கோவை அருகே நாகராஜபுரத்தில் தலித் மக் களின் குடியிருப்பை மறைத்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் தீண்டாமைப் பெருஞ்சுவரைக் கட்டி யிருந்தனர். இப்பிரச்சனையைக் கையிலெடுத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அந்தச்சுவரை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி யிருந்தது. இச்சுவர் குறித்து தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்தச் சுவரை இடித்து அரசு அதிகாரிகள் இரு இடங்களில் வழி ஏற்படுத்தித் தந்தனர். நாகராஜபுரம் தலித் மக்கள் இந்நடவடிக் கையால் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கோவை அருகே வேடபட்டி பேரூராட்சியில் உள்ளது நாகராஜபுரம். இங்கு அருந்ததியர், நரிக்குறவர் எனப்படும் மராட்டா இன மக்களுமாக சுமார் 500 தலித் குடியிருப்புகள் உள்ளன. இங்கு நஞ்சுண்ட கவுண்டர் தோட்டம் இருந்த நிலத்தை விஜயகுமார், சேட்டன் சர்மா ஆகிய இரண்டு ரியல் எஸ்டேட் அதிபர்கள் வாங்கினர். இந்த இடத்தை மனைப் பிரிவுகளாக்கி விற்பனைக் கான அனுமதி பெற்றனர். ஆனால் மனைப் பிரிவு களாக்கி விதிமுறைப்படி பேரூராட்சி நிர்வாகத்தி டம் ஒப்படைத்த பூங்காவிற்கான ரிசர்வ் சைட்டில் எந்த அனுமதியும் பெறாமல் 1000 அடி நீளத்திற்கு 10 அடி உயரத்தில் சுவரை எழுப்பிவிட்டனர். அருகில் தலித் மக்கள் குடியிருப்பதால் தங்களது நிலம் விலைபோகாது என்ற தீண்டாமை எண் ணத்துடன் இந்த பிரம்மாண்ட சுவரைக் கட்டி யிருந்தனர்.
இப்பிரச்சனையை அறிந்த கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் சம் பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார் பில் தீண்டாமைச் சுவரை அகற்றி, பொது மக்க ளின் போக்குவரத்து உரிமையை நிலைநாட்டு மாறு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து வெள்ளியன்று தீண்டாமைச் சுவரை கோவை வடக்கு தாசில்தார் சுந்தர்ராஜன், தெற்கு தாசில்தார் லட்சுமி காந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர் சுவரை அகற்றுவதாக உறுதி அளித்துச் சென் றனர்.
இதன்படி சனிக்கிழமையன்று காலை 11 மணி யளவில் வீரகேரளம் பேரூராட்சி செயல் அலுவலர் துரைமணி தலைமையில் அரசு அதிகாரிகள் பொக்லின் இயந்திர உதவியுடன் இடிக்க வந்தனர். சுவரின் மேற்குப் புறத்தில் 30 அடியை முதலில் இடித்து அகற்றி வழி ஏற்படுத்தினர். பின்னர் சுவற்றின் கிழக்குப் புறத்தில் 23 அடியை இடித்து அகற்றினர். சுவரை இடிக்க பொக்லின் இயந்திரம் வந்ததை அறிந்து தலித் பெண்கள் திரளானோர் திரண்டனர்.
சுவரை இடித்து பாதை கிடைத்ததைக் கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மீண்டும் கிடைத்த பாதை வழியாக சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் துள்ளிக் குதித்தும், பெரும் உற்சாகமுடனும் ஒடி விளையாடினர்.
தீண்டாமைச் சுவர் அகற்றப்படும் போது தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப் பாளர் யு.கே. சிவஞானம், மாநிலச் செயலாளர் வி.பெருமாள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அ.ர.பாபு, பொருளாளர் ஆர்.துரைமணி மற்றும் ப.க.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு
வேடபட்டி தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி நீண்டகாலம் வலி யுறுத்தி வந்தது. இந்தக்கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்து தீண்டாமைச் சுவர் சனிக்கிழமையன்று இடிக்கப் பட்டது. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியரிடம் நேரில் நன்றி!
தீண்டாமைச்சுவர் இடிப்பு குறித்து கருத்து தெரிவித்த யு.கே.சிவஞானம், உடனடியாக கோவை மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டதை வரவேற்பதாகத் தெரி வித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் பு. உமாநாத் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் வீரகேரளம், வேடபட்டி பேரூராட்சி அதிகாரி கள் மற்றும் வருவாய்த் துறையினருக்கும் நன்றி தெரிவிப் பதாகவும் கூறினார். பின்னர் நண்பகல் ஒரு மணியளவில் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் மற்றும் வி.பெருமாள் உள்ளிட் டோர் மாவட்ட ஆட்சியர் பு.உமாநாத்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment