Monday, December 20, 2010

‘நகைச்சுவை’ மழை

புதுதில்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் நகைச்சுவை வழங்குவதில் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுள்ளனர்.

முதல் நாள் மாநாட்டை துவக்கி வைத்த சோனியா காந்தி, ஊழலை காங்கிரஸ் ஒரு போதும் பொறுத்துக்கொள்ளாது என்று ஒரே போடாகப் போட்டார். சுதந்திர இந்தியாவில் காங் கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது முதலே ஊழலும் அக்கட்சியோடு சேர்ந்து பயணம் செய்து வருகிறது. இப்போது ஐக்கிய முற்போக்கு கூட் டணி - 2 அரசில் வெடித்துக் கிளம்பியுள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்ற ஊழல்கள் சோனியா காந்தியின் வீர உரையை கேட்டு கைகொட்டி சிரிக்கின்றன.

அதிலும் சுதந்திர இந்தியா இதுவரை கண் டிராத மெகா ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க, குற்றவாளிகளை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய கூட் டணி அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் வெட்கக் கேடானவை. 

அரசு கஜானாவுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய ரூ.1லட்சத்து 76ஆயிரம் கோடி சூறை யாடப்பட்டுள்ளது. இதில் பன்னாட்டு முதலாளி களும் உள்நாட்டு முதலாளிகளும் புகுந்து விளை யாடியுள்ளதை, அதற்கு காங்கிரஸ் - திமுக கூட் டணியின் அமைச்சரவை உறுதுணையாக இருந் துள்ளதை அதிகார தரகரான நீரா ராடியா உரையாடலே நிரூபித்துள்ளது. நாட்டின் அமைச் சரவை பிரதமர் மன்மோகன் சிங் தீர்மானிக்க வில்லை. முதலாளிகள்தான் தீர்மானித்துள்ளனர். இந்த லட்சணத்தில் ஊழலைப் பற்றி எவ்வாறு நா கூசாமல் சோனியா காந்தியால் பேச முடி கிறது என்று தெரியவில்லை.

இரண்டாவது நாள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எதையும் மூடிமறைக்கவில்லை என்றும் நாடா ளுமன்ற பொதுக் கணக்குக்குழு முன்பு ஆஜராகத் தயார் என்றும் பேசியுள்ளார். நாடாளுமன்ற கூட் டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் நடத் திய போராட்டத்தால் குளிர்கால கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறவில்லை. இந்த முட்டுக் கட்டையை நீக்க எந்த முயற்சியும் மேற்கொள் ளாத செயலற்ற பிரதமர்தான் இப்போது எதற்கும் தயார் என்று சவால் விடுகிறார்.

ஆ.ராசா மீது வழக்கு தொடர அனுமதி கொடுப் பது குறித்து 16 மாத காலம் மவுனம் சாதித்தது ஏன் என்றும், ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து பிரதமர் அனுப்பிய யோசனையை ஆ.ராசா நிராகரித்த தோடு, பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் மரி யாதையற்ற வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார் என்றெல்லாம் உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டிய போது பிரதமர் வாய்திறக்கவில்லை. 

இப்போது கூட பொதுக்கணக்குக்குழு முன்பு ஆஜராகத் தயார் என்று கூறுபவர், நாடாளு மன்ற கூட்டுக்குழு அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். ஏன் இந்த தயக்கம்? கேட்டால், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்கிறார். 

ஆனால் கூட்டுக்குழு அமைத்தால் முழு உண்மையும் வெளியே வந்துவிடும். ஸ்பெக்ட்ரம் பணம் எங்கெங்கே சென்றது, இதில் யார் யாருக் கெல்லாம் தொடர்பு என்ற விபரங்கள் எல்லாம் வெளியே வந்துவிடும் என்பதால்தான் சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் தயங்குகிறார்கள்.

இவர்களின் அர்த்தமற்றப் பேச்சுக்கு காங் கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டோர் தலை யாட்டலாம். ஆனால் இவர்களது பசப்புரைகளை மக்கள் நம்பமாட்டார்கள்

No comments:

Post a Comment