காங்கிரஸ் சிறப்பு மாநாட்டில் 93 வயதான சுதந்திரப் போராளி பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட் டார். ஐ.மு.கூட்டணி அரசு பதவி இழந்தாலும் பரவா யில்லை, பிரதமரும் கட்சித் தலைவரும் ஊழலை எதிர்த் துப் போராட வேண்டும் என்று அவர் ஆற்றிய உரை மாநாட்டில் பரபரப்பை உண்டாக்கியது.
சிறப்பு மாநாட்டில் அர சியல் தீர்மானம் நிறைவேறி யவுடன் அன்றைய அலுவல் கள் முடிவுக்கு வந்தன. அச் சமயம் அகில இந்திய காங் கிரஸ் கமிட்டியின் செயலா ளர் ஜனார்த்தன் திவிவேதி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராளி ராம்விலாஸ் பாண்டே பேசி முடிக்கும் முன் மேடையில் உள்ள தலைவர்கள் வெளி யேற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். மேடையை விட்டு வெளி யேற இருந்த மன்மோகன் சிங்கும், சோனியாகாந்தியும் இருக்கைக்குத் திரும்பினர்.
“அரசு போனால் போகட் டும். குற்றவாளியைத் தண் டியுங்கள். அது ராஜாவாய் இருந்தால் என்ன கருணா நிதியாய் இருந்தால் என்ன?” என்று பாண்டே கூறினார். பிரதமரும், காங்கிரஸ் தலை வரும் சுத்தமானவர்கள். எனவே ஊழலை எதிர்த்து அவர்கள் போராட வேண் டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார். “குற்றம் செய்தவர்களைத் தண்டியுங்கள். அரசு இருக்க வேண்டும் என்று கவலைப் பட வேண்டியதில்லை” என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பி னர்களின் தொகுதி மேம் பாட்டு நிதி பற்றியும் அவர் பேசினார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அளிக் கப்பட்ட நிதியை நிறுத்திய தன் மூலம் சரியான திசை வழியில் முடிவெடுத்துள் ளார் என்று அவர் தெரிவித் தார். ‘நிதியில் 40 விழுக்காடு கமிஷனாகச் செல்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் கள் நிதியை ஆண்டுக்கு ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்துமாறு கேட்பதாக நான் கேள்விப் படுகிறேன்” என்றும் அவர் கூறினார். பாண்டே பேசி முடித்தவுடன் பிரதமர் அவ ரிடம் கைகுலுக்கினார்.
No comments:
Post a Comment