Tuesday, January 4, 2011

அம்வே கொள்ளை - - நம்மால முடிஞ்ச நல்ல காரியம்


"AMWAY "  இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு  அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.  இந்த நிறுவனத்தில்  உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது  தான்MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம்  முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை  சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.

ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம்  ஒன்று "இந்த தொழில்  செய்தால் நீ  செல்வந்தன்  ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக  கொள்ளையடிக்கும்  கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY"  இதுவரை தமிழ்நாட்டில் பலMLM  நிறுவனங்கள்  பலவிதமான வித்தைகளைக்காட்டி  கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY  நிறுவனம் கொஞ்சம்  வித்தியாசமானது,  சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல். 

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து  பொருட்களை  இறக்குமதி  செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு  வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும்  அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன.  ஆனால்   நம் இந்தியா  அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு  வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம்.   இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும்   FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICALபிரிவை சேர்ந்தவை.


FMCG  பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய  இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த  பொருட்களை விற்பனை செய்ய அந்நிய  நிறுவனத்துக்கு   அரசு  அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.  


பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:  
ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள  அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள்  தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE  SECTOR) என்று சொல்வார்கள்.  அந்த DEFENCE  SECTOR  என்று சொல்லப்படும்  செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான்  இந்த FMCG மற்றும்PHARMACEUTICAL  செக்டோர்கள்.  இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த  AMWAY நிறுவனமும்.  ஆனால் இது  இந்திய  நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம்.   நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை.  இப்படி இருக்கும்போது இந்த AMWAY  நிறுவனம் DIRECT SALE  என சொல்லப்படும் நேரடி விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால்  DEFENCE SECTOR என சொல்லப்படும்  இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில்  நமது நாட்டில்  பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால்  பாதிப்பு  முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார்  என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.



இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.


இதுவரை நான் எழுதியதெல்லாம்    நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள்,  இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள்AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.



ஏமாற்றும் வழிகள்: 
இந்த நிறுவனத்தில்  யாரும்  பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ  அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ  அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு  ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய்  ஆம்வே நிறுவனத்தால்  சம்பாதிக்கிறார்  என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.


நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது,  இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று  சொல்லிதான்  இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று  ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது  நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை  ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது. 


►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம்  எல்லாம் உட்பட).


►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)


மேலும் ஆம்வே நிறுவன  பொருட்களின் விலைகள்.

TOOTHBRUSH(1)                   - 19 ரூபாய் 
HAIR OIL(500 ML)                 - 95 ரூபாய் 
SHAVING CREAM(70G)          - 86 ரூபாய் 
OLIVE OIL (1 LITRE)             -400 ரூபாய்          
FACE WASH                           -229  ரூபாய்
PROTIEN POWDER(1KG)      - 2929 ரூபாய்


மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு  நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE))  விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.


 நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE.  ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய  நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு  4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால்  இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?
  
► ஆம்வே  நிறுவனத்தில் ஒருவர்  இணைய வேண்டும் என்றால்  995 ரூபாய் கட்ட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே  நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)


►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும். 
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)


► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 %தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட  3000 ரூபாய் லாபம் வருகிறது.


இப்போது கொள்ளை கும்பலின் கொள்ளை கணக்கை பாருங்கள்:


►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது  கட்டிய தொகை 995 ரூபாய். 

►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .

►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே  உங்கள் பக்க இழப்பு 3995ரூபாய்.


இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.


 ►ஒருவன்  ஒருலட்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர்  இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995  ரூபாய்)


                                     100 x 995 = 99500 ரூபாய்


இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும்  இதை 100 PV என்று சொல்வார்கள்.


                                   3000  x 100 = 300000 ரூபாய்
                                 
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே  நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய்.  நிறுவனத்துக்கு  ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).


இவ்வளவு  கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE)  சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.


 இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால்  இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள்  அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர்.  ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது.  அதேபோல் இவர்கம் PVஎன்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.


300 PV = 16,500 ரூபாய்  (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)

இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள்  வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.


     லட்ச்சங்களையும்,   கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.  ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்)  கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.


இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை  உணரும் வரைதான்.



இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:
 தயவு செய்து இந்த பதிவை   உங்கள் நண்பருக்கோ அல்லது  உறவினருக்கோ இந்த  பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள்.  இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.

         ----------------------------x---------------------------


நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திர

1 comment:

  1. நண்பர்களே எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னும் 5 வருடத்தில் இந்தியாவில் NO 1 இடத்திற்கு வரும் . அது ஆம்வே பண்ணும் மக்களால் அல்ல , உங்களைபோல இலவசமாக மார்கெட் பண்ணும் மக்களால் தான்.நீங்கள் நல்லது பண்றோம் என்று, கூட ப்ரொமோட் தான் பண்றோம். சில படங்கள் ரிலீஸ் ஆகும் முன் கோர்ட்ல கேஸ் போடுவாங்க , அது எதுக்குனா அதுவும் ஒரு விளம்பர ட்ரென்ட் .பேப்பர் காரர் காசே இல்லாம டெய்லி படத்தோட நேம் ப்ரமோட் பண்ணுவார்.
    ஆமா நான் தெரியாமதான் கேக்குறேன் நீங்கள் KFC சிக்கென் சாப்டதே இல்லையா ? இல்ல macdonald போனது இல்லையா? புள்ள குட்டி மட்டும் MNC ல வேல பாத்தா ,MNC ல வேல பாக்குறானு சீன் போடுறது இல்ல. இது எல்லாம் உங்க அப்பனோட கம்பெனியா? இதுக்கெல்லாம் அமெரிக்க காரன் வேணும். எந்த ஊரு நாயம் ?
    உன் பொருளு 100% தரமா இருந்தா எந்த நாயாவது ஆம்வே பக்கம் போகுமா? உங்களுக்கு கடுப்ப இருந்த யாரு என்ன பண்ண முடியும் ? ஆம்வே ப்ரோட்டின் பவுடர் 10% கு 8% ப்ரோட்டின் இறுக்கம், ஆனால் இந்தியன் ப்ரோட்டின் பௌடர்ல 10% கு 2% தான் ப்ரோட்டின் இருக்காம் ? நான் சொல்லப்பா நம்ம நாடோட நிபுணர் குழுதான் சொல்லுது . IDSA இந்தியன் டைரக்ட் செல்லிங் association ஆம்வேய மெம்பரா சேத்த குழுவ கேள்வி கேக்காம என் இப்படி நெட்ல ? என்னத்த சொல்றது.
    உங்கள பாத்தாதான் எனக்கு பாவமா இருக்கு
    போங்கப்பா போயி புள்ள குட்டிய படிக்க வைங்க .

    ReplyDelete