முதலாளிகளின் பேச்சையே
நமது மூச்சாக நம்பியவர்கள்
மதியோரின் பசிபோக்க
மாடாய் உழைத்தவர்கள்
கொத்தடிமை குகைக்குள்
கொடுமைகளை அனுபவித்தவர்கள்
உழைப்பால் காலத்தை கழித்த
உத்தம ராஜாக்கள்
விதியை நம்பிவாழ்ந்தவர்கள்
சதியால் வீழ்த்தபட்டவர்கள்
அரிவாள் சுத்தியுடன்
செங்கொடி பிடித்தவர்கள்
கூலிக்காக குரல் கொடுத்த
தினக்கூலி போராளிகள்
தீயுக்கு இரையான
தென்கிழக்கு சிங்கங்கள்
வெண்மணியின் இருளைபோக்கி
வெளிச்சத்தைதந்த கதிரவர்கள்
நீங்காது நினைவில் வாழும்
நிர்ணயிக்கமுடியாத பொக்கிrங்கள்
டிசம்பர் இருபத்தைந்தாம் நாளை
வெண்மணிக்கு முகவரியாக்கி தந்தவர்கள்
தீயில் வெந்திறந்தாலும்
திரும்பிபார்க்க வைத்தவர்கள்
அப்படிப்பட்ட அஞ்சாநெஞ்சங்களுக்கு
அஞ்சலிசெலுத்திட அனைவரும்
அலைகடலெனெ திரண்டுவாருங்கள்
அன்பான வேண்டுகோளையேற்று
சங்கமிப்போம் முக்கடலாய்
சரித்திரம் படைப்போம் ஒன்றுபட்ட மக்களாய்
-ஆ. பழனிச்சாமி,
தின ஊழியர்
எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம்,
தஞ்சாவூர்.
No comments:
Post a Comment