AIIEAவின் 60 வது ஆண்டில், அதன் 22வது அகில இந்திய மாநாடு புதுடெல்லியில் நவம்பர் 20 முதல் 24 வரை 5 நாட்கள் நடைபெற்றது. நமது கோட்டத்தின் சார்பாக பிரதிநிதிகள் மாநாட்டில், 7 பிரதிநிதிகளும் 11 பார்வையாளர்களும் பங்கேற்றனர்.
பேரணி : நவம்பர் 20 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வடக்கு மண்டல அலுவலகமுள்ள கன்னாட் பிளேசிலிருந்து பேரணி தொடங்கியது. 22வது மாநாட்டை குறிக்கும் வகையில் 22 மகளிர் தோழர்கள் AIIEA வின் செங்கொடியுடன் முன்னே அணிவகுக்க மண்டலம் கோட்டம் வாரியாக தோழர்கள் தங்கள் பதாகைகளுடன் கொடியேந்தி முழக்கங்களுடன் அணிவகுத்தனர். பேரணியில் வழி நெடுகிலும் பல்வேறு அமைப்புகளின் தோழர்கள் வாழ்த்தொலி எழுப்பி உற்சாகமூட்டிட, பேரணி 5.30 மணிக்கு மாநாட்டின் துவக்க கூட்டம் நடைபெறும் டெல்லியின் மிகப்பெரிய ராம்லீலா மைதானத்தை சென்றடைந்தது.
துவக்க விழா : AIIEA தலைவர் தோழர் அமானுல்லாகான் AIIEA கொடியை தோழர்களின் எழுச்சிமிகு முழக்கங்களுக்கு இடையே பறக்க விட்டார். அதைத் தொடர்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் AIIEAதலைவர் தலைமையில் பொதுக்கூட்டம் தொடங்கியது. மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் தோழர். M.K. ரெய்னா வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டை தொடக்கி வைத்து திரிபுரா மாநில முதல் அமைச்சர் தோழர் மாணிக் சர்க்கார் உரை ஆற்றினார்.
பெரும்பான்மை மக்களை பாதித்துள்ள விலை ஏற்றம் குறித்தும், உணவுப்பாதுகாப்பு குறித்தும் அவர் கருத்துக்களை முன்வைத்தார், பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, இடதுசாரி மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து இடது சாரிகளை வலுப்படுத்த தொடர்ந்து விரிவான இயக்கம் நடத்த வேண்டுகோள் விடுத்தார்.
BSNL ஊழியர் சங்க தலைவர் தோழர் V.A.N.. நம்பூத்ரி அவர்கள் பொதுத்துறைகள் எதிர்நோக்கும் சவால்களையும், 2G ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றியும் எடுத்துரைத்தார்.
அகில இந்திய மாநில அரசு ஊழியர்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் முத்து சுந்தரம் அவர்கள் அனைத்துத்துறை ஊழியர்களும் இணைந்து போராடுவதற்கான அவசியத்தையும், ஆதரவையும் எடுத்துரைத்தார்.
BEFI வங்கி ஊழியர் அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர். பிரதீப் பிஸ்வாஸ் அவர்களும், CITU வின் பொதுச்செயலாளர் தோழர். தபன்சென் MP, அவர்களும் தொழிலாளி வர்க்கம் எதிர்நோக்கியுள்ள சவால்களையும், கடமைகளையும் விளக்கினர்.
AIIEA பொதுச்செயலாளர் தோழர் K. வேணுகோபால் அவர்கள் நமது ஊதிய உயர்வு ஒப்பந்தம் பற்றியும், புதிய பென்சன் திட்ட பாதகங்கள் குறித்தும் நிதித்துறை சங்கங்களின் ஒத்துழைப்பு மற்றும் பிற அனைத்து சங்கங்களில் கூட்டு செயல்பாட்டின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.
தோழர் அனில்பட்நாகர் அவர்களின் நன்றியுரையுடன் மாநாட்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நிறைவுற்றது. பேரணியிலும் துவக்க விழா மாநாட்டிலும் 350 பெண் தோழர்கள் உட்பட 6000 தோழர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய அரங்கமாகவும், வரலாற்று சிறப்புமிக்க அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்ற அரங்கமாகவும் விளங்கிய தோழர் ஜோதிபாசு நகரில் அமைந்திருந்த ஸ்ரீபோர்ட் அரங்கில் (Sri Fort Auditorium) நவம்பர் 21 முதல் நவம்பர் 24 வரை 4 நாட்கள் பிரநிதிகள் மாநாடு நடைபெற்றது. 564 பேர் (539 + 25 பெண்கள் ) பிரதிநிதிகளாகவும், 940 பேர் (843 ஆண்கள் + 97 பெண்கள் ) பார்வையாளர்களாகவும் மொத்தத்தில் 1382 ஆண்களும் 122 பெண் தோழர்களுமாக 1504 பேர் பங்கேற்றனர். இம்மாநாட்டு அரங்கில்தான் கியூபா அதிபர் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள் NAM அமைப்பின் தலைமைப் பொறுப்பை தன்னிடமிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் ஒப்படைத்தார் இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க அரங்கில் AIIEA வின் 60வது ஆண்டில் 22வது மாநாடு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
60ம் ஆண்டு மணிவிழாவில் AIIEA வின் ஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான தோழர் சந்திர சேகர்போஸ், (வயது 88) உட்பட தோழர்கள் N.M. சுந்தரம், B.S. சர்மா, R.G. மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களுடன் கூடிய வாழ்த்துரையை வழங்கினார்.
மாநாட்டு நிகழ்வுகள் : AIIEA செயற்குழு சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட 84 பக்க அறிக்கை (28 பக்கங்கள் சர்வதேச நிகழ்வுகள் + 28 பக்கங்கள் தேசிய நிகழ்வுகள் +28 பக்கங்கள் நமது அரங்க நிகழ்வுகள்) மீது 5 பெண் தோழர்கள் உட்பட 54 தோழர்கள் விவாதம் மேற்கொண்டனர். பொதுச்செயலாரின் தொகுப்புரைக்குப்பின் அறிக்கை நிறைவேறியது.
12/2007, 12/2008, 12/2009 ஆண்டுகளுக்கான AIIEA வின் வரவு செலவு அறிக்கைகள், இன்சூரன்ஸ் ஒர்க்கர் இதழ், வரவு செலவு கணக்கு மற்றும் பொது இன்சூரன்ஸ், நிலைக்குழுவின் வரவு செலவு கணக்குகளும் ஏகமனதாய் அங்கீகரிக்கப்பட்டது.மாநாட்டில் 19 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேறின.
1. இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முலதன உயர்வை எதிர்த்தும் 2. றூணூளீ பொதுத்துறை கம்பெனிகளை இணைத்திட வலியுறுத்தியும், 3. ஸிணூளீ யில் புதிய பணி நியமனத்தை வலியுறுத்தியும், 4. எல்.ஐ.சியில் பதவி உயர்வுக் கொள்கையில் சீர்திருத்தம் கோரியும் 5. றூணூளீ யில் புதிய பணி நியமனம் கோரியும், 6. எல்.ஐ.சி ஊதிய உயர்வு ஒப்பந்தம் பற்றியும், 7. மகளிர் நிலை மேம்படுத்துவது பற்றியும் 8. முறைசாரா தொழிலாளர்களுக்கான உரிமைப் பற்றியும், 9. பட்டியல் இனத்தவர்கள் மேம்பாட்டுக்காகவும், 10. அரசின் பென்சன் கொள்கை பற்றியும், 11. நமது ஓய்வூதிய திட்டத்தில் முன்னேற்றங்கள் கோரியும் 12. புணூணூசிபு சங்க அங்கீகாரம் கோரியும், 13. கூட்டு பேர உரிமையை வலியுறுத்தியும், 14. றூணூளீ யில் பதவி உயர்வு கொள்கை குறித்தும், 15. தீவிரவாத தாக்குதல்களை கண்டித்தும், 16. விலைவாசி உயர்வு குறித்தும், 17. வீட்டு வசதிக் கடன் திட்டம் பற்றியும், 18. பகுதி நேர ஊழியர் பிரச்சனைகளுக்கு தீர்வு கோரியும் 19. அமைப்பு (நுrORGANISATIONS) குறித்தும், ஆக மொத்தம் 19 தீர்மானங்கள் ஏகமனதாய் நிறைவேறின.
புதிய பொறுப்பாளர்கள் தெரிவு : தலைவராக தோழர் அமானுல்லாகான் அவர்களும், பொதுச் செயலாளராக தோழர். வேணுகோபால் அவர்களும், பொருளாளராக தோழர். ரவி அவர்களும் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டனர். நமது கோட்ட பொதுச்செயலாளர் தோழர். ஆர். புண்ணியமூர்த்தி செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். நமது மண்டல தலைவர், தோழர் குன்னி கிருஷ்ணன் துணைத் தலைவர்களுல் ஒருவராகவும், மண்டல செயலாளர் தோழர். சுவாமிநாதன் துணைச் செயலாளர்களில் ஒருவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். மண்டல பிரதிநிதியாக தோழர். கிரிஜா தெரிவு செய்யப்பட்டார்.
மாநாட்டு சிறப்பு மலர் : மலரை தோழர் N.M. சுந்தரம் வெளியிடடார்.
நூல் வெளியீடு : AIIEA தலைவர் தோழர் அமானுல்லாகான் அவர்களால் எழுதப்பட்டுள்ள Understanding financial crisis என்ற நூலை தோழர் A.K. பத்மநாபன் வெளியிட தோழர் தோழர். சந்திரசேகர் போஸ் பெற்றுக்கொண்டார்.
இன்சூரன்ஸ் ஒர்க்கர் : மாநாட்டு வரவேற்புக் குழு சார்பாக ரூ. 1 லட்சம் இதழ் மேலாளர் தோழர் டேவிட் அவர்களிடம் வழங்கப்பட்டது. இன்னும் சில மாதங்களில் இதழ் பெங்களூரில் இருந்து வெளியிடப்பட மாநாடு ஏற்பளித்தது. அனைவரும் இன்சூரன்ஸ் ஒர்க்கர் வாங்குவதில் (100%) பிற சக சங்க தோழர்களையும் வாங்கி படிக்கவைப்போம்.
போபாலுக்காக நிதி உதவி : போபால் விr வாயு விபத்தில் பாதிக்கப்பட்ட, மரணமுற்ற குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி தொடர்ந்து போராடி வரும் சாதனா காரணி அமைப்புக்கு உதவிட போபால் கோட்ட சங்கத்திற்கு ரூ. 1 லட்சம் மாநாடு சார்பாக வழங்கப்பட்டது.
உலக தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை (Trade Union International) : வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் துறை சங்கங்களில் கூட்டமைப்பாக TUI யுடன் இணைந்திட (Affiliation) மாநாடு முடிவெடுத்தது.
கலை நிகழ்வுகள் : ஜன் நாட்டிய மிஞ்ச், கேரள சேர்ந்திசை குழு, பஞ்சாப் அரசின் பங்க்ரா நடனக் குழு, பிரபல ஹைதர் & ஹாசர் நிஸாம் குழுவினரின் சூஃபி வகை காவானி (Qawwalis in sufi style) பாடல்கள் இந்திய கலாச்சாரத்தை போற்றுவதாய் அமைந்தன.
நன்றியுரை : தோழர் அமானுல்லாகான் நிறைவுரைக்குப்பின் தோழர் சன்யால் மாநாட்டு தொண்டர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி கூற தோழர்களின் எழுச்சி மிகு முழக்கங்களுடன் மாநாடு 24ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நிறைவு பெற்றது.
AIIEA மணி விழா ஆண்டில் உடனடி வேலைத்திட்டம் :
2011ம் ஆண்டை அமைப்பை மேலும் வலுப்படுத்தும் ஆண்டாக (Year of organizations) அனுசரிக்க மாநாடு முடிவு எடுத்தது.
மாநாட்டில் வந்த விவாதங்களின் அடிப்படையில் கீழ்கண்ட வேலைத்திட்டம் முன் வைக்கப்பட்டது.
1.BSNL ஊழியர்கள் நிறுவனத்தை பாதுகாத்திட 3 நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் நடத்த உள்ளன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 1.12.2010 அன்று பொதுத்துறை பங்கு விற்பனை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படும் அன்று மதியம் இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். (ஆர்ப்பாட்டம் நடைபெற்றது)
2. வீட்டு வசதிக் கடன் திட்டத்தில் ஊழியர்களின் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் களையப்பட வலியுறுத்தி 21.12.2011 அன்று மதிய இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
3. 19.1.2011 அன்று ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமய தினத்தை ஒட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு, மெழுகு வர்த்தி ஏற்றுதல் உட்பட நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
4. 15.2.2011 முதல் 28.2.2011 வரை எல்.ஐ.சியில் வலிமை, வளமை குறித்தும், பொதுத்துறைகளை காப்பாற்ற வலியுறுத்தும் துண்டறிக்கைகள் (Phamplets) பொதுமக்கள் மத்தியில் வினியோகிக்கப்படும்.
5. 23.2.2011 அன்று பொதுத்துறை பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, தொழிற்சங்க உரிமைகள் உட்பட பல கோரிக் கைகள் வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி தொழிலாளர் பேரணி நடைபெறும். எனவே அதற்கு முன்பாக நாடு முழுதும் முக்கிய நகர் மையங்களில் கருத்தரங்கம் நடத்தப்படும். 23.2.11 அன்று மதிய இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும்.
6. புதிய பணி நியமனம் கோரியும் (பகுதி நேர ஊழியர் பிரச்சனைக்கு தீர்வு மற்றும் தற்காலிக ஊழியர் நிரந்தரமாக்கல்), சங்க அங்கீகாரம் கோரியும் இயக்கத்தை திட்டமிட AIIEA செயலகத்துக்கு அதிகாரம் தரப்பட்டது.
7. 13.5.2011ல் GIC தேசியமயதினம் கொண்டாடப்படும்.
8. ஜனவரி 2011 முதல் ஜுலை 2011 வரை AIIEA வின் வைர விழாவை அர்த்தமுடன் அனுசரிக்கும் வகையில் (Year of Eduction)
அ) அனைத்துக்கிளைகளிலும், கோட்ட அலுவலகத்திலும் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் தொழிற்சங்க வகுப்பு நடத்தப்படும். இதில் AIIEA வரலாறு மற்றும் காப்பீட்டு துறை எதிர்நோக்கும் சவலால்கள் பற்றி வகுப்புகள் எடுக்கப்படும்.
ஆ) 60 ஆண்டுகள் நிறைவுறும் 1.7.2011 அன்று AIIEA எல்லா மையங்களிலும் கொடி ஏற்றப்படும்.
இ) உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் AIIEA குடும்ப சங்கம விழாக்கள் உரிய முறையில் திட்டமிட்டு நடத்தப்படும். கலை நிகழ்ச்சிகள், சுவரொட்டி கண்காட்சி, வினாடி வினா நிகழ்ச்சிகள் போன்று திட்டமிடப்படும்.
ஈ) AIIEA விற்கான Website 1.7.2011ல் செயல்பட தொடங்கும் அதில் AIIEAவின் சுருக்கமான வரலாறு தரப்படும்.
கவனத்திற்குரிய மாநாட்டு விவாதங்கள் d விடைகள் d தகவல்கள் d வழிகாட்டல்கள் மற்றும் பல...
# Whlesome, handsome, Outstanding என்பதை குறிக்கும் வகையில் நாம் பெற்ற ஊதிய உயர்வை WHO என்று GIC தோழர்கள் கூறுகிறார்கள். WHO என்பதற்கான விடையாக AIIEA நிற்கிறது!
# AIIEA வின் வரலாற்றிலும், எல்.ஐ.சியின் நிறுவன வரலாற்றிலும் இந்த ஊதிய உயர்வு மிகச் சிறப்பானதாகும்; எத்தனை சதவீதம் என்பதை அவரவரே கணக்கிட்டு கொள்ளுங்கள் என்பதே அறிவுறுத்தல் ஆகும்.
# பொதுத்துறை பாதுகாக்கப்பட, காப்பாற்றப்பட இடதுசாரி சக்திகள் வலுப்படுத்தப்பட வேண்டும்... மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் நடைபெறும் தேர்தல் அம்மாநிலங்கள் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல... நாடு முழுதும் உள்ள தொழிலாளி வர்க்க நலன் சம்பந்தப்பட்டதாகும் எனவே இதற்கான விவாதங்கள் நாடு முழுதும் நடத்தப்பட வேண்டும்.
# கேரள இடதுசாரி அரசு தனது இந்த ஆட்சிக்காலத்தில் நலிந்து போன 8 ஆலைகளை பொதுத்துறையில் புனரமைத்துள்ளது. 2 புதிய பொதுத்துறை தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளது. தற்போது இவை 240 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குகின்றன.
# முறைசாரா தொழிலில் உள்ள பெண்களுக்கு ஒரு மாத சம்பளத்துடன் விடுப்பும் கேரள அரசால் வழங்கப்படுகிறது.
# உள்ளாட்சி அமைப்பில் 50% மகளிர் இடஒதுக்கீடு அமலாகிறது. கேரளாவில் 65% மக்களுக்கு ரூ.2 விலையில் மாதம் தோறும் 35 கிலோ அரிசி PDS திட்டத்தில் தரப்படுகிறது.
# இன்றைய நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக இடதுசாரி கட்சிகள்தான் வரவேண்டுமே தவிர, அதை BJP க்கு விட்டுத்தரக்கூடாது . ஏனெனில் பொருளாதார கொள்கையில் இருவரும் ஒருவரே... உலகம் முழுதும் இடதுசாரி அரசுகளை கவிழ்ப்பதில் CIA வின் பங்கை நாம் அறிவோம். அந்த கடமையை இங்கே இடதுசாரி முகமூடி அணிந்து மாவோயிஸ்டுகள், மார்க்ஸிடுகள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்ட மார்க்ஸிஸ்ட் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பகலில் மம்தா கட்சியினராகவும், இரவில் மாவோயிஸ்டுகளாகவும் இவர்கள் செயல்படுகிறார்கள்.
# தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் முன்னணி பங்கு வகித்து செயல்படும் SZIEF ற்கு பாராட்டு தெரிவித்த AIIEA மாநாடு, மகளிர் அரங்கிலும் ஒருங்கிணைப்புகுழுவின் செயல்பாடுகளை பாராட்டியது.
# இன்று பொதுத்துறைகளில் முக்கிய எதிரியாக IFC எனப்படும் சர்வதேச நிதிமூலதனம் செயல்படுகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியுற்ற போது, இந்தியாவை காப்பாற்றியது பொதுத்துறையில் செயல்படும் வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களுமே, இன்று IFC, பொதுத்துறையை விழுங்கி ஏப்பம் விட ஒபாமா வடிவில் வந்து கொண்டிருக்கிறது. எச்சரிக்கையுடன் செயல்படுவோம்.
# பொதுத்துறை பாதுகாப்பு இயக்கத்தில், பொதுத்துறை இன்சூரன்ஸ் பாதுகாப்பு இயக்கத்தில் முகவர்கள், பாலிசிதாரர்கள் உட்பட பொதுமக்களை இணைப்போம். பத்து லட்சம் முகவர்கள், 30 கோடி பாலிசிதாரர்கள் கொண்ட பெரும்படை ஒன்றே போதும், நம்மால் இன்தியாவை பாதுகாத்துவிடலாம், தனியார் நிறுவனங்களை முறியடித்து விடுவோம்!
# அமெரிக்காவின் ஆண்டு GDP 1.5% ஆகும். 9.5% பேர் வேலைவாய்ப்பற்று உள்ளனர். இந்தியாவில் றூம்P 8% ஆகும். இங்கே வேலை வாய்பற்றோர் 9.4% ஆகும். ஆனால் அங்கே மக்கள் தொகை..... கோடி, இங்கே 120 கோடி பேர்.
# உலகத்தின் 10 டாலர் பிலியனர்களில் 4 பேர் இந்தியாவில் உள்ளனர். 2008ல் 27 பேர் 2009ல் 52 பேரும், 2010ல் இது 69 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்திய மக்கள் 77% பேர் அதாவது 88 கோடி மக்கள் தினசரி ரூ. 20 வருமானம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள்.
# இந்திய மக்கள் அனைவருக்கும் மாதம் தோறும் 35 கிலோ அரிசி அல்லது கோதுமை ரூ. 2 விலையில் கொடுக்க அரசுக்கு ஏறக்குறைய 75,000 கோடி ரூபாய் ஆகும். இதை நினைத்தால் நிறைவேற்ற அரசால் முடியும்.
# FCI கிடங்குகளில் எலிகளை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தும் அரசு, உச்சநீதிமன்ற திட்டுதலுக்கு பிறகும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று எதற்கும் வாய்திறக்காத (2G ஊழல், காமன்வெல்த் ஊழல்) பிரதமர் பேசினார்.
# செல்வந்தர்களுக்கு 5,80,000 கோடி ரூபாய் சலுகை வழங்கும் மத்திய அரசு, இந்நாட்டு ஏழை மக்களுக்கு 75,000 கோடி ரூபாய் செலவிட முன்வராதது ஏன்?
# UPA I அரசுக்கும் UPA II அரசுக்கும் உள்ள வேறுபாடு இடது சாரி ஆதரவு அவசியம் எனில் என்ன நிகழும் என்பதற்கு உதாரணம் ஆகும். இரண்டாவது ஆட்சிக் காலத்தில் 40,000 கோடி ரூபாய் அளவிற்கு பொதுத்துறை விற்கப்பட்டது, பெட்ரோல் விலை நினைத்தபோதெல்லாம் ஏற்றப்படுகிறது.
# முதல் ஆட்சியில் நூறு நாள் வேலை வாய்ப்பு மூலம் 3.7 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அட்டை தரப்பட்டது. பெட்ரோல் விலை கட்டுப்பாட்டில் இருந்தது... பொதுத்துறை 5 ஆண்டு முழுதும் பாதுகாக்கப்பட்டது.
# ஒட்டு மொத்த மக்களுக்காக போராடக்கூடியது தொழிலாளி வர்க்கம். ஆனால் முதலாளிய ஏகாதிபத்தியம் சொகுசாக உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சும்; கவர்ச்சிகரமாக உழைப்பைச் சுரண்டும்; கொலை d கொள்ளையை கொள்கையாக கொண்டது; நேரடியாக யாருடனும் மோதாமல் பல பெயர்களில் மோதும்... ஒப்பந்த, தற்காலிக வேலை முறையை ஊக்குவிக்கும்... இந்தியாவில் 1981d82ல் மொத்த உற்பத்தி பொருளின் மதிப்பில் 32% கூலியாக தரப்பட்டது; ஆனால் அது தற்போது 10% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
# இன்று பிரான்சில் மாபெரும் தொழிலாளர் எழுச்சி ஏற்பட்டுள்ளது; தொழிலாளிகளுக்காக மாணவர்கள் களம் இறங்கினர். பிரிட்டனிலும் போராட்டம் தான். இப்படி பல நாடுகளில், இந்திய தொழிலாளி வர்க்கம் மட்டும் விதிவிலக்கல்ல செப்.7ல் 10 கோடி பேர் பங்கேற்றனர். பிப்ரவரி 23 பாராளுமன்றம் நோக்கிய பேரணி இதை எதிரொலிக்கட்டும்!
# வங்கித்துறையில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருந்த SBI தற்போது ஏறக்குறைய தனியார் மயமாகிவிட்டது. 51% மட்டுமே அரசு பங்காகும், இதில் 2% கைமாறினால் தனியார் மயமாகி விடும்.
# இன்று 12% தொழிலாளர்களே உற்பத்தி துறையில் (Manufacture) உள்ளனர். தொழிலாளி வர்க்கத்தில் 10% பேர் மட்டுமே தொழிற்சங்கங்களில் உள்ளனர்.
# ஒபாமா தன் நாட்டு பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளத்தான் இந்தியா வந்தார்; அமெரிக்காவுக்குத்தான் இந்தியா தேவையே தவிர, இந்தியாவிற்கு அமெரிக்கா தேவையில்லை... ஆனாலும் ஒபாமாவை விட மூத்தவரான மன்மோகன்சிங்கை ஒபாமா ஏதோ மகனை தட்டிக் கொடுப்பது போல தட்டிக் கொடுப்பது சகிப்பதாக இல்லை.
AIIEAவின் ஒவ்வொரு மாநாடும், ஏதேனும் ஒருவகையில் வரலாற்றுச்சிறப்பு மிக்க மாநாடாக - வெற்றி மாநாடாகவே அமைந்துள்ளன.
மீடியா முழுதும் தொழிலாளி வர்க்கத்தை, பொதுத்துறை அமைப்புகளை கேவலப்படுத்த துடிக்கின்றன நமக்கு Food Coupon கொடுத்த போது "Your Money, Their Lunch" என்று எழுதின (The Mirror) ""கட்டுப்பாட்டை கொணர இவ்வளவு செலவா'' என்றன, AIIEA அன்றும் இன்றும் என்றும் ஊழியர்கள் எல்லா வகையிலும் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மையை கடைபிடிக்கவே போதித்து வருகிறது. தனியார் மய போட்டியை எதிர்கொள்ள ஊழியர்களை தயாரித்ததே AIIEA தான். அதனால்தான் வங்கி உட்பட பிறதுறையை தனியாருக்கு திறந்துவிடப்பட்ட போதும், LIC யும், GIC யும் முற்றிலும் பொதுத்துறையாக உள்ளது.
அன்று 1டி கோடி கையயழுத்து இயக்கம் நடத்தியது; இன்று பிரதமருக்கு 18 லட்சம் தபால் அட்டைகள் பாலிசிதாரர்களை அனுப்பச் செய்தது. மற்றும் 121 ராஜ்ய சபா உறுப்பினர்களை சந்தித்தது; 340 லோக்சபா உறுப்பினர்களை சந்தித்தது. எந்நேரமும் தாக்கலாக உள்ள 2 திருத்த சட்ட மசோதாக்களை எதிர்த்திட விழிப்புடன் உள்ளது.
LIC யில் 3, 4ம் பிரிவு ஊழியர் 67508 பேர், இதில் நமது சங்கத்தில் 77.78%, எச்சங்கமும் சாராதோர் 3675 பேர் அதாவது 5.45%. நம் சங்கத்தில் இணையும் தகுதியும், நேர்மையும் படைத்த அனைவரையும் இணைக்க முயல்வோம்... வெல்வோம்.
நாம் ஒரு நாள் நடத்தும் வேலை நிறுத்தத்தின் பாதிப்பு, அடுத்த நாள் நம்மாலாலேய நிறைவாகி விடும். ஆனால் 7 லட்சம் பேர் பணிபுரியும் வங்கி நடத்தும் ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒரு மாதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனாலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். எனவே வேலை நிறுத்தம் என்பது எப்படி, எப்போது என நடத்தப்படவேண்டும். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதும் கூட வெற்றியாக மாறும் என்பதற்கு நமது 31.3.10 வேலை நிறுத்த விக்கல் ஒரு சான்றாகும்.
நமது சங்கம் 110 கோட்டங்களிலும் உறுப்பினர்களை கொண்டது. 110 கோட்டங்களிலும் பதிவு பெற்றது. அண்மையில் வழக்கு ஒன்றில் இந்த விபரங்கள் நிர்வாகத்தால் நீதி மன்றத்திற்கு தரப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நமது சங்கம் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கான இயக்கம் விரைவில் நடத்துவோம்.
# உலகின் மிகப்பெரிய வீடு 4000 கோடி ரூபாயில் 27 மாடியாக அம்பானியால் கட்டப்படுகிறது. இவர் தனது மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக விமானம் ஒன்று பரிசளித்தார்; இவர் வாழும் நாட்டில்தான் 77% மக்கள் ஒரு நாளைக்கு ரூ. 20ல் வாழ்கிறார்கள்?!?
# பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா 50 லட்சம் பேரின் வேலைவாய்ப்பை இழந்தது. ஆனால் சீனா தனது உள்நாட்டு கட்டமைப்புக்காக செலவு செய்து, உள்நாட்டு மக்களின் சந்தை தேவையை பூர்த்தி செய்து சமாளிக்கிறது. அமெரிக்காவானது ஜப்பான், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் பெரும் கடன் வாங்கியுள்ளது. ஆசிய நாட்டு மக்கள் சேமிப்பை கலாச்சாரமாக கொண்டவர்கள்; அமெரிக்க மக்கள் அடுத்தவனிடம் கடன் பெற்றாவது இன்பம் துய்ப்பவர்கள். நம்மையும் அப்படி ஆக்கத் துடிக்கிறது அமெரிக்கா.
# இந்திய இடது சாரிகளால் அதிகம் பயன் பெற்றது LIC யும் , எல்.ஐ.சி ஊழியர்களுமே என்பது அன்று முதல் இன்று வரை வரலாராய் தொடர்கிறது.
வர்த்தகத்தில் சுதந்திரம் வேண்டும்... அரசு தலையீடு கூடாது. என்றெல்லாம் கூறும் பெருந்தனவான்கள் அரசிடம் Bailout கேட்பது எதற்கு?
PL Encashment ற்கு GIC யில் HRA ம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, 15 நாள் ஈட்டிய விடுப்பு கழிப்பை ரத்து செய்ய AIIEA, LIC நிர்வாகத்திடம் பேச உள்ளது.
# புதிய பென்சன் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ஓய்வு பெற்ற பின் எவ்வளவு பென்சன் வரும் என்று இப்போது ஊகிக்கக்கூட முடியாது. எனவே புதிய பென்சன் திட்ட பாதிப்புகளை முறியடிக்க நிதித்துறையில் மீண்டும் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த புணூணூசிபு முயலும். இன்றைய பென்சன் திட்டமும், புதிய பென்சன் திட்டத்தால், போதிய நிதி தொடராததால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
பென்சன் திட்டத்தில் விடுபட்டோர் சேர மற்றுமோர் வாய்ப்பு (Options) பெற முயல்வோம்.
100% Neutrilisation பெறவும், பென்சன் update செய்யவும் அரசை நாட வேண்டியுள்ளது. இதனால் நமக்கு கிடைக்கும் பலன் 3 கோடி ரூபாய் மட்டுமே; ஆனால் மெடிக்கிளெம் திட்டத்தில் ஓய்வூதியருக்கு சலுகை பெற்றதன் மூலம் நமக்கு கிடைத்தது ரூ. 24 கோடி; இதற்கு நாம் அரசிடம் சொல்லவேண்டியதில்லை.
அதேபோல் தான் Food Coupon விrயத்திலும் ஆகும். பெட்ரோலா, உணவுக் கூப்பனா எனும் போது LTC போல பிரச்சனை வராமல் இருக்க Food Coupon சிறந்தது என AIIEA முடிவு செய்தது.
# HFL என்பது LIC நிர்வாக தலைமையில் இருப்பினும் அது ஒரு தனியார் நிறுவனமே. நமது வீட்டு வசதிக் கடன் திட்டம் அங்கே மாற்றப்பட்டதில் பல்வேறு நன்மைகள் இருப்பினும் இன்னும் பிரச்சனைகள் முழுமையாக தீரவில்லை உரிய கால அவகாசத்திற்கு பின்னும், சரி செய்ய முடியாவிட்டால் அதற்கான தீர்வு கானவும் AIIEA திட்டமிடும்.
# P&GS திட்டத்தில் நிறுவனத்திற்கு லாபம் கிடையாது. கணக்கீடுகள் (A/C) மற்றும் விறப்னை (MKTG) மையப்படுத்தப்பட்டாலும், பிரிமிய வசூல் கிளைகள் அளவில் தொடர பேச்சுவார்த்தை மூலம் வலியுறுத்துவோம்.
# தற்கால ஊழியர் நிரந்தரமாக்கும் பிரச்சனையில் பிரபாவதி Vs தமிழ்நாடு தற்கால ஊழியர் அமைப்பின் வழக்கு சாதகமாக இல்லை. பேச்சுவார்த்தை மூலம் NIT Award ல் சாதித்தது போல முடியவில்லை எனினும் முயற்சிகள் தொடரும்.
# PLLI என்பது 25% பேருக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலையில் அனைவருக்கும் கிடைக்க AIIEAமுயல்கிறது வரும் காலங்களிலும் முயலும்.
நாம் 8/07ல் 40% கேட்டு கோரிக்கை சாசனம் சமர்ப்பித்தோம்; 12/07ல் தான் ஆறாவது ஊதியக்குழு 40% தரலாம் என பரிந்துரைத்தது. நமது ஊழியர்களே நம்பிக்கையற்று இருந்தனர். ஆறாவது ஊதியக்குழு 21-27-37-40 என 4 சதவீத அமைப்புகளில் சம்பள விகிதம் நிர்ணயித்தது.
நமது துறையில் கூட உதாரணத்திற்கு 15-25 என பேசப்பட்ட போது நாம் 20 என எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்படிப்பட்ட வெறிறியையே பெற்றுள்ளோம்.
சென்ற ஊதிய ஒப்பந்தம் போது 0.01% DA வில் கூடுதலாக நாம் பெற்ற போது அதன் மூலம் இன்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் மாதம் ரூ. 750 கூடுதலாக கிடைக்கிறது.
இன்றைக்கு நாம் 5% பிரிமியம் சம்பளத்துக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்ற புதிய சூத்திரத்தை நிலை நாட்டியிருக்கிறோம். இனி எந்த வங்கி எல்லையும் நம்மை பாதிக்க முடியாது. இது மாபெரும் வெற்றி. போபாலில் ஒரு AIIEA தோழர் 2012 ஊதிய உயர்வுக்காக இன்றே ரூ. 5000 லெவி கொடுத்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
7 லட்சம் பேர் உள்ள வங்கியில் 17.5-15-13.5% பின் 17.5% என ஆன போது 64,000 பேர் மட்டுமே உள்ள நாம் 17.5%ஐ தாண்டி விட்டோம்; அத்துடன் GIC ஐயும் 17.5% கொடுக்காமல் தடுத்து நிறுத்தி, நாம் பெற்ற பின் அவர்களை தரச்செய்தோம்!
# Management Agenda வான Mobility, ACL, 1/2 day CL, 10Min, Permision Cut ஆகியவற்றை ஏற்காமல் நாம் நம் Agenda வை மட்டுமே பெற்றோம்.
புதிய பணி நியமனம் ஒன்றே Mobility க்கும் தீர்வு என வலியுறுத்தினோம். எனவே விரைவில் புதிய பணி நியமனம் வரும்.
# ஊனமுற்றவர்க்கு படி (PH Allows) உயர்வு பெற புணூணூசிபு நடவடிக்கை எடுத்து வருகிறது.
# வெறும் 4 நாள், Extra Cooperation Withdrawalமூலம் 1.38% ஹிய இழப்பு ஏற்பட்டது. நிர்வாகம் எழுத்து மூலம் 17.5%ற்கு கூடுதலாக பெற முயற்சிப்போம் என தெரிவித்தது. இதுவும் ஒரு போராட்ட முறை... வெற்றி தான்.
Joint Front மூலம் நாம் தனிபட்ட முறையில் பெரிய சங்கமாக இருந்தாலும், அரசுக்கு எதிராக அனைத்து சங்கங்களின் ஆதரவை திருப்ப முடிந்தது.
இதுதான் AIIEA
60 ஆண்டு கால AIIEA வரலாறு நமக்கு பல பெருமைகளை தருகிறது.
# உலகத்தின் சக்தி மிக்க பிரதமராக அன்று எமர்ஜென்சி அறிவித்த இந்திரா காந்தியே நம்மீது கோபப்பட்டு நொந்து போனார். LIC ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்தது தவறு என பகிரங்கமாக கூறினார். 1974ல் எல்.ஐ.சி. சட்டம் திருத்தப்பட்டது.
# பொதுத்துறை ஊழியர்களுக்கும் போனஸ் பெறும் உரிமை உண்டு என நிலை நாட்டியது AIIEA
பணிகளை மையப்படுத்தல் மூலம், வேலை வாய்ப்பை பறிக்க ஆரம்ப காலத்தில் ராட்சச கணினிகளை புகுத்த நிர்வாகமும், அரசும் முயன்ற போது அதை இலாகோ விஜில் மூலம் தடுத்தது AIIEA; அதே நேரத்தில் தனியார் கம்பெனிகளின் போட்டியை எதிர்கொண்டு பல கோடி பாலிசிதாரர்களை தக்க வைக்க தன்னுடைய ஊழியர்களையும் பாதுகாத்துக் கொண்டு கணினி மயமாவாதை படிப்படியாக அனுமதித்து, தனது முடிவு சரியே என நிரூபித்துவருவது AIIEA
# எல்.ஐ.சியை 5 ஆக கூறுபோட பாராளுமன்றத்தில் மசோதா தாக்கலான போது சுனில் மைத்ரா மூலம் முயற்சி செய்து ராஜதந்திர முறையில் மசோதா தாக்கல் ஆகாமல் கடைசி மசோதாவாக பட்டியலிடச் செய்து நேரம் இன்றி தள்ளி வைத்தது. ஆனால் அடுத்த தேர்தல் வரும் போது ராஜீவ் காந்தியே இந்த மசோதா வராது என சுனிலுக்கு கடிதம் எழுதச் செய்தது AIIEA ஆகும்.
# தனியார் மய வரவை 10 வருடம் தடுத்து நிறுத்தியது AIIEA.
# இன்றும் திருத்த மசோதக்களை தனது ஆழமான கருத்துக்களை உரிய இடங்களில் முன்வைத்து தடுத்து வருவது AIIEA.
# இந்திய தொழிற்சங்கங்களில் 80% ஊழியர்களை பிரநிதித்துவபடுத்தும் ஒரே சங்கம் AIIEA.
# தனது உறுப்பினர்களை அரசியல் விழிப்புணர்வுடன் ஒன்றுபடுத்தி இருப்பது AIIEA.
# எல்.ஐ.சி. என்ற நிறுவனத்தை உருவாக்க போராடி வெற்றி பெற்றது AIIEA.
# 60 வயதானாலும், என்றும் 16 வயது மார்க்கண்டேயனாகாகும் அமைப்பை இளமைத் துடிப்புடன் பராமரித்து செயல்படுவது AIIEA
# நமக்கு சுயமரியாதை தந்த, நேர்மையை போதித்த மணி விழா காணும் AIIEA வை நாம் கண்ணின் மணி போல என்றென்றும் காப்போம்.
# ஒவ்வொரு மாதம் சம்பளப் பட்டியலை கண்ணுறும் போதும் AIIEA விற்கு வாழ்த்து கூறுவோம்.
# ஒவ்வொரு மாதம் Food Coupon பெறும் போதும், 83 கோடி இந்திய மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாயில் வாழ்வை நகர்த்துகிறார்கள் என்ற உறுத்தலோடு, இந்த சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை கொணர, இடது சாரி மாற்றை கொணர பாடுபட சபதம் ஏற்போம்...
# AIIEA வின் வரலாற்றை நாமும் அறிவோம்; பிறருக்கும் அறிமுகப்படுத்துவோம்.. வரலாற்றில் இடம் பெறுவோம்.
ஊதியம்... அன்றும்... இன்றும்!
250 கம்பெனிகள் இணைந்து எல்.ஐ.சி. உருவானது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான சம்பளம். பணி நிலைமை... இதை சமச்சீராக்குவது பெரிய பணியாக இருந்தது.
5.11.1956ல் AIIEA முதல் அகில இந்திய வேலை நிறுத்தத்தை நடத்தியது.
கோரிக்கை என்ன தெரியுமா Boycott salary scale! அன்றைய நிதி அமைச்சர் T.T. கிருஷ்ணமாச்சாரி.
நமது மத்திய அலுவலக Life Man ம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்.
A.K. கோபாலன், ஹிரேன் முகர்ஜி ஆகிய இடது சாரி எம்.பி.க்கள் தலையிட்டனர்.
1957 மே மாதம் திருத்தப்பட்ட ஊதிய விகிதம் தரப்பட்டது.
15 லட்சம் ரூபாயாக இருந்த Add. Cost ரூ. 75 லட்சம் ஆனது.
அன்று மத்திய அரசின் Pay Scale ரூ. 125 ஆக இருந்தது.
நஸ்ரத் இன்சூரன்ஸ் நிறுவன ஊதியம் மாதம் ரூ. 10/d, பொதுவாக ரூ. 50 d ரூ. 100 வரை இருந்தது.
Class III ல் 16 Gradeகள் இருந்தன AB.O.,D.O.,Z.O,,C.O., வில் வெவ்வேறு ஊதியம்; ஊருக்கு ஊர் உதியம் மாறும், இவை அனைத்தும் சமனப்படுத்தல் பெரும் பணியாக இருந்தது.
1947ல் தீவிரமாக போராடும் சங்கங்களை அடக்கிட IDACF வந்தது.
24.1.74ல் எல்.ஐ.சி ஊழியர்களின் உரிமைகளை பறித்திட சட்டத்திருத்தம் வந்தது.
நமது சங்க அங்கீகாரம் ரத்தானது; போனஸ் உரிமை சட்டப்படி பறிக்கப்பட்டது.
1951d61 வரை போனஸிற்காக சட்டரீதியாக போராடி பெற்றோம்.
DA என்பதை பெற்றோம். அதை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தோம். பின்னாளில் படிப்படியாக பல படிகள் இணைந்தது.
நாம் வாங்கும் ஒவ்வொரு பைசாவும் AIIEA வின் போராட்டத்தில் வந்ததே. இது அனைத்து வகுப்புகளுக்கும் (CLASS) பொருந்தும்.
History to be Told; Retold" d என்பது அனுபவமொழி.
வரலாறு படிப்பது சலிப்பாக இருக்கலாம். வரலாறு படிக்காமல் வரலாறு படைக்க முடியாது.
வாருங்கள் தோழர்களே வரலாற்றை படைப்போம்!
No comments:
Post a Comment