மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. இது இந்த ஆண்டு ஏற்றப் பட்ட எட்டாவது விலையேற்றமாகும். இதுவரை மொத்தமாக லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட் டுள்ளது. மொத்தமாக உயர்த்தினால் மக்கள் கொதிப்படைவார்கள் என்பதால் அவ்வப்போது இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என விலையை ஏற்றி வாழைப்பழத்தில் ஊசி குத்துவதை போல விலையை தந்திரமாக உயர்த்தி வருகிறது மத்திய அரசு.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 22 ம் தேதி 3 ரூபாய் 1 காசும், ஏப்.1 ல் 54 காசும், ஜூன் 26 ல் ரூ.3.79ம் , செப். 8 ல் 10 காசும், செப். 29 ல் 29 காசும் , அக். 15 ல் 78 காசும் நவ. 8 ல் 35 காசும் உயர்த்திய மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனங்கள் கடைசியாக டிச. 15ல் 2 ரூபாய் 96 காசும் உயர்த்தின.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் பொதுத்துறை எண்ணெய் நிறு வனங்களிடம் ஒப்படைத்தது. சர்வதேச சந்தை யில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப அவ்வப்போது விலையை ஏற்றிக் கொள்ள அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட் டது. இந்த நடைமுறை முந்தைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மேற்கொள்ளப்பட்ட முடிவாக இருந்தா லும் எதிர்ப்பு காரணமாக அமல்படுத்தப்படா மல் இருந்தது. ஆனால் அந்த கட்சியின் நாசகர பொருளாதார கொள்கைகளை விமர்சனம் செய்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ்-திமுக கூட் டணி அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் முதல் அந்த நடைமுறையை பின்பற்ற பெட்ரோ லிய நிறுவனங்களுக்கு பச்சைக்கொடி காட்டிய தன் விளைவு இந்த விலையேற்றம்.
ஏற்கனவே சரக்கு கட்டணங்கள் அதிகரித்து காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களின் விலை பலமடங்கு உயர்ந்து விட்டன. சமீபத்திய விலையேற்றத்தால் தனியார் விமான நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. தனியார் பேருந்து நிறுவனங்கள் ஏற்கனவே கட்டணத்தை அதிக மாகத்தான் வசூலித்து வருகின்றன.
கடந்த ஆண்டு மே மாதம் மத்தியில் காங் கிரஸ்- திமுக கூட்டணி அரசு பொறுப் பேற்றது முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு வரலாறு காணாத அளவிற்கு சென்று விட்டது. குறிப்பாக உணவு தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, காய்கறிகள், பழங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் சாமானிய மக்களின் வாழ்நிலையை பாதித்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் மீதான அநியாய வரிவிதிப்பு முறையை மாற்ற அரசு ஒப்புக் கொண்டாலே இந்த விலை உயர்வில் இருந்து மக்களை பாதுகாக்கமுடியும். ஆனால் அதை செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. இந்த விலையேற்றம் பொருளாதாரத் தில் பணவீக்கத் தையே ஏற்படுத்தப்போகிறது. பொதுவிநியோக முறை சீர்குலைக்கப்பட்ட நிலையில், அத்தியா வசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிடுவதற்கான வாய்ப்புகள் துளியளவும் இல்லை. ஒட்டுமொத்த பொருளா தார வளர்ச்சி உயர்ந்துவருவதாக ஒருபக்கம் அரசு தம்பட்டம் அடிக்கிறது. ஆனால் சாமானி யன் வாழ்நிலை பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும் முடிவை நிறுவனங்க ளின் கையில் விட்டால், அது தொடர் விலை யேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று இந்த முடி வை அரசு எடுக்கும் முன்பு இடதுசாரிக் கட்சி கள் கருத்து தெரிவித் திருந்தன. அந்த எதிர்ப்பு எந்த அளவு நிதர்சனம் என்பது இன்று நிரூபண மாகியுள்ளது.
No comments:
Post a Comment