Thursday, December 23, 2010

வீதியில் இறங்காமல் விடியாது - இரா. விஜயகுமார், அரியலூர்

40% ஊதிய உயர்வு வென்றெடுத்த மகிழ்ச்சியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தனது 22வது அகில இந்திய மாநாட்டை (60வது ஆண்டு வைர விழா) இந்திய தலைநகரான புதுடெல்லியில் 2010. நவம். 20 - 24 வரை நடத்தியுள்ளது. 2007-ல் கான்பூரில் நடைபெற்ற மாநாட்டில் நம்பிக்கையுடன் 40% ஊதிய உயர்வை வென்றெடுப்போம் என்ற அறைகூவலை வென்றெடுத்த மாநாடாக அமைந்தது. கான்பூரின் மாநாட்டிற்கும், டெல்லி மாநாட்டிற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசங்கள் என்று அசைபோட்டு பார்த்தால் ஊதிய உயர்வு, வீட்டு வசதி கடன் உயர்வு, மூன்றாம் நிலை ஊழியர்கள் 5000 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற பெருமையோடு கொண்டாடி முடித்தாகிவிட்டது.
 இனி நாம் அடுத்த ஊதிய உயர்விற்கு மட்டுமே போராட ஆயத்தமாக வேண்டும் அதுவும் 2012ல், அதுவரை நாம் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் நிலையிலா உள்ளோம் என்பதை பரிசீலிப்போம். 1951 தொடங்கி பலகட்ட போராட்டத்தை ஊழியர்களின் நலன் கருதி போராடி வெற்றி பெற்றுள்ளோம், 1990dகளுக்கு பின் உலகமய, தாராளமய, தனியார்மய காலத்தில் உள்ளோம், இக்காலத்தில் நமது போராட்ட வடிவங்கள், தற்போது தொழிலாளர்கள் அனுபவிக்கும் நலன்களை தக்கவைப்பதற்கும், பாதுகாப்பதற்குமான போராட்டமாக மாறிவருவதை நாம் உற்றுநோக்க வேண்டும். இப்பின்னணியில் நமது ஊதிய உயர்வு வெற்றி. அதுவும், 40% எவ்வளவு பெரியது என்பதை இன்று அதன் பலன்களை அனுபவிக்கும் போது நன்கு உணர முடிகிறது. இதேபோல் AIIEA தனது ஊழியர்களுக்கு மாநாடுகளில் அறைகூவல் விடுக்கும்; அதை வெற்றிகரமாக்கும் என்று நடைமுறையில் பலமுறை நிருபித்துள்ளது.
 இன்று நாம் அனுபவிக்கும் பல பலன்களான PF, Grauity பென்சன் போன்ற பலவும் சோவியத் ரஷ்யாவில் அன்றைய சோசலிச அரசு தொழிலாளர்களுக்கு வழங்கியதை தொடர்ந்து பலநாடுகளில் (இந்தியா உட்பட) பலகட்ட போராட்டங்களுக்கு பிறகே அமலாகியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
 உலகளவில் மிகப்பெரிய பொருளாதார, நெருக்கடிச் சூழலில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர், தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது, புதிய ஊழியர் நியமனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 77% மக்கள் ஒரு நாளைக்கு ரூ. 20/dக்கும் குறைவான ஊதியத்தை பெறுகின்றனர். ஆனால் நமது முன்னாள் நிதியமைச்சர் இந்த அறிக்கை தவறானது என்கிறார் எதார்த்தத்தில் இந்திய மக்கள் தொகையில் 52% விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்துகின்றனர். (64 கோடி மக்கள்) அவர்களின் ஒட்டுமொத்த GDP பங்களிப்பு ஆண்டுக்கு 17% என்றால் சராசரியாக 77% மக்கள் பட்டினி வயிற்றோடுதான் வாழ்கின்றனர்.
 முறைசாரா தொழிலாளர்கள் மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஒருநாள் கூலியான ரூ. 70 பெறுவதற்கு போராட்டங்கள் நடத்துகின்றனர். உலகம் வேறாக இருக்கும்போது எல்.ஐ.சி. ஊழியர்கள் மட்டும் 40% ஊதிய உயர்வை வென்றெடுத்து வாழ்வது தனித்தீவில் வாழ்வதற்கு சமமானது என்பதை நமது 22வது அகில இந்திய மாநாட்டு அறிக்கை சரியாக சுட்டிக்காட்டியுள்ளது, அடுத்து வீட்டுவசதிகடன் இரட்டிப்பு என்பதோடு ஒப்பிட்டால் வயிற்றை நிரப்பவே முடியாத மக்கள் வாழும் நாட்டில் கூடுதலான வீட்டுவசதி கடன் என்பதை பொருத்தி பார்ப்பது அவசியம்.
 உலகளவில் வேலையிழப்பு பல லட்சம் என்று ILO அறிக்கை விட்ட சூழலில், அரசுத்துறையிலே 40% ஊழியர்கள் எவ்வித பணி பாதுகாப்புமின்றி நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் பணியில் இருக்கும் சூழலில், 5000 புதிய பணி நியமனம் எல்.ஐ.சியில் சாத்தியமாகியுள்ளது. இவையாவும் AIIEA என்ற தீவிரமான போராட்ட குணம் கொண்ட ஒரு தொழிற்சங்கத்தால் மட்டுமே முடியும் என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளும் தருவாயில் நமது தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் ஆபத்தான பிரச்சனைகள் பலவற்றை மறந்துவிடக் கூடாது என்பதை நினைவுபடுத்தும் மாநாடாகவும் அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.
 15வது பாராளுமன்ற உறுப்பினர்களில் 300க்கும் மேல் கோடீஸ்வரர்கள், அவர்களின் வர்க்கபாசம் யாருக்கு பாடுபடும் என்பது தேவையற்ற சந்தேகம். ஆகவே தான் 2009d10 ஆண்டு மட்டும் 5,18,000 கோடி ரூபாய் வரித்தள்ளுபடி (முந்தைய ஆண்டில் 4,10,000 கோடி) செய்துள்ளது. 52% மக்கள் நம்பி வாழும் விவசாயத்திற்கு ஒட்டுமொத்த GDP யிலிருந்து 2% மட்டுமே ஒதுக்குகிறது. அதற்கு பதிலாக 17% GDPஐ எடுத்துகொள்கிறது. உற்பத்தியான உணவு தானியங்களை பதப்படுத்தி, பாதுகாக்க மறுத்து அவற்றை வீணாக்குகிறது. ஒரு வருடத்திற்கு 3 மில்லியன் டன் உணவு தானியத்தை எலிகளுக்கு உணவளிக்கும் மத்திய அரசு வீணாகும் உணவு தானியத்தை ஏழை மக்களுக்கு வினியோகிக்க மறுக்கிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டால் கோபம் வருகிறது. தொழிளாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதை கண்டித்தால் கைதட்டி வரவேற்கிறது.
 ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய மறுக்கும் மத்திய அரசு 2009 வருடம் ஏப்ரல் 1 முதல் ஜுன் 30 வரை ரூ. 15,64,114.96 கோடிக்கு ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 2010ம் வருடம் அதே காலகட்டத்தில் ரூ. 24,55,987.26 கோடியாக ஆன்லைன் வர்த்தகம் வளர்ந்துள்ள வித்தியாசமே. 2009d ஆண்டில் 26 பில்லியனர்கள் இருந்த இந்தியவில் 2001ல் 52ஆக உயர்ந்தமைக்குக் காரணம் என்ற உண்மையையும் அது மறைக்கிறது. ஆகவே 110 கோடி மக்கள் வாழும் நாட்டில் 52 பேரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 25% உள்ளது. இவையாவையும் மறைத்து நாட்டிற்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படுத்தும் நாசகர செயல்களை புரிந்து கொள்ள வேண்டிய தருவாயில் உள்ளோம்.
 அனைத்து தொழிலாளர்களுக்கும் சென்று சேர வேண்டிய பலன்கள் யாவும் சிலர் மட்டுமே தட்டிப் பறிக்கின்றனர். என நாடகமாடும் ஆட்சியாளர்கள் தொழிலாளர்களுக்கும், முறைசாரா தொழிலாளர்களுக்குமிடையே பிரச்சனையை உண்டு செய்கிறது தனது தவறை மறைக்கவும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தட்டிக்கழிக்கவும் செய்கிறது, சிலர் மட்டுமே என்று ஆட்சியாளர்கள் குறிப்பிடுவது மத்திய அரசு ஊழியர்களை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
 தொழிலாளி வர்க்கத்தை எந்த வகையிலும் சுரண்டலாம் என்ற எண்ணம் கொண்ட பண முதலைகள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில்தான் நாம் நமது போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இடதுசாரிகள் தவிர வேறு எவரும் முன்னுக்கு வரமாட்டார்கள், இடதுசாரிகளை வலுப்படுத்தாமல் எதிர்கால போராட்டத்தில் நாம் வெல்ல முடியாது என்பதை உணர்வோம் இடதுசாரிகள் மீது ஊடகங்கள் ஏற்படுத்தும் கலங்கத்தை நமது பிரச்சாரத்தின் மூலம் முறியடிப்போம்.
 புதிய பென்rன் திட்டத்தை தன்னிச்சையாக அறிமுகப்படுத்தும், மத்திய அரசின் போக்கை கண்டிக்கிறோம், அதன் பாதகவிளைவை விளம்பரபடுத்துவோம், தொழிற்சங்க உரிமை இல்லாததன் விளைவுகளை பலதுறைகளில் நாம் எதிர்நோக்குகிறோம். ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கத்தின் குரலை, பிரான்சிலும் மற்ற நாடுகளிலும் வீதியில் இறங்கி தங்களது போர்க்குரல்களை ஒலிக்க துவங்கிவிட்டனர். இந்தியாவிலும் நாம் தயாராக வேண்டிய காலகட்டத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.
 அகில இந்தியளவில் AIIEA உறுப்பினர்கள் இன்றைய தேதியில் 65,000 பேர் மட்டுமே. ஆனால் இந்த எண்ணிக்கையை கொண்டு LPG கொள்கையை எதிர்த்த போராட்டத்தில் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராடி வருகிறது. இச்சிறிய எண்ணிக்கை போதுமானதா என்றால் நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது போதுமானதல்ல என்பதே, வேறு எப்படி இக்கொள்கைகளை எதிர்த்து போராடி வருங்காலத்தில் நமக்கு முன்னே இருக்கக்கூடிய சவால்களை எதிர்கொள்ளப் போகிறோம். நமது முகவ நண்பர்கள் 13 லட்சம் பேர், பாலிசிதாரர்கள் 30 கோடி பேர், தோழமை தொழிற்சங்கங்கள் என்று அனைவரையும் ஒன்று திரட்டி, ஒன்றுபட்ட தொழிலாளி வர்கத்தின் குரலாக மாற்றாமல் பொதுத்துறைகளை பாதுகாக்க முடியாது, தொழிலாளர் நலன்களை பாதுகாக்கவும், வென்றெடுக்கவும் முடியாது என்ற எதார்த்தத்தை புரிந்து கொள்வோம். வீதியில் இறங்காமல் விடியாது என்பதை உரக்கச் சொல்வோம்.

No comments:

Post a Comment