Tuesday, December 21, 2010

சமூகநீதியை பறிக்கும் சதி முயற்சி

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை அகில இந்திய அளவில் மருத்துவ கவுன்சிலிங் நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் தமிழகம் உட்பட பல் வேறு மாநிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.

அரசியல் சட்டத்தின்படியே மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன என்றும், மாநிலங்களின் அதிகாரம் குறைவாக உள்ளது என்றும் விமர்சனம் உள்ளது. இந்நிலையில் சுதந்திரத்திற்கு பிறகு மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி மாநிலங்களின் அதிகாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கத் துவங்கியது. அரசியல் சாசனத்தின்படி கல்வி என்பது மாநிலங்களின் பட்டியலில் இருந்தது. அவசர நிலைக்காலத்தின்போது மத்திய அரசு இதை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது. இப்போது உயர்கல்வி என்பது கிட்டத்தட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியுள்ளது.

எனவேதான் பொறியியல் பாடத்தை தமிழில் கற்பிக்க மாநில அரசு முன்வந்த போது அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முட்டுக் கட்டை போட்டது.

இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அகில இந்திய அளவில் பூர்த்தி செய்வது என்றும், அகில இந்திய அளவில் நுழை வுத்தேர்வு நடத்துவது என்றும் மருத்துவ கவுன் சில் முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு உள் ளிட்ட மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித் தன. மத்திய அரசும் இப்போதுள்ள முறையே தொடரும் என்று அறிவித்தது. ஆனால் மருத்துவ கவுன்சிலில் முறையீட்டின்பேரில் நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் தாழ்த்தப் பட்ட - பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலன் மட்டுமின்றி, இடஒதுக்கீடும் பாதிக்கப்பட்ட தால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் 69சதவீத இடஒதுக்கீடு தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு என்பது இடஒதுக் கீட்டை மறுப்பதாகும்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு 2010 இடங்கள் உள்ளன. நடப்பு ஆண்டில் திறந்த போட்டிக்கான இடங்கள் 460ல் பிற்படுத்தப்பட் டோர் 300, மிக பிற்படுத்தப்பட்டோர் 72, தாழ்த் தப்பட்டோர் 18, முஸ்லிம்கள் 16 என்ற வகையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. பிளஸ்- 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப் படையிலேயே இந்த இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் அருந்ததியர் மற்றும் முஸ்லிம் களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு 15சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. நீண்ட சமூக நீதிப் போராட் டத்தின் விளைவாக பெறப்பட்ட இந்த பலனை தட்டிப்பறிக்கும் விதத்திலேயே அகில இந்திய நுழைவுத்தேர்வு என்பது புகுத்தப்படுகிறது.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் பெரும்பகுதி இடங்களை நிர்வாக ஒதுக்கீடு என்ற பெயரில் விலைக்கு விற்றுவிடுகின்றன. எனவே அவர் களுக்கு பாதிப்பு ஏற்படப்போவதில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல் லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர் களே இதனால் பாதிக்கப்படுவார்கள்.

எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதோடு, இப்போதுள்ள முறையைப் பாதுகாக்க மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். இதற்கு தமிழக மக்களின் பொதுக் கருத்தை திரட்டு வதும் மாநில அரசின் பொறுப்பாகும்.

No comments:

Post a Comment