Wednesday, January 26, 2011

கர்த்தரே பொதுக்கல்லறையில் தலித் சடலத்தை புதைக்கும் பாவிகளை கொன்றுபோடும்



பொது கல்லறைத் தோட்டத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்தவரை அடக்கம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சடலத்தை புதைக்க குழிவெட்டியவரை படுகொலை செய்த கொடூரம் நிகழ்ந் துள்ளது. மதுராந்தகம் அருகே நடந்த இந்தக் கொடுமைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது பற்றிய விபரம் வருமாறு:

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் தச்சூர் கிராமத்தில் தூய ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. தெலுங்கு ரெட்டியார்களும், தலித் கிறிஸ்தவர்களும் வழிபாடு நடத்தி வருகிற இத்தேவாலயத்தில், தலித் கிறிஸ்தவர்கள் மையப் பகுதியில் அமரக் கூடாது. சுவர் ஓரமாகத் தான் அமர்ந்து வழிபட முடியும்.

வழிபாட்டில் சம உரிமை கோரியதற்காக தேவாலயம் 12 வருடங்கள் பூட்டப்பட்டிருந்தது. தேவாலயம் பூட்டப்பட்டதை எதிர்த்து தலித் கிறிஸ்தவர்கள் தரப்பில் நீதிமன்ற உத்தரவு பெற்றுத்தான் தேவாலயம் திறக்கப்பட்டது. இவ்வழக்கில் அம்பேத்கர் நூற்றாண்டு இயக்க நிறுவ னர் அருட்பணி எல்.ஏசுமரியான் வழக்கறிஞராக செயல்பட்டார்.

தேவாலயம் திறக்கப்பட்ட பின்பும் ரெட்டியார்கள் தங்களுக்கு தெலுங்கில் வழிபாடு வேண்டும் எனக் கோரி தனியாக தெலுங்கில் வழிபாடு நடத்தி சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

தூய ஆரோக்கிய அன்னை தேவாலயத்தையொட்டியே கல்லறைத் தோட்டமும் உள்ளது. இக் கல் லறையிலும் இதுவரை தலித் கிறிஸ்தவர்களை அடக்கம் செய்ய முடியாது. இறந்துபோன தலித் கிறிஸ்தவர்களை அடக்கம் செய்திட இது வரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சாதி ஆதிக் கக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட் டுள்ளது.

இச்சூழ்நிலையில் தலித் இளைஞர் வேளாங்கண்ணி (38) என்பவர் ஜனவரி 22ம்தேதி மரணமடைந்தார். இவர் இதே திருச்சபையில் பங்குத் தந்தையாக உள்ள அருட்பணி ஜான் என்பவரின் சகோதரர். தனது சகோதரனின் மரணத்தோடு கல்லறைத் தோட்டத்தில் உள்ள சாதி பாரபட் சத்தை முடிவுக்கு கொண்டு வர அருட்பணி ஜான் முயற்சி செய்தார். தேவாலயத்தின் பொது கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்திடும் முயற்சிக்கு ஆதிக்கச் சக்தியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறுதி நிகழ்ச்சியில் மறை மாவட்ட பேராயர் நீதிநாதன், மறை மாவட்ட துணைவேந்தர் லூயிஷ் ராயர், முதன்மை குரு அம்புரோஸ் ஆகியோர் பங்கேற்று பொது மயா னத்தில் அடக்கம் செய்வதற்கு ஆதரவு தெரிவித்தனர். திருச் சபையின் பேராயர் நேரடியாக இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றும் ஆதிக் கச் சக்தியினர் அசை யவில்லை. மாறாக சம் பந்தப்பட்ட தேவாலயத்தின் குரு லூர்து சாமியை தாக்க முயன்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா, சி.ஆர்.டி.எஸ். இயக்குநர் அருட்பணி ஜான் சுரேஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் நிர்வாகிகள் பிற்பகல் 3.30 மணிக்கு வேளாங்கண்ணியின் உடலை அடக்கம் செய்தனர். ஆத்திரமுற்ற ஆதிக்க சக்தியினர் கல்லறை கேட்டை இழுத்துப்பூட்டினர். காவல்துறை வந்து கதவை திறந்த பிறகே வெளிவர முடிந்தது. இந்த சூழ்நிலையில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என ஜி.லதா எம்எல்ஏ, ப.பாரதி அண்ணா, ஜீவா ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அன்று இரவு 8.30 மணி அளவில் நேரடியாக புகார் செய்தனர்.

அப்படி இருந்தும் வேளாங் கண்ணி சடலத்தை புதைப்பதற்கு குழிவெட்டிய தலித் இராஜேந்திரன் (40) ஆதிக்க சமூகத்தினரால் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இறுதி நிகழ்ச்சிக்கு பிறகு மாலையில் தனது தோட்டத்திற்கு சென்ற இராஜேந்திரன் வீடு திரும்ப வில்லை. இரவு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், மறுநாள் ஜனவரி 23 ஞாயிறன்று செய்யூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. இந்நிலையில் கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக ஆள் நடமாட்டம் இல்லாத ஏரியில் ஜனவரி 24 திங் களன்று அதிகாலையில் இராஜேந் திரன் பிணமாக மிதந்தார். கல்லறை யின் வழக்கமான ஊழியர் குழி தோண்ட மறுத்தநிலையில் இராஜேந் திரன் முன்வந்ததால் ஆத்திரமுற்று இப்படுகொலை நடந்துள்ளது. இப் படுகொலை தொடர்பாக இருதயராஜ் ரெட்டியார், சாந்தையா ரெட்டியார், ரெக்ஸ், ஜான் பிரிட்டோ ஆண்ட்ரூ ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்துள்ளனர். கொடூரமான இப்படுகொலையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இப்படுகொலைக்கு காரணமான ஆதிக்க சக்தியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திட வேண்டும். ராஜேந்திரன் குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட வேண்டிய நிவாரணத்தோடு, தமிழக அரசும் நிவாரணம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அதன் தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்

No comments:

Post a Comment