் பணியில் இருக்கும் சூழலில், 5000 புதிய பணி நியமனம் எல்.ஐ.சியில் சாத்தியமாகியுள்ளது. இவையாவும் AIIEA என்ற தீவிரமான போராட்ட குணம் கொண்ட ஒரு தொழிற்சங்கத்தால் மட்டுமே முடியும் என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளும் தருவாயில் நமது தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் ஆபத்தான பிரச்சனைகள் பலவற்றை மறந்துவிடக் கூடாது என்பதை நினைவுபடுத்தும் மாநாடாகவும் அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.
 15வது பாராளுமன்ற உறுப்பினர்களில் 300க்கும் மேல் கோடீஸ்வரர்கள், அவர்களின் வர்க்கபாசம் யாருக்கு பாடுபடும் என்பது தேவையற்ற சந்தேகம். ஆகவே தான் 2009d10 ஆண்டு மட்டும் 5,18,000 கோடி ரூபாய் வரித்தள்ளுபடி (முந்தைய ஆண்டில் 4,10,000 கோடி) செய்துள்ளது. 52% மக்கள் நம்பி வாழும் விவசாயத்திற்கு ஒட்டுமொத்த GDP யிலிருந்து 2% மட்டுமே ஒதுக்குகிறது. அதற்கு பதிலாக 17% GDPஐ எடுத்துகொள்கிறது. உற்பத்தியான உணவு தானியங்களை பதப்படுத்தி, பாதுகாக்க மறுத்து அவற்றை வீணாக்குகிறது. ஒரு வருடத்திற்கு 3 மில்லியன் டன் உணவு தானியத்தை எலிகளுக்கு உணவளிக்கும் மத்திய அரசு வீணாகும் உணவு தானியத்தை ஏழை மக்களுக்கு வினியோகிக்க மறுக்கிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டால் கோபம் வருகிறது. தொழிளாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதை கண்டித்தால் கைதட்டி வரவேற்கிறது.
 ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய மறுக்கும் மத்திய அரசு 2009 வருடம் ஏப்ரல் 1 முதல் ஜுன் 30 வரை ரூ. 15,64,114.96 கோடிக்கு ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 2010ம் வருடம் அதே காலகட்டத்தில் ரூ. 24,55,987.26 கோடியாக ஆன்லைன் வர்த்தகம் வளர்ந்துள்ள வித்தியாசமே. 2009d ஆண்டில் 26 பில்லியனர்கள் இருந்த இந்தியவில் 2001ல் 52ஆக உயர்ந்தமைக்குக் காரணம் என்ற உண்மையையும் அது மறைக்கிறது. ஆகவே 110 கோடி மக்கள் வாழும் நாட்டில் 52 பேரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 25% உள்ளது. இவையாவையும் மறைத்து நாட்டிற்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படுத்தும் நாசகர செயல்களை புரிந்து கொள்ள வேண்டிய தருவாயில் உள்ளோம்.
 அனைத்து தொழிலாளர்களுக்கும் சென்று சேர வேண்டிய பலன்கள் யாவும் சிலர் மட்டுமே தட்டிப் பறிக்கின்றனர். என நாடகமாடும் ஆட்சியாளர்கள் தொழிலாளர்களுக்கும், முறைசாரா தொழிலாளர்களுக்குமிடையே பிரச்சனையை உண்டு செய்கிறது தனது தவறை மறைக்கவும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தட்டிக்கழிக்கவும் செய்கிறது, சிலர் மட்டுமே என்று ஆட்சியாளர்கள் குறிப்பிடுவது மத்திய அரசு ஊழியர்களை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
 தொழிலாளி வர்க்கத்தை எந்த வகையிலும் சுரண்டலாம் என்ற எண்ணம் கொண்ட பண முதலைகள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில்தான் நாம் நமது போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இடதுசாரிகள் தவிர வேறு எவரும் முன்னுக்கு வரமாட்டார்கள், இடதுசாரிகளை வலுப்படுத்தாமல் எதிர்கால போராட்டத்தில் நாம் வெல்ல முடியாது என்பதை உணர்வோம் இடதுசாரிகள் மீது ஊடகங்கள் ஏற்படுத்தும் கலங்கத்தை நமது பிரச்சாரத்தின் மூலம் முறியடிப்போம்.
 புதிய பென்rன் திட்டத்தை தன்னிச்சையாக அறிமுகப்படுத்தும், மத்திய அரசின் போக்கை கண்டிக்கிறோம், அதன் பாதகவிளைவை விளம்பரபடுத்துவோம், தொழிற்சங்க உரிமை இல்லாததன் விளைவுகளை பலதுறைகளில் நாம் எதிர்நோக்குகிறோம். ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கத்தின் குரலை, பிரான்சிலும் மற்ற நாடுகளிலும் வீதியில் இறங்கி தங்களது போர்க்குரல்களை ஒலிக்க துவங்கிவிட்டனர். இந்தியாவிலும் நாம் தயாராக வேண்டிய காலகட்டத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.
 அகில இந்தியளவில் AIIEA உறுப்பினர்கள் இன்றைய தேதியில் 65,000 பேர் மட்டுமே. ஆனால் இந்த எண்ணிக்கையை கொண்டு LPG கொள்கையை எதிர்த்த போராட்டத்தில் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராடி வருகிறது. இச்சிறிய எண்ணிக்கை போதுமானதா என்றால் நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது போதுமானதல்ல என்பதே, வேறு எப்படி இக்கொள்கைகளை எதிர்த்து போராடி வருங்காலத்தில் நமக்கு முன்னே இருக்கக்கூடிய சவால்களை எதிர்கொள்ளப் போகிறோம். நமது முகவ நண்பர்கள் 13 லட்சம் பேர், பாலிசிதாரர்கள் 30 கோடி பேர், தோழமை தொழிற்சங்கங்கள் என்று அனைவரையும் ஒன்று திரட்டி, ஒன்றுபட்ட தொழிலாளி வர்கத்தின் குரலாக மாற்றாமல் பொதுத்துறைகளை பாதுகாக்க முடியாது, தொழிலாளர் நலன்களை பாதுகாக்கவும், வென்றெடுக்கவும் முடியாது என்ற எதார்த்தத்தை புரிந்து கொள்வோம். வீதியில் இறங்காமல் விடியாது என்பதை உரக்கச் சொல்வோம்.

வாருங்கள் தோழர்களே வரலாற்றை படைப்போம்! - RED

AIIEAவின் 60 வது ஆண்டில், அதன் 22வது அகில இந்திய மாநாடு புதுடெல்லியில் நவம்பர் 20 முதல் 24 வரை 5 நாட்கள் நடைபெற்றது. நமது கோட்டத்தின் சார்பாக பிரதிநிதிகள் மாநாட்டில், 7 பிரதிநிதிகளும் 11 பார்வையாளர்களும் பங்கேற்றனர்.
பேரணி : நவம்பர் 20 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வடக்கு மண்டல அலுவலகமுள்ள கன்னாட் பிளேசிலிருந்து பேரணி தொடங்கியது. 22வது மாநாட்டை குறிக்கும் வகையில் 22 மகளிர் தோழர்கள் AIIEA வின் செங்கொடியுடன் முன்னே அணிவகுக்க மண்டலம் கோட்டம் வாரியாக தோழர்கள் தங்கள் பதாகைகளுடன் கொடியேந்தி முழக்கங்களுடன் அணிவகுத்தனர். பேரணியில் வழி நெடுகிலும் பல்வேறு அமைப்புகளின் தோழர்கள் வாழ்த்தொலி எழுப்பி உற்சாகமூட்டிட, பேரணி 5.30 மணிக்கு மாநாட்டின் துவக்க கூட்டம் நடைபெறும் டெல்லியின் மிகப்பெரிய ராம்லீலா மைதானத்தை சென்றடைந்தது.
துவக்க விழா : AIIEA தலைவர் தோழர் அமானுல்லாகான் AIIEA கொடியை தோழர்களின் எழுச்சிமிகு முழக்கங்களுக்கு இடையே பறக்க விட்டார். அதைத் தொடர்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் AIIEAதலைவர் தலைமையில் பொதுக்கூட்டம் தொடங்கியது. மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் தோழர். M.K. ரெய்னா வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டை தொடக்கி வைத்து திரிபுரா மாநில முதல் அமைச்சர் தோழர் மாணிக் சர்க்கார் உரை ஆற்றினார்.
 பெரும்பான்மை மக்களை பாதித்துள்ள விலை ஏற்றம் குறித்தும், உணவுப்பாதுகாப்பு குறித்தும் அவர் கருத்துக்களை முன்வைத்தார், பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, இடதுசாரி மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து இடது சாரிகளை வலுப்படுத்த தொடர்ந்து விரிவான இயக்கம் நடத்த வேண்டுகோள் விடுத்தார்.
BSNL ஊழியர் சங்க தலைவர் தோழர் V.A.N.. நம்பூத்ரி அவர்கள் பொதுத்துறைகள் எதிர்நோக்கும் சவால்களையும், 2G ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றியும் எடுத்துரைத்தார்.
 அகில இந்திய மாநில அரசு ஊழியர்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் முத்து சுந்தரம் அவர்கள் அனைத்துத்துறை ஊழியர்களும் இணைந்து போராடுவதற்கான அவசியத்தையும், ஆதரவையும் எடுத்துரைத்தார்.
 BEFI வங்கி ஊழியர் அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர். பிரதீப் பிஸ்வாஸ் அவர்களும், CITU வின் பொதுச்செயலாளர் தோழர். தபன்சென் MP, அவர்களும் தொழிலாளி வர்க்கம் எதிர்நோக்கியுள்ள சவால்களையும், கடமைகளையும் விளக்கினர்.
 AIIEA பொதுச்செயலாளர் தோழர் K. வேணுகோபால்  அவர்கள் நமது ஊதிய உயர்வு ஒப்பந்தம் பற்றியும், புதிய பென்சன் திட்ட பாதகங்கள் குறித்தும் நிதித்துறை சங்கங்களின் ஒத்துழைப்பு மற்றும் பிற அனைத்து சங்கங்களில் கூட்டு செயல்பாட்டின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.
 தோழர் அனில்பட்நாகர் அவர்களின் நன்றியுரையுடன் மாநாட்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நிறைவுற்றது. பேரணியிலும் துவக்க விழா மாநாட்டிலும் 350 பெண் தோழர்கள் உட்பட 6000 தோழர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய அரங்கமாகவும், வரலாற்று சிறப்புமிக்க அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்ற அரங்கமாகவும் விளங்கிய தோழர் ஜோதிபாசு நகரில் அமைந்திருந்த ஸ்ரீபோர்ட் அரங்கில் (Sri Fort Auditorium)  நவம்பர் 21 முதல் நவம்பர் 24 வரை 4 நாட்கள் பிரநிதிகள் மாநாடு நடைபெற்றது. 564 பேர் (539 + 25 பெண்கள் ) பிரதிநிதிகளாகவும், 940 பேர் (843 ஆண்கள் + 97 பெண்கள் ) பார்வையாளர்களாகவும் மொத்தத்தில் 1382 ஆண்களும் 122 பெண் தோழர்களுமாக 1504 பேர் பங்கேற்றனர். இம்மாநாட்டு அரங்கில்தான் கியூபா அதிபர் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள் NAM அமைப்பின் தலைமைப் பொறுப்பை தன்னிடமிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் ஒப்படைத்தார் இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க அரங்கில் AIIEA வின் 60வது ஆண்டில் 22வது மாநாடு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 60ம் ஆண்டு மணிவிழாவில் AIIEA வின் ஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான தோழர் சந்திர சேகர்போஸ், (வயது 88) உட்பட தோழர்கள் N.M. சுந்தரம், B.S. சர்மா, R.G. மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களுடன் கூடிய வாழ்த்துரையை வழங்கினார்.
 மாநாட்டு நிகழ்வுகள் : AIIEA செயற்குழு சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட 84 பக்க அறிக்கை (28 பக்கங்கள் சர்வதேச நிகழ்வுகள் + 28 பக்கங்கள் தேசிய நிகழ்வுகள் +28 பக்கங்கள் நமது அரங்க நிகழ்வுகள்) மீது 5 பெண் தோழர்கள் உட்பட 54 தோழர்கள் விவாதம் மேற்கொண்டனர். பொதுச்செயலாரின் தொகுப்புரைக்குப்பின் அறிக்கை நிறைவேறியது.
 12/2007, 12/2008, 12/2009 ஆண்டுகளுக்கான AIIEA வின் வரவு செலவு அறிக்கைகள், இன்சூரன்ஸ் ஒர்க்கர் இதழ், வரவு செலவு கணக்கு மற்றும் பொது இன்சூரன்ஸ், நிலைக்குழுவின்  வரவு செலவு கணக்குகளும் ஏகமனதாய் அங்கீகரிக்கப்பட்டது.மாநாட்டில் 19 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேறின.
1. இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முலதன உயர்வை எதிர்த்தும் 2. றூணூளீ பொதுத்துறை கம்பெனிகளை இணைத்திட வலியுறுத்தியும், 3. ஸிணூளீ யில் புதிய பணி நியமனத்தை வலியுறுத்தியும், 4. எல்..சியில் பதவி உயர்வுக் கொள்கையில் சீர்திருத்தம் கோரியும் 5. றூணூளீ யில் புதிய பணி நியமனம் கோரியும், 6. எல்..சி ஊதிய உயர்வு ஒப்பந்தம் பற்றியும், 7. மகளிர் நிலை மேம்படுத்துவது பற்றியும் 8. முறைசாரா தொழிலாளர்களுக்கான உரிமைப் பற்றியும், 9. பட்டியல் இனத்தவர்கள் மேம்பாட்டுக்காகவும், 10. அரசின் பென்சன் கொள்கை பற்றியும், 11. நமது ஓய்வூதிய திட்டத்தில் முன்னேற்றங்கள் கோரியும் 12. புணூணூசிபு சங்க அங்கீகாரம் கோரியும், 13. கூட்டு பேர உரிமையை வலியுறுத்தியும், 14. றூணூளீ யில் பதவி உயர்வு கொள்கை குறித்தும், 15. தீவிரவாத தாக்குதல்களை கண்டித்தும், 16. விலைவாசி உயர்வு குறித்தும், 17. வீட்டு வசதிக் கடன் திட்டம் பற்றியும், 18. பகுதி நேர ஊழியர் பிரச்சனைகளுக்கு தீர்வு கோரியும் 19. அமைப்பு (நுrORGANISATIONS) குறித்தும், ஆக மொத்தம் 19 தீர்மானங்கள் ஏகமனதாய் நிறைவேறின.
 புதிய பொறுப்பாளர்கள் தெரிவு : தலைவராக தோழர் அமானுல்லாகான் அவர்களும், பொதுச் செயலாளராக தோழர். வேணுகோபால் அவர்களும், பொருளாளராக தோழர். ரவி அவர்களும் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டனர். நமது கோட்ட பொதுச்செயலாளர் தோழர். ஆர். புண்ணியமூர்த்தி செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். நமது மண்டல தலைவர், தோழர் குன்னி கிருஷ்ணன் துணைத் தலைவர்களுல் ஒருவராகவும், மண்டல செயலாளர் தோழர். சுவாமிநாதன் துணைச் செயலாளர்களில் ஒருவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். மண்டல பிரதிநிதியாக தோழர். கிரிஜா தெரிவு செய்யப்பட்டார்.
 மாநாட்டு சிறப்பு மலர் : மலரை தோழர் N.M. சுந்தரம் வெளியிடடார்.
நூல் வெளியீடு : AIIEA தலைவர் தோழர் அமானுல்லாகான் அவர்களால் எழுதப்பட்டுள்ள Understanding financial crisis என்ற நூலை தோழர் A.K. பத்மநாபன் வெளியிட தோழர் தோழர். சந்திரசேகர் போஸ் பெற்றுக்கொண்டார்.
 இன்சூரன்ஸ் ஒர்க்கர் : மாநாட்டு வரவேற்புக் குழு சார்பாக ரூ. 1 லட்சம் இதழ் மேலாளர் தோழர் டேவிட் அவர்களிடம் வழங்கப்பட்டது. இன்னும் சில மாதங்களில் இதழ் பெங்களூரில் இருந்து வெளியிடப்பட மாநாடு ஏற்பளித்தது. அனைவரும் இன்சூரன்ஸ் ஒர்க்கர் வாங்குவதில் (100%) பிற சக சங்க தோழர்களையும் வாங்கி படிக்கவைப்போம்.
 போபாலுக்காக நிதி உதவி : போபால் விr வாயு விபத்தில் பாதிக்கப்பட்ட, மரணமுற்ற குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி தொடர்ந்து போராடி வரும் சாதனா காரணி அமைப்புக்கு உதவிட போபால் கோட்ட சங்கத்திற்கு ரூ. 1 லட்சம் மாநாடு சார்பாக வழங்கப்பட்டது.
 உலக தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை (Trade Union International) : வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் துறை சங்கங்களில் கூட்டமைப்பாக TUI யுடன் இணைந்திட (Affiliation) மாநாடு முடிவெடுத்தது.
கலை நிகழ்வுகள் : ஜன் நாட்டிய மிஞ்ச், கேரள சேர்ந்திசை குழு, பஞ்சாப் அரசின் பங்க்ரா நடனக் குழு, பிரபல ஹைதர் & ஹாசர் நிஸாம் குழுவினரின் சூஃபி வகை காவானி (Qawwalis in sufi style) பாடல்கள் இந்திய கலாச்சாரத்தை போற்றுவதாய் அமைந்தன.
 நன்றியுரை : தோழர் அமானுல்லாகான் நிறைவுரைக்குப்பின் தோழர் சன்யால் மாநாட்டு தொண்டர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி கூற தோழர்களின் எழுச்சி மிகு முழக்கங்களுடன் மாநாடு 24ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நிறைவு பெற்றது.
AIIEA மணி விழா ஆண்டில் உடனடி வேலைத்திட்டம் :
 2011ம் ஆண்டை அமைப்பை மேலும் வலுப்படுத்தும் ஆண்டாக (Year of organizations)  அனுசரிக்க மாநாடு முடிவு எடுத்தது.
 மாநாட்டில் வந்த விவாதங்களின் அடிப்படையில் கீழ்கண்ட வேலைத்திட்டம் முன் வைக்கப்பட்டது.
1.BSNL ஊழியர்கள் நிறுவனத்தை பாதுகாத்திட 3 நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் நடத்த உள்ளன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 1.12.2010 அன்று பொதுத்துறை பங்கு விற்பனை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படும் அன்று மதியம் இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். (ஆர்ப்பாட்டம் நடைபெற்றது)
2. வீட்டு வசதிக் கடன் திட்டத்தில் ஊழியர்களின் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் களையப்பட வலியுறுத்தி 21.12.2011 அன்று மதிய இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
3. 19.1.2011 அன்று ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமய தினத்தை ஒட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு, மெழுகு வர்த்தி ஏற்றுதல் உட்பட நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
4. 15.2.2011 முதல் 28.2.2011 வரை எல்..சியில் வலிமை, வளமை குறித்தும், பொதுத்துறைகளை காப்பாற்ற வலியுறுத்தும் துண்டறிக்கைகள் (Phamplets)  பொதுமக்கள் மத்தியில் வினியோகிக்கப்படும்.
5. 23.2.2011 அன்று பொதுத்துறை பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, தொழிற்சங்க உரிமைகள் உட்பட பல கோரிக் கைகள் வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி தொழிலாளர் பேரணி நடைபெறும். எனவே அதற்கு முன்பாக நாடு முழுதும் முக்கிய நகர் மையங்களில் கருத்தரங்கம் நடத்தப்படும். 23.2.11 அன்று மதிய இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும்.
6. புதிய பணி நியமனம் கோரியும் (பகுதி நேர ஊழியர் பிரச்சனைக்கு தீர்வு மற்றும் தற்காலிக ஊழியர் நிரந்தரமாக்கல்), சங்க அங்கீகாரம் கோரியும் இயக்கத்தை திட்டமிட AIIEA செயலகத்துக்கு அதிகாரம் தரப்பட்டது.
7. 13.5.2011ல் GIC தேசியமயதினம் கொண்டாடப்படும்.
8. ஜனவரி 2011 முதல் ஜுலை 2011 வரை AIIEA வின் வைர விழாவை அர்த்தமுடன் அனுசரிக்கும் வகையில் (Year of Eduction)
அனைத்துக்கிளைகளிலும், கோட்ட அலுவலகத்திலும் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் தொழிற்சங்க வகுப்பு நடத்தப்படும். இதில் AIIEA வரலாறு மற்றும் காப்பீட்டு துறை எதிர்நோக்கும் சவலால்கள் பற்றி வகுப்புகள் எடுக்கப்படும்.
) 60 ஆண்டுகள் நிறைவுறும் 1.7.2011 அன்று AIIEA எல்லா மையங்களிலும் கொடி ஏற்றப்படும்.
உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் AIIEA குடும்ப சங்கம விழாக்கள் உரிய முறையில் திட்டமிட்டு நடத்தப்படும். கலை நிகழ்ச்சிகள், சுவரொட்டி கண்காட்சி, வினாடி வினா நிகழ்ச்சிகள் போன்று திட்டமிடப்படும்.
) AIIEA விற்கான Website 1.7.2011ல் செயல்பட தொடங்கும் அதில் AIIEAவின் சுருக்கமான வரலாறு தரப்படும்.
கவனத்திற்குரிய மாநாட்டு விவாதங்கள் d விடைகள் d தகவல்கள் d வழிகாட்டல்கள் மற்றும் பல...
# Whlesome, handsome, Outstanding என்பதை குறிக்கும் வகையில் நாம் பெற்ற ஊதிய உயர்வை WHO என்று GIC தோழர்கள் கூறுகிறார்கள். WHO என்பதற்கான விடையாக AIIEA நிற்கிறது!
# AIIEA  வின் வரலாற்றிலும், எல்..சியின் நிறுவன வரலாற்றிலும் இந்த ஊதிய உயர்வு மிகச் சிறப்பானதாகும்; எத்தனை சதவீதம் என்பதை அவரவரே கணக்கிட்டு கொள்ளுங்கள் என்பதே அறிவுறுத்தல் ஆகும்.
பொதுத்துறை பாதுகாக்கப்பட, காப்பாற்றப்பட இடதுசாரி சக்திகள் வலுப்படுத்தப்பட வேண்டும்... மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் நடைபெறும் தேர்தல் அம்மாநிலங்கள் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல... நாடு முழுதும் உள்ள தொழிலாளி வர்க்க நலன் சம்பந்தப்பட்டதாகும் எனவே இதற்கான விவாதங்கள் நாடு முழுதும் நடத்தப்பட வேண்டும்.
கேரள இடதுசாரி அரசு தனது இந்த ஆட்சிக்காலத்தில் நலிந்து போன 8 ஆலைகளை பொதுத்துறையில் புனரமைத்துள்ளது. 2 புதிய பொதுத்துறை தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளது. தற்போது இவை 240 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குகின்றன.
முறைசாரா தொழிலில் உள்ள பெண்களுக்கு ஒரு மாத சம்பளத்துடன் விடுப்பும் கேரள அரசால் வழங்கப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்பில் 50% மகளிர் இடஒதுக்கீடு அமலாகிறது. கேரளாவில் 65%  மக்களுக்கு ரூ.2 விலையில் மாதம் தோறும் 35 கிலோ அரிசி PDS திட்டத்தில் தரப்படுகிறது.
இன்றைய நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக இடதுசாரி கட்சிகள்தான் வரவேண்டுமே தவிர, அதை BJP க்கு விட்டுத்தரக்கூடாது . ஏனெனில் பொருளாதார கொள்கையில் இருவரும் ஒருவரே... உலகம் முழுதும் இடதுசாரி அரசுகளை கவிழ்ப்பதில் CIA வின் பங்கை நாம் அறிவோம். அந்த  கடமையை இங்கே இடதுசாரி முகமூடி அணிந்து மாவோயிஸ்டுகள், மார்க்ஸிடுகள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்ட மார்க்ஸிஸ்ட் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பகலில் மம்தா கட்சியினராகவும், இரவில் மாவோயிஸ்டுகளாகவும் இவர்கள் செயல்படுகிறார்கள்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் முன்னணி பங்கு வகித்து செயல்படும் SZIEF ற்கு பாராட்டு தெரிவித்த AIIEA மாநாடு, மகளிர் அரங்கிலும் ஒருங்கிணைப்புகுழுவின் செயல்பாடுகளை பாராட்டியது.
இன்று பொதுத்துறைகளில் முக்கிய எதிரியாக IFC எனப்படும் சர்வதேச நிதிமூலதனம் செயல்படுகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியுற்ற போது, இந்தியாவை காப்பாற்றியது பொதுத்துறையில் செயல்படும் வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களுமே, இன்று IFC, பொதுத்துறையை விழுங்கி ஏப்பம் விட ஒபாமா வடிவில் வந்து கொண்டிருக்கிறது. எச்சரிக்கையுடன் செயல்படுவோம்.
பொதுத்துறை பாதுகாப்பு இயக்கத்தில், பொதுத்துறை இன்சூரன்ஸ் பாதுகாப்பு இயக்கத்தில் முகவர்கள், பாலிசிதாரர்கள் உட்பட பொதுமக்களை இணைப்போம். பத்து லட்சம் முகவர்கள், 30 கோடி பாலிசிதாரர்கள் கொண்ட பெரும்படை ஒன்றே போதும், நம்மால் இன்தியாவை பாதுகாத்துவிடலாம், தனியார் நிறுவனங்களை முறியடித்து விடுவோம்!
அமெரிக்காவின் ஆண்டு GDP 1.5% ஆகும். 9.5% பேர் வேலைவாய்ப்பற்று உள்ளனர். இந்தியாவில் றூம்P 8% ஆகும். இங்கே வேலை வாய்பற்றோர் 9.4% ஆகும். ஆனால் அங்கே மக்கள் தொகை..... கோடி, இங்கே 120 கோடி பேர்.
உலகத்தின் 10 டாலர் பிலியனர்களில் 4 பேர் இந்தியாவில் உள்ளனர். 2008ல் 27 பேர் 2009ல் 52 பேரும், 2010ல் இது 69 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்திய மக்கள் 77% பேர் அதாவது 88 கோடி மக்கள் தினசரி ரூ. 20 வருமானம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள்.
இந்திய மக்கள் அனைவருக்கும் மாதம் தோறும் 35 கிலோ அரிசி அல்லது கோதுமை ரூ. 2 விலையில் கொடுக்க அரசுக்கு ஏறக்குறைய 75,000 கோடி ரூபாய் ஆகும். இதை நினைத்தால் நிறைவேற்ற அரசால் முடியும்.
# FCI கிடங்குகளில் எலிகளை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தும் அரசு, உச்சநீதிமன்ற திட்டுதலுக்கு பிறகும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று எதற்கும் வாய்திறக்காத (2G ஊழல், காமன்வெல்த் ஊழல்) பிரதமர் பேசினார்.
செல்வந்தர்களுக்கு 5,80,000 கோடி ரூபாய் சலுகை வழங்கும் மத்திய அரசு, இந்நாட்டு ஏழை மக்களுக்கு 75,000 கோடி ரூபாய் செலவிட முன்வராதது ஏன்?
# UPA I அரசுக்கும் UPA II அரசுக்கும் உள்ள வேறுபாடு இடது சாரி ஆதரவு அவசியம் எனில் என்ன நிகழும் என்பதற்கு உதாரணம் ஆகும். இரண்டாவது ஆட்சிக் காலத்தில் 40,000 கோடி ரூபாய் அளவிற்கு பொதுத்துறை விற்கப்பட்டது, பெட்ரோல் விலை நினைத்தபோதெல்லாம் ஏற்றப்படுகிறது.
முதல் ஆட்சியில் நூறு நாள் வேலை வாய்ப்பு மூலம் 3.7 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அட்டை தரப்பட்டது. பெட்ரோல் விலை கட்டுப்பாட்டில் இருந்தது... பொதுத்துறை 5 ஆண்டு முழுதும் பாதுகாக்கப்பட்டது.
ஒட்டு மொத்த மக்களுக்காக போராடக்கூடியது தொழிலாளி வர்க்கம். ஆனால் முதலாளிய ஏகாதிபத்தியம் சொகுசாக உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சும்; கவர்ச்சிகரமாக உழைப்பைச் சுரண்டும்; கொலை d கொள்ளையை கொள்கையாக கொண்டது; நேரடியாக யாருடனும் மோதாமல் பல பெயர்களில் மோதும்... ஒப்பந்த, தற்காலிக வேலை முறையை ஊக்குவிக்கும்... இந்தியாவில் 1981d82ல் மொத்த உற்பத்தி பொருளின் மதிப்பில் 32% கூலியாக தரப்பட்டது; ஆனால் அது தற்போது 10% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
இன்று பிரான்சில் மாபெரும் தொழிலாளர் எழுச்சி ஏற்பட்டுள்ளது; தொழிலாளிகளுக்காக மாணவர்கள் களம் இறங்கினர். பிரிட்டனிலும் போராட்டம் தான். இப்படி பல நாடுகளில், இந்திய தொழிலாளி வர்க்கம் மட்டும் விதிவிலக்கல்ல செப்.7ல் 10 கோடி பேர் பங்கேற்றனர். பிப்ரவரி 23 பாராளுமன்றம் நோக்கிய பேரணி இதை எதிரொலிக்கட்டும்!
வங்கித்துறையில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருந்த SBI தற்போது ஏறக்குறைய தனியார் மயமாகிவிட்டது. 51% மட்டுமே அரசு பங்காகும், இதில் 2% கைமாறினால் தனியார் மயமாகி விடும்.
இன்று 12% தொழிலாளர்களே உற்பத்தி துறையில் (Manufacture) உள்ளனர். தொழிலாளி வர்க்கத்தில் 10% பேர் மட்டுமே தொழிற்சங்கங்களில் உள்ளனர்.
ஒபாமா தன் நாட்டு பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளத்தான் இந்தியா வந்தார்; அமெரிக்காவுக்குத்தான் இந்தியா தேவையே தவிர, இந்தியாவிற்கு அமெரிக்கா தேவையில்லை... ஆனாலும் ஒபாமாவை விட மூத்தவரான மன்மோகன்சிங்கை ஒபாமா ஏதோ மகனை தட்டிக் கொடுப்பது போல தட்டிக் கொடுப்பது சகிப்பதாக இல்லை.
AIIEAவின் ஒவ்வொரு மாநாடும், ஏதேனும் ஒருவகையில் வரலாற்றுச்சிறப்பு மிக்க மாநாடாக - வெற்றி மாநாடாகவே அமைந்துள்ளன.
 மீடியா முழுதும் தொழிலாளி வர்க்கத்தை, பொதுத்துறை அமைப்புகளை கேவலப்படுத்த துடிக்கின்றன நமக்கு Food Coupon கொடுத்த போது "Your Money, Their Lunch" என்று எழுதின (The Mirror) ""கட்டுப்பாட்டை கொணர இவ்வளவு செலவா'' என்றன, AIIEA அன்றும் இன்றும் என்றும் ஊழியர்கள் எல்லா வகையிலும் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மையை கடைபிடிக்கவே போதித்து வருகிறது. தனியார் மய போட்டியை எதிர்கொள்ள ஊழியர்களை தயாரித்ததே AIIEA தான். அதனால்தான் வங்கி உட்பட பிறதுறையை தனியாருக்கு திறந்துவிடப்பட்ட போதும், LIC யும், GIC யும் முற்றிலும் பொதுத்துறையாக உள்ளது.
 அன்று 1டி கோடி கையயழுத்து இயக்கம் நடத்தியது; இன்று பிரதமருக்கு 18 லட்சம் தபால் அட்டைகள் பாலிசிதாரர்களை அனுப்பச் செய்தது. மற்றும் 121 ராஜ்ய சபா உறுப்பினர்களை சந்தித்தது; 340 லோக்சபா உறுப்பினர்களை சந்தித்தது.  எந்நேரமும் தாக்கலாக உள்ள 2 திருத்த சட்ட மசோதாக்களை எதிர்த்திட விழிப்புடன் உள்ளது.
 LIC யில் 3, 4ம் பிரிவு ஊழியர் 67508 பேர், இதில் நமது சங்கத்தில் 77.78%, எச்சங்கமும் சாராதோர் 3675 பேர் அதாவது 5.45%. நம் சங்கத்தில் இணையும் தகுதியும், நேர்மையும் படைத்த அனைவரையும் இணைக்க முயல்வோம்... வெல்வோம்.
 நாம் ஒரு நாள் நடத்தும் வேலை நிறுத்தத்தின் பாதிப்பு, அடுத்த நாள் நம்மாலாலேய நிறைவாகி விடும். ஆனால் 7 லட்சம் பேர் பணிபுரியும் வங்கி நடத்தும் ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒரு மாதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனாலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். எனவே வேலை நிறுத்தம் என்பது எப்படி, எப்போது என நடத்தப்படவேண்டும். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதும் கூட வெற்றியாக மாறும் என்பதற்கு நமது 31.3.10 வேலை நிறுத்த விக்கல் ஒரு சான்றாகும்.
 நமது சங்கம் 110 கோட்டங்களிலும் உறுப்பினர்களை கொண்டது. 110 கோட்டங்களிலும் பதிவு பெற்றது. அண்மையில் வழக்கு ஒன்றில் இந்த விபரங்கள் நிர்வாகத்தால் நீதி மன்றத்திற்கு தரப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நமது சங்கம் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கான இயக்கம் விரைவில் நடத்துவோம்.
உலகின் மிகப்பெரிய வீடு 4000 கோடி ரூபாயில் 27 மாடியாக அம்பானியால் கட்டப்படுகிறது. இவர் தனது மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக விமானம் ஒன்று பரிசளித்தார்; இவர் வாழும் நாட்டில்தான் 77% மக்கள் ஒரு நாளைக்கு ரூ. 20ல் வாழ்கிறார்கள்?!?
பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா 50 லட்சம் பேரின் வேலைவாய்ப்பை இழந்தது. ஆனால் சீனா தனது உள்நாட்டு கட்டமைப்புக்காக செலவு செய்து, உள்நாட்டு மக்களின் சந்தை தேவையை பூர்த்தி செய்து சமாளிக்கிறது. அமெரிக்காவானது ஜப்பான், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் பெரும் கடன் வாங்கியுள்ளது. ஆசிய நாட்டு மக்கள் சேமிப்பை கலாச்சாரமாக கொண்டவர்கள்; அமெரிக்க மக்கள் அடுத்தவனிடம் கடன் பெற்றாவது இன்பம் துய்ப்பவர்கள். நம்மையும் அப்படி ஆக்கத் துடிக்கிறது அமெரிக்கா.
இந்திய இடது சாரிகளால் அதிகம் பயன் பெற்றது LIC யும் , எல்..சி ஊழியர்களுமே என்பது அன்று முதல் இன்று வரை வரலாராய் தொடர்கிறது.
 வர்த்தகத்தில் சுதந்திரம் வேண்டும்... அரசு தலையீடு கூடாது. என்றெல்லாம் கூறும் பெருந்தனவான்கள் அரசிடம் Bailout கேட்பது எதற்கு?
 PL Encashment ற்கு GIC யில் HRA ம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, 15 நாள் ஈட்டிய விடுப்பு கழிப்பை ரத்து செய்ய AIIEA, LIC நிர்வாகத்திடம் பேச உள்ளது.
புதிய பென்சன் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ஓய்வு பெற்ற பின் எவ்வளவு பென்சன் வரும் என்று இப்போது ஊகிக்கக்கூட முடியாது. எனவே புதிய பென்சன் திட்ட பாதிப்புகளை முறியடிக்க நிதித்துறையில் மீண்டும் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த புணூணூசிபு முயலும். இன்றைய பென்சன் திட்டமும், புதிய பென்சன் திட்டத்தால், போதிய நிதி தொடராததால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
 பென்சன் திட்டத்தில் விடுபட்டோர் சேர மற்றுமோர் வாய்ப்பு (Options) பெற முயல்வோம்.
 100% Neutrilisation பெறவும், பென்சன் update செய்யவும் அரசை நாட வேண்டியுள்ளது. இதனால் நமக்கு கிடைக்கும் பலன் 3 கோடி ரூபாய் மட்டுமே; ஆனால் மெடிக்கிளெம் திட்டத்தில் ஓய்வூதியருக்கு சலுகை பெற்றதன் மூலம் நமக்கு கிடைத்தது ரூ. 24 கோடி; இதற்கு நாம் அரசிடம் சொல்லவேண்டியதில்லை.
 அதேபோல் தான் Food Coupon விrயத்திலும் ஆகும். பெட்ரோலா, உணவுக் கூப்பனா எனும் போது LTC போல பிரச்சனை வராமல் இருக்க Food Coupon சிறந்தது என AIIEA முடிவு செய்தது.
# HFL என்பது LIC நிர்வாக தலைமையில் இருப்பினும் அது ஒரு தனியார் நிறுவனமே. நமது வீட்டு வசதிக் கடன் திட்டம் அங்கே மாற்றப்பட்டதில் பல்வேறு நன்மைகள் இருப்பினும் இன்னும் பிரச்சனைகள் முழுமையாக தீரவில்லை உரிய கால அவகாசத்திற்கு பின்னும், சரி செய்ய முடியாவிட்டால் அதற்கான தீர்வு கானவும் AIIEA திட்டமிடும்.
# P&GS திட்டத்தில் நிறுவனத்திற்கு லாபம் கிடையாது. கணக்கீடுகள் (A/C) மற்றும் விறப்னை (MKTG) மையப்படுத்தப்பட்டாலும், பிரிமிய வசூல் கிளைகள் அளவில் தொடர பேச்சுவார்த்தை மூலம் வலியுறுத்துவோம்.
தற்கால ஊழியர் நிரந்தரமாக்கும் பிரச்சனையில் பிரபாவதி Vs தமிழ்நாடு தற்கால ஊழியர் அமைப்பின் வழக்கு சாதகமாக இல்லை. பேச்சுவார்த்தை மூலம் NIT Award ல் சாதித்தது போல முடியவில்லை எனினும் முயற்சிகள் தொடரும்.
# PLLI என்பது 25% பேருக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலையில் அனைவருக்கும் கிடைக்க AIIEAமுயல்கிறது வரும் காலங்களிலும் முயலும்.
 நாம் 8/07ல் 40% கேட்டு கோரிக்கை சாசனம் சமர்ப்பித்தோம்; 12/07ல் தான் ஆறாவது ஊதியக்குழு 40% தரலாம் என பரிந்துரைத்தது. நமது ஊழியர்களே நம்பிக்கையற்று இருந்தனர். ஆறாவது ஊதியக்குழு 21-27-37-40 என 4 சதவீத அமைப்புகளில் சம்பள விகிதம் நிர்ணயித்தது.
 நமது துறையில் கூட உதாரணத்திற்கு 15-25 என பேசப்பட்ட போது நாம் 20 என எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்படிப்பட்ட வெறிறியையே பெற்றுள்ளோம்.
 சென்ற ஊதிய ஒப்பந்தம் போது 0.01% DA வில் கூடுதலாக நாம் பெற்ற போது அதன் மூலம் இன்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் மாதம் ரூ. 750 கூடுதலாக கிடைக்கிறது.
 இன்றைக்கு நாம் 5% பிரிமியம் சம்பளத்துக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்ற புதிய சூத்திரத்தை நிலை நாட்டியிருக்கிறோம். இனி எந்த வங்கி எல்லையும் நம்மை பாதிக்க முடியாது. இது மாபெரும் வெற்றி. போபாலில் ஒரு AIIEA தோழர் 2012 ஊதிய உயர்வுக்காக இன்றே ரூ. 5000 லெவி கொடுத்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
 7 லட்சம் பேர் உள்ள வங்கியில் 17.5-15-13.5% பின் 17.5% என ஆன போது 64,000 பேர் மட்டுமே உள்ள நாம் 17.5% தாண்டி விட்டோம்; அத்துடன் GIC ஐயும் 17.5% கொடுக்காமல் தடுத்து நிறுத்தி, நாம் பெற்ற பின் அவர்களை தரச்செய்தோம்!
# Management Agenda  வான Mobility, ACL, 1/2 day CL, 10Min, Permision Cut  ஆகியவற்றை ஏற்காமல் நாம் நம் Agenda வை மட்டுமே பெற்றோம்.
 புதிய பணி நியமனம் ஒன்றே Mobility க்கும் தீர்வு என வலியுறுத்தினோம். எனவே விரைவில் புதிய பணி நியமனம் வரும்.
ஊனமுற்றவர்க்கு படி (PH Allows) உயர்வு பெற புணூணூசிபு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெறும் 4 நாள், Extra Cooperation Withdrawalமூலம் 1.38% ஹிய இழப்பு ஏற்பட்டது. நிர்வாகம் எழுத்து மூலம் 17.5%ற்கு கூடுதலாக பெற முயற்சிப்போம் என தெரிவித்தது. இதுவும் ஒரு போராட்ட முறை... வெற்றி தான்.
 Joint Front மூலம் நாம் தனிபட்ட முறையில் பெரிய சங்கமாக இருந்தாலும், அரசுக்கு எதிராக அனைத்து சங்கங்களின் ஆதரவை திருப்ப முடிந்தது.
இதுதான் AIIEA 
60 ஆண்டு கால AIIEA வரலாறு நமக்கு பல பெருமைகளை தருகிறது.
உலகத்தின் சக்தி மிக்க பிரதமராக அன்று எமர்ஜென்சி அறிவித்த இந்திரா காந்தியே நம்மீது கோபப்பட்டு நொந்து போனார். LIC ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்தது தவறு என பகிரங்கமாக கூறினார். 1974ல் எல்..சி. சட்டம் திருத்தப்பட்டது.
பொதுத்துறை ஊழியர்களுக்கும் போனஸ் பெறும் உரிமை உண்டு என நிலை நாட்டியது AIIEA
 பணிகளை மையப்படுத்தல் மூலம், வேலை வாய்ப்பை பறிக்க ஆரம்ப காலத்தில் ராட்சச கணினிகளை புகுத்த நிர்வாகமும், அரசும் முயன்ற போது அதை இலாகோ விஜில் மூலம் தடுத்தது AIIEA; அதே நேரத்தில் தனியார் கம்பெனிகளின் போட்டியை எதிர்கொண்டு பல கோடி பாலிசிதாரர்களை தக்க வைக்க தன்னுடைய ஊழியர்களையும் பாதுகாத்துக் கொண்டு கணினி மயமாவாதை படிப்படியாக அனுமதித்து, தனது முடிவு சரியே என நிரூபித்துவருவது AIIEA
எல்..சியை 5 ஆக கூறுபோட பாராளுமன்றத்தில் மசோதா தாக்கலான போது சுனில் மைத்ரா மூலம் முயற்சி செய்து ராஜதந்திர முறையில் மசோதா தாக்கல் ஆகாமல் கடைசி மசோதாவாக பட்டியலிடச் செய்து நேரம் இன்றி தள்ளி வைத்தது. ஆனால் அடுத்த தேர்தல் வரும் போது ராஜீவ் காந்தியே இந்த மசோதா வராது என சுனிலுக்கு கடிதம் எழுதச் செய்தது AIIEA ஆகும்.
தனியார் மய வரவை 10 வருடம் தடுத்து நிறுத்தியது AIIEA.
இன்றும் திருத்த மசோதக்களை தனது ஆழமான கருத்துக்களை உரிய இடங்களில் முன்வைத்து தடுத்து வருவது AIIEA.
இந்திய தொழிற்சங்கங்களில் 80% ஊழியர்களை பிரநிதித்துவபடுத்தும் ஒரே சங்கம் AIIEA.
தனது உறுப்பினர்களை அரசியல் விழிப்புணர்வுடன் ஒன்றுபடுத்தி இருப்பது AIIEA.
எல்..சி. என்ற நிறுவனத்தை உருவாக்க போராடி வெற்றி பெற்றது AIIEA.
# 60 வயதானாலும், என்றும் 16 வயது மார்க்கண்டேயனாகாகும் அமைப்பை இளமைத் துடிப்புடன் பராமரித்து செயல்படுவது AIIEA
நமக்கு சுயமரியாதை தந்த, நேர்மையை போதித்த மணி விழா காணும் AIIEA வை நாம் கண்ணின் மணி போல என்றென்றும் காப்போம்.
ஒவ்வொரு மாதம் சம்பளப் பட்டியலை கண்ணுறும் போதும் AIIEA விற்கு வாழ்த்து கூறுவோம்.
ஒவ்வொரு மாதம் Food Coupon பெறும் போதும், 83 கோடி இந்திய மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாயில் வாழ்வை நகர்த்துகிறார்கள் என்ற உறுத்தலோடு, இந்த சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை கொணர, இடது சாரி மாற்றை கொணர பாடுபட சபதம் ஏற்போம்...
# AIIEA வின் வரலாற்றை நாமும் அறிவோம்; பிறருக்கும் அறிமுகப்படுத்துவோம்.. வரலாற்றில் இடம் பெறுவோம்.
ஊதியம்... அன்றும்... இன்றும்!
 250 கம்பெனிகள் இணைந்து எல்..சி. உருவானது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான சம்பளம். பணி நிலைமை... இதை சமச்சீராக்குவது பெரிய பணியாக இருந்தது.
 5.11.1956ல் AIIEA முதல் அகில இந்திய வேலை நிறுத்தத்தை நடத்தியது.
 கோரிக்கை என்ன தெரியுமா Boycott salary scale! அன்றைய நிதி அமைச்சர் T.T. கிருஷ்ணமாச்சாரி.
 நமது மத்திய அலுவலக Life Man ம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்.
 A.K. கோபாலன், ஹிரேன் முகர்ஜி ஆகிய இடது சாரி எம்.பி.க்கள் தலையிட்டனர்.
 1957 மே மாதம் திருத்தப்பட்ட ஊதிய விகிதம் தரப்பட்டது.
 15 லட்சம் ரூபாயாக இருந்த Add. Cost ரூ. 75 லட்சம் ஆனது.
 அன்று மத்திய அரசின் Pay Scale ரூ. 125 ஆக இருந்தது.
 நஸ்ரத் இன்சூரன்ஸ் நிறுவன ஊதியம் மாதம் ரூ. 10/d, பொதுவாக ரூ. 50 d ரூ. 100 வரை இருந்தது.
 Class III ல் 16 Gradeகள் இருந்தன AB.O.,D.O.,Z.O,,C.O., வில் வெவ்வேறு ஊதியம்; ஊருக்கு ஊர் உதியம் மாறும், இவை அனைத்தும் சமனப்படுத்தல் பெரும் பணியாக இருந்தது.
 1947ல் தீவிரமாக போராடும் சங்கங்களை அடக்கிட IDACF வந்தது.
 24.1.74ல் எல்..சி ஊழியர்களின் உரிமைகளை பறித்திட சட்டத்திருத்தம் வந்தது.
 நமது சங்க அங்கீகாரம் ரத்தானது; போனஸ் உரிமை சட்டப்படி பறிக்கப்பட்டது.
 1951d61 வரை போனஸிற்காக சட்டரீதியாக போராடி பெற்றோம்.
 DA என்பதை பெற்றோம். அதை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தோம். பின்னாளில் படிப்படியாக பல படிகள் இணைந்தது.
 நாம் வாங்கும் ஒவ்வொரு பைசாவும் AIIEA வின் போராட்டத்தில் வந்ததே. இது அனைத்து வகுப்புகளுக்கும் (CLASS) பொருந்தும்.
 History to be Told; Retold" d என்பது அனுபவமொழி.
 வரலாறு படிப்பது சலிப்பாக இருக்கலாம். வரலாறு படிக்காமல் வரலாறு படைக்க முடியாது.
 வாருங்கள் தோழர்களே வரலாற்றை படைப்போம்!