Tuesday, December 21, 2010

மலை மக்களுக்கு பட்டா மறுக்கும் ஒரே மாநிலம் தமிழகம்!

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக் கும் வகையில் 2006ம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் உடன டியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சென்னையில் எழுச்சி மிகு போராட்டம் நடைபெற்றது. இந்தச் சட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விரைந்து முடிக்கவும், தடை ஆணையை நீக்கவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வும் இந்தப் போராட்டத்தில் வலியுறுத் தப்பட்டது.

புதிய வன உரிமைச் சட்டத்தை மதித்து நடக்குமாறு வனத்துறையின ருக்கு அரசு அறிவுறுத்துதல், மலைப் பகுதி களில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்க தடை விதிக்கும் அரசாணையை (எண். 1168) உடனடியாகத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன் வைத்து மலைவாழ் மக்களின் மாபெரும் கோரிக்கை முழக்கப் போராட்டம் சென் னையில் செவ்வாயன்று (டிச.21) நடை பெற்றது. தமிழகத்தில் வாழும் சுமார் 8 லட்சம் மலைவாழ் மக்களைப் பிரதி நிதித்துவப் படுத்துவது போல் அனைத்து மாவட்டங்களிலுமிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர், பழங்குடியி னர் உரிமைகளுக்கான தேசிய மேடை சார்பில் நடந்த மாநில அளவிலான இந்தப் போராட்டத்தில் எழுச்சியுடன் பங்கேற் றனர்.

அனைத்துப் பழங்குடியினருக்கும் விண்ணப்பித்த 2 வார காலத்திற்குள் இனச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக குறு மன்ஸ், மலைவேடன், கொண்டாரெட்டி, காட்டுநாயக்கன் ஆகிய இனத்தவருக்கு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுத்து வரும் நிலையில், இவர்களுக்கு சான்றி தழ் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத் தப்பட வேண்டும் என்றும் வலியுறுத் தப்பட்டது.

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்ட மலையாளி, நரிக்குறவர், குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவான குறும்பா, குறும்பர், குருபா, குறுமன் மற்றும் குறவன் இனத்தின் உட்பிரிவான 27 பிரி வினர் ஆகியோரை பழங்குடியினர் பட்டி யலில் சேர்க்க தமிழக அரசு பரிந் துரைத்தது. ஆனால், மத்திய அரசு மீண் டும் மீண்டும் விளக்கம் கேட்டு காலதா மதம் செய்வதற்கு இந்தப் போராட்டத்தில் வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கப் பட்டது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்திய தற்காகவும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கை அம்பலப்படுத்தியதற்காகவும் பழிவாங்கும் வகையில் மலைவாழ் மக் கள் சங்க தலைவர்கள் மீதும், மலைவாழ் மக்கள் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக் கைத் திரும்பப் பெறவும், பழங்குடியினர் நலவாரியத்தில் அனைத்துப் பழங் குடியினரையும் உறுப்பினராகச் சேர்த்து உரிய பலன்கள் தாமதமின்றிக் கிடைக் கச் செய்யவும் வலியுறுத்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தை நிறைவு செய்து உரையாற்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே. பால கிருஷ்ணன், “ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற் றம் சாட்டப்பட்டுள்ள ஆ. ராசாவை காப் பாற்றுவதில் அக்கறை காட்டும் முத லமைச்சர், ராசாவைத் தேர்ந்தெடுத்த நீல கிரி மாவட்ட பழங்குடி மக்களைப் பாது காப்பதில் ஏன் அக்கறை செலுத்த வில்லை,” என்று கேட்டார்.

“பழங்குடி மக்களின் சுயமரியா தையை எவ்வளவு வேண்டுமானாலும் கேவலப்படுத்தலாம் என்ற நிலைமை தொடர்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு திமுக அரசு முடிவு கட்டவில்லை என் றால் இந்த ஆட்சிக்கு முடிவுகட்டும் சிறை நிரப்புப் போராட்டத்தை பழங்குடி மக்களும் மலைவாழ் மக்களும் வெற்றி கரமாக நடத்துவார்கள். அனைத்து மலை களும் அமைதியாகவே இருந்துவிடாது, அவை எரிமலைகளாக வெடிக்கும்,” என்றும் அவர் கூறினார்.

நமது நாட்டில் ஒருவர் பிறக்கும் முன்பே அவருக்கு சாதி முத்திரை குத்தப் பட்டுவிடுகிறது. ஆனால், மலைவாழ் மக்கள் தங்களுக்கு உரிய சட்ட உரிமை களை அடைய சாதிச் சான்றிதழ் கோரி னால் அது மறுக்கப்படுகிறது. பழங்குடி மக்களுக்கான நிதி அவர்களைச் சென்ற டைவதில்லை, வழியிலேயே கொள்ளை யடிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி கள் மாறினாலும் பழங்குடியினர், மலை வாழ் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மாறவில்லை. போராட்டம் மட்டுமே அதை மாற்றும் என்றும் அவர் கூறினார்.

ஆயிரக்கணக்கான பெண்களும் திரண்டு வந்து பங்கேற்ற இந்தப் போராட் டத்திற்குத் தலைமை தாங்கிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம், “வன உரிமைச் சட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு அவர்களது நிலங்களுக்கான பட்டா போட்டுத் தராத ஒரே மாநிலம் தமிழகம் தான். சட்டத்தை அமலாக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள மாநிலமும் தமிழகம்தான். அதே போல் மலைப் பகுதிக்கு மட்டும் பட்டா வழங்க அனுமதி மறுத்து ஆணை பிறப்பித்த ஒரே முதல மைச்சர் கருணாநிதிதான்,” என்று சுட்டிக் காட்டினார்.

வன விளைச்சலில் சிறு மகசூல் களை சேகரிப்பது மலைவாழ் மக்களின் வாழ்க்கை. அந்த மகசூல்களை பட்டிய லிடுவதற்குக் கூட அரசு தாமதப்படுத்து வது ஏன் என்று அவர் கேட்டார். மற்ற மாநிலங்களில் சாதிச்சான்றிதழ் கோரும் பழங்குடியினருக்கு அந்தந்த வட்டார வட்டாட்சியரே சான்றிதழ் வழங்கலாம் என்ற நடைமுறை உள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் கோட்டாட்சியர் மட்டுமே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உள்ளது.

ஒரு கோட்டாட்சியர் வழங்கும் சான்றி தழை இன்னொரு கோட்டாட்சியர் ஏற்க மறுப்பது, தந்தைக்கு பழங்குடியினர் என்ற சான்றிதழ் வழங்கிவிட்டு மகனுக்குத் தர மறுப்பது போன்ற நடைமுறைகள் இங்கு தான் உள்ளன என்றார். பட்டியலில் உள்ள வர்களுக்கு சான்றிதழ் தர மறுக்க அர சுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் அவர் கேட்டார்.

பழங்குடியினர் நலவாரியத்தில் இது வரை 24 ஆயிரம் பேர் மட்டுமே சேர்க்கப் பட்டுள்ளனர். அதற்கென ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் ரூ.30 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

குறவர் இன மக்கள் ஒவ்வொரு மாவட் டத்திலும் ஒவ்வொரு சமூகமாக குறிப் பிடப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப் பட்டோர் ஆகிய எல்லாப் பிரிவுகளிலும் இருக்கிறார்கள். இது இவர்களுக்கு பழங் குடியினச் சான்றிதழ் கிடைப்பதற்கு பெரும் தடையாக உள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

புலையர் இன மக்களை பழங்குடி யினர் பட்டியலில் சேர்க்கக் கோரி சங் கத்தின் சார்பில் அனுப்பப்பட்ட கடி தத்தை ஏற்று பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் பி.டில்லிபாபு பேசுகையில், “பால் விற் பனைக்கு ஒரு அமைச்சர், மீன் விற்ப னைக்கு ஒரு அமைச்சர், கால்நடை பரா மரிப்புக்கு ஒரு அமைச்சர் என்றெல்லாம் தமிழகத்தில் இருந்தாலும் பழங்குடி மக்கள் நலன்களுக்கு என தனியாக ஒரு அமைச்சர் கிடையாது,” என்று சுட்டிக் காட்டினார்.

குறுமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கத் தின் தலைவர் எல். சிவலிங்கம், கொண்டா ரெட்டி பழங்குடி மக்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர். பிரகாஷ், ஆறுமுகம், தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன் னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பாளர் ஏ.வி. சண்முகம் ஆகியோரும் உரையாற் றினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கப் பொருளாளர் என். அழகேசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment