அண்ணல் அம்பேத்கரைப் பற்றிய திரைப்படம் தமிழ் வடிவத்தில் சமீபத்தில் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. பல நீண்ட தடங்கல்களுக்குப் பின்னர் இப்படத்தை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். அண்ணலாக கேரளத்தின் மம்மூட்டி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அம்பேத்கர் படத்தைப் பற்றிய விமர்சனம் எழுத வேண்டும் என்று சொன்னபோதே வரலாற்றை எப்படி விமர்சனம் செய்வது என்ற சந்தேகம்தான் என்னை ஆட்கொண்டது. அம்பேத்கர் நவீன இந்தியாவின் சமூக வரலாற்றை வடிவமைத்தவர்களுள் மிகவும் முக்கியமானவர். பல நூறு ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவித்து வந்தக் கொடுமைகளை எதிர்த்து உரத்தக் குரலெழுப்பியவர். சமூக விடுதலைக்கான போராட்டக்களத்தின் முன்னணித் தலைவரும், போராளியும்கூட. அப்போராட்டங்களில் எத்தனையோ முறை பாதைதவறி, வன்முறைப் பாதைகளில் செல்ல வாய்ப்புகள் இருந்தபோதும் அதை முற்றாக நிராகரித்தவர். அப்பாதையை அவர் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றுதான் பலரும் விரும்பினார்கள். ஏனென்றால் அப்போதுதான் அவரை சமூக சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து ஒழிக்கமுடியும். ........................... சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட பல ஆத்திரமூட்டல் சம்பவங்களை அவர் எவ்வாறு முறியடித்தார் என்பதை படம் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது. சாதாரண படவிமர்சனம் என்ற நோக்கிலிருந்து நம் பார்வையை விலக்கிவிட்டுப் பார்க்கும்போது ஒரு மிகச் சிறந்த கல்வியை இந்த மூன்று மணி நேரமும் அது தருகிறது என்ற அற்புதத்தை நாம் உணர்வோம். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளையும், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கித் தருணங்களையும் நாம் நினைவில் வைத்திருப்போமானால் படத்தின் ஓட்டம் எவ்வளவு அற்புதமாக அமைந்துவிடுகிறது தெரியுமா? தன் தந்தையைக் காண குதிரை வண்டியில் தன் சகோதரனுடன் சென்றபோது இன்ன சாதி என்று தெரிந்ததும் வண்டிக்காரர் தொடர்ந்து வண்டு ஓட்ட மறுத்து அம்பேத்கரை கீழே இறக்கிவிடும் காட்சிகள் நம் ரத்தத்தை கொதிக்கச் செய்கிறது. மிகச் சாதாரண வரிகளாகப் புத்தகங்களில் படிப்பவை காட்சிப்படுத்தப்படும் போது எவ்வாறு வலிமையடைகிறது தெரியுமா? அதனால்தான் படத்தை வெளியிடாமல் இத்தனை ஆண்டுகளா தடுத்து வைத்திருந்தார்கள் போலும்.
குடும்பத்துச் சோதனைகள் பலவற்றையும் சகித்துக் கொண்டு உயர்படிப்பை நிறைவுசெய்யும் அம்பேத்கரை நம் கண்முன் நிறுத்துகிறார் மம்முட்டி, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலும், இங்கிலாந்தில் பார் அடலாவும் படிக்கும் போதும் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை நேரடியாக அவ்விடங்களுக்குச் சென்று படமாக்கியதன் மூலம் படம் நம் மனதில் ஆழப்பதிகிறது.
லண்டன் வட்ட மேசை மாநாட்டுக் காட்சிகள், அங்கு நடைபெறும் சொற்பொழிவுகள் அனைத்தும் மிக ஆழமான விவாதத்தை உருவாக்கவல்லவை. தாழ்த்தப்பட்ட வகுப்பை பிரதி நிதித்துவம் செய்வது தான் மட்டுமே என்று அம்பேத்கர் நிரறுவும் விதமும், அதற்கு காந்தியடிகளின் பதிலும் வரலாற்று ஆவணங்கள். தாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளத் தொகுதி வழங்கும் பிரிட்டிrVரின் அறிவிப்பை மிகக்கடுமையாக எதிர்க்கும் காந்தி எரவாடா சிறையில் சாமு வரை உண்ணாவிரதம் தொடங்குகிறார். அப்போது அம்பேத்கருக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலையில் மம்முட்டி தன் நடிப்பைத் தொட்டிருக்கிறார். காந்தியின் உயிரா அல்லது தனது இன மக்களின் நலனா என்று தீர்மானிக்க முடியாமல் அம்பேத்கரும் கூட சற்றே திணறித்தான் போகிறார். ஏனென்றால் காந்தி அப்போதைய இந்திய மக்களுக்கு ஒருவாழும் கடவுள். ஒரு வேளை காந்தி இறந்துவிட்டால் அதுதான் சமூக மக்களின் மேல் ஏற்படுத்தும் பாதிப்பையும், மேல் சாதி இந்துக்களின் கோபம் தாழ்த்தப்பட்ட சாதி மேல் தான் பாயும் என்பதையும் அறிவுப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட அம்பேத்கர் காந்தியின் உயிரைக் காப்பாற்றுகிறார். பூனா ஒப்பந்தத்தின் விளாவாக அகில இந்திய தீண்டாமை எதிர்ப்புக்கழகம் காந்தியால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு தீண்டப்படாதோருக்கான சேவைக் கழகமாக அதனை மாற்றியமைத்தார். அதிலும் திருப்தி அடையாமல் ""ஹரிஜன சேவா சங்கம்'' எனப் பெயரிட்டழைத்தார்.
ஏரவாடா சிறைக் காட்சிகளும், உண்ணாவிரதமும், பூனா ஒப்பந்தமும் படத்தில் மிகச் சிறந்த முறையில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. அம்பேத்கரின் வாழ்வோடு பிண்ணிப் பினைந்துள்ள அவரது குடும்ப நிகழ்வுகள், உதாரணமாக முதல் மனைவி நோய்வாய்பட்டு இறந்த போவதும், பின்னர் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்காக அவருக்கு அமைந்த வாய்ப்பும் படத்தில் காவியமாக அமைந்து விடுகின்றன. விடுதலைக்குப்பிறகு தனக்குக் கிடைத்த சட்ட அமைச்சர் பதவியை இந்தியாவின் அரசியல் சட்டம் வகுக்க எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதும், தன் கனவுச் சட்டமாகிய இந்து சிவில் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் நேரு பின் வாங்கிய விதமும், அதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ததும் வெறும் படக் காட்சிகள் அல்ல, வரலாற்று ஆவணங்கள், இந்து மதத்தை துறக்கவேண்டும் என்ற அவரது நெடுநாளைய கனவு அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிறைவேறுகிறது. அவர் புத்தமதத்தைத் தழுவுகிறார். புத்தமதத்தை தழுவும் காட்சிகளோடு படமும் நிறைவடைகிறது.
பரோடா சமஸ்தானத்தில் பணிபுரியச் செல்லும் அம்பேத்கர் மஹர் என்ற கீழ்சாதியைச் சார்ந்தவர் என்பதால் தங்க இடம் கிடைக்காமல் படும் அல்லலும் அவருடன் பணிபுரியும் கீழ்நிலை ஊழியர்கள் கூட தண்ணீர் தர மறுக்கும் சூழலும் எவருக்கும் கண்ணீர் வரவழைப்பவை.
வட்டமேசை மாநாடும், காந்தி d அம்பேத்கர் வாதங்களும், எரவாடா சிறையில் காந்தியின் உண்ணாவிரதப் போராட்டமும், பூனா ஒப்பந்தமும் படத்தின் முக்கிய மையமாகத் திழந்து போகிறது. பூனா ஒப்பந்தத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான அரசியல் உரிமையை தட்டிப் பறித்த காந்திக்கு அம்பேத்கர் விடுத்த முக்கியமான செய்தி என்ன தெரியுமா? ""இனியயாரு முறை இம்மாதிரியான உண்ணாவிரத ஆயுதத்தைப் பயன்படுத்தாதீர்கள்'' என்பதுதான். தீண்டாமை ஒழிப்பு விrயத்தில் காந்தி ஒரு வாய்ச்சொல் வீரர் என்று அம்பேத்கர் தனது ""தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும், காந்தியும் சாதித்தது என்ன?'' என்று நூலில் மிகத் தெளிவாக நிறுவுகிறார். இந்நூலைப் படித்த பின்னர் அம்பேத்கர் படத்தைப் பார்ப்போமானால் காந்தி மீதான அம்பேத்கரின் நியாயமான கோபஹ்கள் சரியானவையே என்று நாம் புரிந்து கொள்வோம். படத்தின் நாயகன் அம்பேத்கர். புனா ஒப்பந்தத்திற்குப் பின்னர் படத்தில் மட்டுமல்ல, நிஜமான வரலாற்று உருவாக்கத்திலும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு வில்லனாக காந்தியடிகள் மாறிப்போனதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது ஒரு வரலாற்று நாயகனை ஆவணப்படுத்தி வெளியிட்ட உள்ளங்களை வாழ்த்தினேன். மனமெல்லாம் நிறைந்திருந்தது.
(சமீபத்தில் நானும் எங்கள் வீட்டில் உள்ளவர்களும் தேசத்துரோகக் குற்றம் ஒன்றைச் செய்தோம் $$$$$ படத்தை விசிடிdயில் பார்த்தோம். நானும் என் குடும்பத்தினரும் சேர்த்து மொத்தம் ஆறுபேர். அம்பேத்கர் படத்தை திரையரங்கத்தில் பார்த்தபோதும் என்னோடு படம் பார்த்தவர்களின் எண்ணிக்கையும் மொத்தம் ஆறுபேர்தான். என் நண்பனிடம் $$$$$$ படத்தைப்பற்றிச் சொன்னேன். அதை வி.சி.டியில் பார்த்திருக்கக்கூடாது, திரையில் பார்த்தால்தான் $$$$$ உண்மையான எபெக்ட்ஸ் நமக்குத் தெரியும் என்றான். அம்பேத்கர் படத்தைப் பற்றியும் சொன்னேன். வி.சி.டி. எதுவும் கிடைக்குமா? என்றான்.
No comments:
Post a Comment