Monday, December 20, 2010

ஜம்மு - காஷ்மீர் பிரிவினைக்கு எல்லை மக்கள் கடும் எதிர்ப்பு

ஜம்மு - காஷ்மீர் பிரிவி னைக்கு எல்லை மக்கள், கருத்தறிவாளர்கள் குழுவிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜம்மு - காஷ்மீர் பகுதி யில் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட 3 உறுப்பினர்கள் கருத்தறிவாளர்கள் குழு, பல் வேறு தரப்பினரின் கருத்துக் களை கேட்டு வருகிறது.

இந்த குழுவினர் எல் லைப் பகுதியான ரஜவுரி - பூன்ச் பகுதிகளில் உள்ள மக் களை சந்தித்து கருத்துக் களை கேட்டனர். அப்போது அங்குள்ள மக்கள், ஜம்மு - காஷ்மீர் பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து கருத்தறிவா ளர்கள் குழுவின் தலைவர் டாக்டர் திலீப் பட்கோன்கர் ரஜவுரியில் செய்தியாளர்களி டம் கூறுகையில், காஷ்மீர் பகுதியின் கருத்துக்கு முற்றி லும் வேறாக எல்லைப் பகுதி மக்களின் கருத்து உள்ளது. அவர்கள் ஜம்மு - காஷ்மீர் பிரிவினையை விரும்ப வில்லை. அவர்களது கோரிக்கைகள், ஆலோசனைகள் ஆகிய வற்றை மத்திய அரசிடம் தெரி விப்போம் என்றார். ஒவ்வொரு பிரிவினர், சமூகத்தினர் கருத் துக்களில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஜவுரி பூன்ச் எல்லை மாவட்டங்களில் தலைமை மத்தியஸ்தர் திலீப் பட்கோன்க ருடன் இதர உறுப்பினர்கள் எம்.எம். அன்சாரி, ராதாகுமார் ஆகியோரும் சென்றுள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தில் 43 குழுக் களை கருத்தறிவாளர் குழு சந்தித்துள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தில் 13 குழுக்களையும் அவர்கள் சந் தித்தனர். எல்லை மாவட்டப் பகுதியில் வேலைவாய்ப்பு விவ காரம் தவிர உள்ளூர் பிரச்ச னைகளையும் சிலர் தெரிவி த்தனர்.

No comments:

Post a Comment