Monday, January 31, 2011
Wednesday, January 26, 2011
கணினி தொழில்நுட்பம் 2010 : ஓராண்டின் வளர்ச்சி ஒரு பார்வை !
இந்த ஆண்டில் கணினித் துறை பல நிலைகளிலும் வளர்ச்சி பெற்றது. 2009ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பு சற்றே குறைந்தது, தொழில் நுட்பத் துறை வளர்ச்சிக்குக்கு சாதகமாக அமைந்தது.
மைக்ரோசாப்ட், ஆரக்கிள், அடோப் மென்பொருள் நிறுவனங்கள் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள்களை அறிமுகப்படுத்தின. புதிய வியாபார முயற்சிகளையும் மேற்கொண்டன.
கூகுள், பேஸ்புக், டிவிட்டர், யாகூ ஆகிய இணையதள நிறுவனங்களும் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தின. அதே நேரத்தில் சில பழைய, பயன்பாடு குறைந்த வசதிகளைத் திரும்பப்பெற்றன.
மைக்ரோசாப்ட் பிங் - யாகூ ஒப்பந்தம், பேஸ்புக் - கூகுள் மோதல், விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரகக் கேபிள் தகவல்கள், அதைத் தொடர்ந்து ஜூலியன் அஸெஞ்ச் கைது, சீனாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் எனப் பல நிகழ்வுகள் முக்கிய செய்திகளாயின. அதன் சிறு தொகுப்பே இப்பட்டியல். இது என் நினைவில் நின்றவை மட்டுமே பட்டியலில் உள்ளன. உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன்.
ஜனவரி
- கூகுள் நெக்ஸஸ் ஒன் ஆண்ட்ராய்ட் போனை வெளியிட்டது.
- புகழ் பெற்ற ஸ்டார் ஆபிஸ், ஓப்பன் ஆபிஸ், ஜாவா ஆகிய மென்பொ ருள்களை உருவாக்கிய சன் மைக்ரோ சிஸ்டத்தை ஆரக்கிள் நிறுவனம் கையகப்படுத்தியது.
பிப்ரவரி
- கூகுள் பஸ் சமூக வலைத்தள சேவையை அறிமுகப்படுத்தியது. இது போதிய வரவேற்பைப் பெறவில்லை.
- கூகுளின் போட்டியை சமாளிக்க மைக்ரோசாப்ட் - யாகூ நிறுவனங்கள் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கான உடன்படிக்கையை செய்து கொண்டன. இதன்படி பிங்கின் தேடல் நுட்பத்தை யாகூவும், யாகூவின் விளம்பர பரிவர்த்தனையை மைக்ரோசாப்ட்டும் பயன்படுத்திக்கொள்கின்றன.
மே
- தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான 3 ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டு ஏலம் நடந்தது. இதன் மூலம் அரசுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி வரையிலான வருமானம் கிடைத்தது. இந்த ஏலமே 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையான 1,76,000 கோடி ரூபாயை மதிப்பிட உதவியது.
- அதிவேக இணையத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் கூகுள் இணைய வழியில் தொலைக்காட்சி ஒளிபரப்பை மேற்கொள்ள தி்ட்டமிட்டுள்ளது. இதற்கென கூகுள் இண்டெர்நெட் டிவியை துவக்குவதாக அறிவித்தது.
ஜூன்
- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் உலக இணை ய மாநாடு 2010 கோவையில் நடத்தப்பட்டது. அர சின் அதிகாரப்பூர்வ எழுத்துருவாக 16 பிட் யுனிக்கோட் அங்கீகரிக்கப்பட்டது.
- இதே நிகழ்வில் பனேசியா ட்ரீம்வீவர் நிறுவனத்திற்கு சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பிற்கான விருதும் வழங்கப்பட்டது.
ஜூலை
- இந்திய ரூபாய்க்கு புதிய அடையாளச் சின்னம் ஜூலை 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சின்னம் தமிழ் நாட்டைச் சேர்ந்த உதயகுமாரால் உருவாக்கப் பட்டது.
ஆகஸ்ட்
- இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம் யுனிக்கோட் கன்சார்டியத்தால் அங்கீகரிக்கப்பட்டு எழுத்துருவில் சேர்க்கப்பட்டது.
- கூகுள் ஆர்ப்பாட்டமாக அறிமுகப்படுத்திய கூகுள் வேவ் தகவல் பரிமாற்ற மென்பொருளின் கட்டமைப்புத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. தட்டச்சு செய்யும்போதே தேடல் முடிவு களை பட்டிய லிடும் இன்ஸ்டன்ட் சர்ச் வசதியை கூகுள் அறிமுகம் செய்தது.
அக்டோபர்
- மைக்ரோசாப்ட் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையிலான ஆன்லைன் ஆபிஸ் தொகுப்பான ஆபிஸ் 365-ஐ அறிமுகம் செய்தது.
- ஆப்பிள் ஐபோன், கூகுள் ஆண்ட் ராய்ட் போனுக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் மொபைல் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய மொபைலை சாம்சங், ஹெச்டிசி நிறுவனங்கள் மூலமாக வெளியிட்டது.
நவம்பர்
- சீனா உலகின் அதிவேக கணினி தயாங்கி-1ஏ சூப்பர் கம்ப்யூட்டரைத் தயாரித்தது.
- செல்போன் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் மொபைல் நெம்பர் போர்ட்டபிலிட்டி (MNP) சேவை முதன் முறையாக இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் அறிமுகமானது.
- விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்கத் தூதரகங்களின் தகவல் பரிமாற்ற கேபிள் ரகசியங்களை வெளியிட்டது. இது அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டியது.
டிசம்பர்
- அமெரிக்காவின் நெருக்குதலால் பேபால், அமெசான் தளங்கள் விக்கிலீக்சுக்கான சேவையை நிறுத்தின. அதனைத் தொடர்ந்து விக்கி லீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸெஞ்ச் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய் யப்பட்டார். விக்கிலீக்ஸ் தளத்தை முடக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பின் னர் அஸெஞ்ச் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
- கூகுளுடனான மோதலின் உச்சகட்டமாக பேஸ்புக் இமெயில் சேவையை வழங்கப்போவதாக அறிவித்தது.
- கூகுள் எர்த் மூலம் உலகின் மூலை முடுக்கெல்லாம் காட்டிய கூகுள் அடுத்ததாக மனித உடலமைப்பை முப்பரிமாணத்தில் பார்க்க உதவும் கூகுள் பாடி பிரௌசர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. இது வெப் ஜிஎல் (Web GL) என்ற தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதனைப் பார்க்க கூகுள் குரோம் பீட்டா, பயர்பாக்ஸ் 4 பீட்டா பிரளெசர்க்ளை பரிந்துரைக்கிறது.http://
bodybrowser.googlelabs.com/
- கூகுள் இணைய வழியில் இயங்கும் கிளவுட் கம்ப்யூட்டிங் அடிப்படையிலான குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிஆர்-48 (Chrome OS CR-48 Netbook) ஐ டிசம்பர் 7ல் அறிமுகம் செய்தது.
- ஓப்பரா பிரௌசரின் 11ஆம் பதிப்பு வெளியானது.
தொகுப்பு: எம்.கண்ணன், ராஜேந்திரன்
நந்தன் புகுந்த பாதை ! - (வரலாறு தொடரலாமா?)
சைவ மரபில் அதன் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த பல கோவில்கள் தமிழகத்தில் இருப்பினும் இருப்பினும் சிதம்பரம் நடராசர் ஆலயம் மட்டுமே கோயில் என்று குறிக்கப்படுகிறது. அதாவது கோயில் என்றால் அது நடராசர் அலயம்தான். இந்த கோயில் குறித்த பல விவாதங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஆலையத்தினுள் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட அனுமதிகோரி தமிழ் அன்பர்கள் இராம.ஆதிமூலம் உள்ளிட்டோர் துவக்கிய நாற்பது ஆண்டுகளுக்கு மேலான பொராட்டம் வெற்றி அடைந்த சூழலில் அந்த ஆலயத்தை அரசாங்கம் இந்து அறநிலையதுறையின் கீழ் எடுத்துள்ளது. எடுத்தது வழக்காக நீதிமன்றத்தில் உள்ளது. தற்போது அந்த ஆலையத்தின் தெற்குரத வீதியின் கோபுரத்திற்கு நேராக உள்ள கதவு கற்களால் அடைக்கப்பட்டுள்ளது. இந்த கதவடைப்பு நடைபெற காரணம் அவ்வழியாக நந்தனார் என்ற தலித் பகதன் வந்ததே, எனவே அந்த பாதையை உடனே திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மற்றொருபுறம் இந்த கோவிலின் தற்போதைய அமைப்பே 12 ஆம் நூற்றாண்டில் வந்ததுதான் அப்போது இந்த சுவரே கிடையாது பின்பு நான்காம் நூற்றாண்டில் நந்தன் எப்படி அவ்வழி வந்திருக்க முடியும் என்கின்றனர். சுவர் வேண்டுமானால் பின்பு வந்திருக்கலாம் தெற்குதிசை மாற்றம் அடைந்திருக்காது அல்லவா? ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும் சிதம்பரம் பகுதியை சுற்றி உள்ள உழைப்பாளி மக்களின் உதிரத்தில் உதித்த இந்த கோயில் பல நூற்றாண்டுகள் பழைமையானது என்றாலும். 1947 க்கு பிறகுதான் இந்த ஆலையத்தினுள் தலித் மக்கள் நுழைய முடிந்தது. 1932 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆலயநுழைவு அறைகூவலை எற்று சுவாமி சகஜானந்தா தலைமையில் சிதம்பரம் ஆலையநுழைவு போராட்டம் நடந்த போது மேலரதவீதியில் கடுமையாக தாக்கப்படுகின்றனர். அதன் பின் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்புதான் அங்கு அவரது தலைமையில் அந்த பொராட்டம் வெற்றி அடைந்தது.
காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தின் சதுப்பு நிலங்கள் நிறைந்த தெற்குபகுதியில் அமைந்துள்ள நகரம் சிதம்பரம். சிதம்பரம் நகராட்சி தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் பழைமை வாய்ந்த நகராட்சியாகும். 33 வார்டுகளும், கிட்டதட்ட ஒரு லட்சம் மக்கள் தொகையும் கொண்ட சிதம்பரம் நகராட்சி 1873 ஆண்டு அமைக்கப்பட்டத்தாகும். ஒருகாலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்த காட்டுபகுதியாக இருந்த இடம் இது. புலிகள் அதிகம் இந்த காடுகளில் வசித்ததால் இந்த பகுதி பெரும்புலியூர் என்றும் தில்லை என்றும் அழைக்கப்படுகிறது. ஆகாய வடிவமாக இத்தலம் திகழ்வதால் ஞான ஆகாசம் என்றும் கூறப்படுகிறது. இவாகாசம் பூத ஆகாசம் போல் சடம் ஆகாது. சித்தாகவிலங்குவதால் சித் + அம்பரம் = சிதம்பரம் எனும் பெயர் பெற்றது. மற்றும் புண்டரீகபுரம், தளியூர் என்ற சிறப்பு பெயர்களும் உள்ளது. மக்கள் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை நிகழ்வுகளை கடவுள் சக்தி என்று நம்பிய அன்றைய மக்கள் அந்த சம்பவம் நடைபெறும் இடங்களில் கடவுள் வந்திருப்பதாக நம்பினர். அந்த இடத்தில் குடிசை அமைத்து வனங்கினர். குடி இருத்தல் என்றால் தெய்வம் தங்கி இருக்கும் இடம் என்று அர்த்தம். கோயில், கோட்டம், மன்றம் என்பவையெல்லாம் பிற்கால பெயர்கள். குடியென்பதே பழம் பெயர். தொல் திராவிட மொழியில் கோயில் குடி என்றே உள்ளது. இன்றும் கன்னடத்திலும், தெலுங்கிலும் கோயிலை குடியென்றே அழைக்கின்றனர். குடியின் மீது ஓலையால் வேயப்பட்ட இடத்தை குடிசை என்றழைத்தனர். இன்றும் பழமை மாறாமல் குடிசை வடிவிலேயே சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம் எனும் மைய மண்டபம் உள்ளது. கோயிலின் கூரையில் பொன்வேய்ந்து பிற்காலத்தில் எத்துனையோ மாற்றங்கள் வந்த பின்பும் பொன்னம்பலத்தின் குடிசை அமைப்பு மட்டும் மாறவே இல்லை. சிதம்பரம் கோவிலின் தொன்மைக்கு இது சான்றாக நிற்கிறது.
தொன்மைவாய்த கோயில் என்றாலும் இக்கோயில் குறித்து சங்க இலக்கியங்களில் எந்த குறிப்பும் காநப்படவில்லை. சோழ வம்சத்தின் கடைசி மன்னனாக கருதப்படும் கோச்செங்கட் சோழன் பிறப்பதற்காக வேண்டி அவனது தாய் தந்தையர் சிதம்பரத்திற்கு வந்து வழிபட்டதாகவும், கோச்செங்கட் சோழன் சிதம்பரம் கோவிலை செப்பனிட்டதகவும், நகரைச் சீர்திருத்தி அமைத்தாகவும் பெரியபுராண செய்திகள் உள்ளன. கி.பி 2 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டுவரை எந்த செய்தியும் கிடைக்கவில்லை. பின் 5 ஆம் நூற்றாண்டில் திருமூலரின் திருமந்திரத்தில் இக்கோயில் குறித்த குறிப்புகள் உள்ளது. கி.பி 6 ஆம் நுற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் சிதம்பரத்திற்கு வந்து வழிபட்டுள்ள செய்தி இருக்கிறது. 7 ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசுவும் கோயிலுக்கு வந்துள்ளனர். 7 ஆம் நூற்றாண்டுக்கு பின்பு இக்கோவிலின் வரலாறு முழுமையாக கிடைக்கிறது. இது ஒரு புறம் இருக்க நந்தனார் பிரச்சனையையும் காலகாலமாய் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது. அதன் பிறகு கோயில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது.
கிழக்குக் கோபுரம் இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி 1138-1150), பின்பு காடவர் கோன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் முடிக்கப்பட்டது. தெற்குக்கோபுரம் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் கி.பி 1237-40 காலத்தில் கட்டப்பட்டது. மேற்குக்கோபுரம் எழுநிலையுடன் முதல் ஜடவர்ம பாண்டியனால் கி.பி 1207 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. வடக்குக் கோபுரம் எழுநிலையுடன் தனது ஒரிசா போர்களத்தின் வெற்றியின் நினைவாக விஜயநகர பேரரசன் கிருஷ்ணதேவராயனால் கட்டப்பட்டது. சோழர்கள், பாண்டிய மன்னன், என பலரும் இந்த கோவிலை விரிவாகம் செய்து 12 ஆம் நுற்றாண்டில் தற்போது உள்ள நிலைக்கு ஆலையம் வந்தது.
"புண்பலை நோய் தீண்டப்பெற்ற புறத்திருதொண்டன் நந்தன்" என 8 ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பியும், "செம்மையே திருநாளைப் போவதற்கும் அடியேன்" என்று 12 ஆம் நுற்றாண்டில் பெரியபுராணம் என்கிற திருத்தொன்டர் புராணத்தில் சேக்கிழாரும், 1861 இல் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் கோபாலகிருஷ்ன பாரதியும் நந்தன் குறித்து பேசி உள்ளனர். இந்த இலக்கியங்களில் நந்தன் சிவனை வழிபட வந்து நந்தன் சாம்பலானான் என்கிறது. பெரியபுராணம் நந்தன் சிதம்பரத்தின் தெற்கு எல்லையில் உள்ள ஓமகுளத்தில் (ஹோம குளம்) நெருப்பில் இறங்கி பிராமணனாக மாறி சிவனடி சேர்ந்தார் என்று கூறுகிறது. கோபாலகிருஷ்ன பாரதி நந்தன் தெற்குவாயில் வழியாக ஆலையத்தினுள் நுழைந்தான் அதனால் மடிந்தான் என்று கூறுகிறார். இந்த பழம் பெரும் சான்றாதரங்களை வைத்துதான் அந்த ஆலையத்தின் தெற்கு வாயில் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனல் நந்தன் இவ்வழியே வரவில்லை என்றும் பல கதைகள் உள்ளது.
கதை 1: கி.பி 1798 இல் தஞ்சை வேதநாயக சாஸ்திரிகளால் தொகுக்கப்பட்ட சுவடிகள் (தமிழக அரசின் கீழ்திசைச் சுவடிகள் நூலகம் சார்பில் பதிப்பிக்கபட்டுள்ள இடங்கை வலங்கையர் வரலாறு என்று நூலாக வெளிவந்துள்ளது) நந்தன் குறித்து கூறும் கதை வேறு விதமானது. இராவணனின் வாரிசுகளில் ஒருவராகச்சொல்லப்படும் தியாகச்சாம்பானுடைய மகளுக்கும் சோழராசாவுக்கும் பிறந்த நந்தன் ஒரு சோழமண்டல அரசன். தியாகச்சாம்பான் ஒரு தலித் என்பதால் நந்தனும் அப்படியே அறியப்பட்டடான். நந்தனுக்கு ஒரு வெள்ளாள சாதியை சார்ந்த பெண்ணை மணம் முடிக்க நினைத்ததால் பிரச்சனை துவங்கியது. தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு தங்களது பெண்ணை திருமணம் முடிக்க ஆதிக்கசாதியினர் தயாரில்லை. ஆனால் அதிகாரத்தில் உள்ள நந்தனை எதிர்க்கவும் துணிவில்லை. எனவே பெண் பார்க்க நந்தனை தனது சாதி சனத்துடன் வரச்சொல்லி, கம்மாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கொலைசெய்ய தூண்டுகின்றனர். அப்படியே பெண்பார்க்க வந்த நந்தனையும் அவனது சுற்றத்தாரையும் கம்மாளர்கள் உதவியுடன் வெள்ளாளர்கள் பந்தலில் சூட்சுமம் செய்து படுகொலை செய்கின்றனர்.
கதை 2: 1910 ஆம் ஆண்டில் அயோத்திதாச பண்டிதர் தமிழன் ஏட்டில் "இந்திரர் தேச சரித்திரத்தில்" என்ற தொடரில் நந்தன் குறித்து வேறு விதமாக எழுதியுள்ளார். புன நாட்டின் வடக்கே வாதவூரெனும் தேசத்தை அரசாண்ட விவேகம் மிக்க மன்னன் நத்தன். இவன் பவுத்த நெறி நின்று அரசாண்ட மன்னன். இவனது நாட்டிற்கு பக்கத்தில் உள்ள சோணா நாட்டில் வேஷபிராமணர்கள் ஒரு சிவாலயத்தை கட்டி மக்களையும், மன்னர்களையும் ஏமாற்றி வந்தனர். நந்தனின் புகழை அறிந்து அவனை ஏமாற்ற புத்ததுறவிகள் போல வேடமிட்டு நந்தனை கான வந்தனர். ஆனால் அவர்கள் பொய்வேடம் கலைந்து நாட்டைவிட்டு விரட்டப்படுகின்றனர். அப்படி ஓடியவர்கள் தங்கள் அவமாணம் வெளியே தெரிந்தால் தங்கள் பிழைப்பு பாதிக்கப்படும் என்று அஞ்சினர். நந்தன் அரணமனைக்கு மேற்கே அரைக்காத தூரத்தில் தில்லை மரங்கள் அடர்ந்த ஒரு காட்டில் மண்மெட்டை தோண்டி அதன் மத்தியில் கல்லால் ஆன தூண்களை வைத்து பழைய கட்டடம் உள்ளதுபோல அமைப்பை ஏற்படுத்தி அதன் மத்தியில் காலை வைத்தால் விழும் அடிப்படையில் சூழ்ச்சி செய்து மன்னனை அழைத்து பார்வை இடச்சொல்கின்றனர். அப்படி சென்ற நந்தன் அந்த சூழ்ச்சியில் சிக்கி கொலைசெய்யப்படுகிறான்.
கதை 3: (நந்தி கலம்பகம்) ஒரு ராசா இருந்தார். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மூலமாக ஏழு பிள்ளைகள் பிறந்தனர். அந்த ராசாவுக்கு ஒரு வைப்பாட்டி இருந்தாள். அவள் மூலம் பிறந்த ஆண் பிள்ளைதான் நந்தி. அந்த ராசா தன்னுடைய வைப்பாட்டி மகனான நந்திக்கு முடிசூட்டினான். அவன் மன்னனான சிறிது காலத்திற்கு பிறகு தந்தை இறந்தான். பின் நந்திராசா அந்த முதல் தாயையும் ஏழு பிள்ளைகளையும் கொடுமைசெய்தான். அதனால் அவர்கள் திருடி பிழைக்க முடிவு செய்தனர். நந்தியின் அரணமனையிலேயே திருட்டை துவக்கினர். திருடச்சென்ற முதல் ஆறுபேரையும் நந்தி தலையை வெட்டிக்கொன்றான். ஏழாம் பிள்ளை தப்பிசென்று ஒரு கவிராயனிடம் சேர்ந்தான். அவனிடம் வித்தைகளை கற்றுக்க்கொண்டு நந்தி கலம்பகம் என்ற 100 பாடல்களை இயற்றினான். இது நந்தியை புகழ்வது போல இருப்பினும் இந்த பாடல்களை கேட்டு முடிக்கும் போது நந்தி மரணமடைவான். அப்படியே நடந்தது.
காலத்தால் மிகவும் பின்பு உருவாக்கப்பட்ட இந்த மூன்று கதைகளில் நந்தன் கூலி தொழிலாளி இல்லை மன்னன் என்கிறது. நந்தன் குறித்து இன்னும் கதைகள் இருக்கக்கூடும். இதில் கவனிக்க வேண்டியது அயோத்திதாசர் பௌத்த மதத்தை முன்வைத்து ஒரு கதையாடலை கட்டமைக்கின்றார். அது பிராமணர்கள் பௌத்த சமண கோயில்களை இடித்து, சமணர்களை கழுவிலேற்றி படுகொலை செய்து இந்து மதத்தை ஆட்சியதிகார வன்முறையால் நிறுவியதற்கு எதிரான புரட்சிகர கதையாடல். ஆனால் அந்த கதைகான வரலாற்று சான்றுகள் எதுவுமில்லை. அடுத்து தஞ்சை வேதநாயக சாஸ்திரிகளால் எழுதப்பட்ட சுவடிகளில் சிதம்பரத்தில் நடந்த நன்தன் கதை என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை, நந்தி கலம்பகமும் சிதம்பரம் பக்கம் நடந்ததா என்பதும் ஐய்யமுடையதே. ஆக நந்தன் ஆலயமே நுழையாத போது இந்த ஆலய சுவர் இடிப்பு ஏன் என்ற கேள்விக்கு இடம் வைக்கும் இந்த கதைகளின் நோக்கம் இன்னும் ஆராயப்பட வேண்டியது.
மேலும் ஒரு கதை 4: (எங்கள் கள ஆய்வின் போது வாய்மொழி தரவாக கிடைத்தது) நந்தன் புலைச்சேரியில் பிறக்கவில்லை. சேரியில் கீழே திடீரென கிடந்த குழந்தை. கிடந்தவனை தலித் தம்பதியினர் எடுத்து வளர்கின்றனர். நந்தன் வேறு யாருமல்ல, சிவபெருமானே அப்படி குழந்தையாக கிடந்தார். பின்பு ஓமகுளத்தருகே நெருப்பில் இறங்கி பிராமன வேடம் புண்டு ஆலயம் சென்று செரூபமாகினார். இந்த கடைசி கதை அவன் மன்னனும் அல்ல மனிதனும் அல்ல சிவனே நந்தனாக பிறந்தான் என்கிறது. இருப்பினும் சிவனே தலித்தாக வளர்ந்தாலும் பிராணர்களை எதிர்த்து ஆலயம் நுழைய தீயில் இறங்க வேண்டியுள்ளது.
நிகழ்காலத்தில் எழுந்துள்ள ஒடுக்கப்பட்டோரின் எழுச்சியுடன் இணைந்த கேள்வி மிகவும் முக்கியமானது. தெற்குவீதியில் உள்ள வாயில் அடைக்கப்பட காரணம் தீண்டாமைதான் என்று கோரிக்கை எழும்போது அது இல்லை எனில் வேறு எந்த காரணத்திற்க்காக அந்த பாதை முடப்பட்டுள்ளது என்பதை மூடியவர்கள் சொல்லவேண்டும். ஆலயங்கள் தெய்வங்கள் இருப்பிடம் எனில் அந்த ஆலயம் அனைவரையும் அரவணைப்பதாக இருந்திட வேண்டும். ஆனால் இன்றும் தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஆலயங்களில் தலித் மக்கள் உள்ளே செல்ல கடுமையாக போராடவேண்டி உள்ளது. சமூகத்தின் பொதுவெளியில் எழுந்துள்ள கேள்விகளை அத்துனை எளிதாக யாரும் புறக்கணிக்க முடியாது...
கர்த்தரே பொதுக்கல்லறையில் தலித் சடலத்தை புதைக்கும் பாவிகளை கொன்றுபோடும்
பொது கல்லறைத் தோட்டத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்தவரை அடக்கம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சடலத்தை புதைக்க குழிவெட்டியவரை படுகொலை செய்த கொடூரம் நிகழ்ந் துள்ளது. மதுராந்தகம் அருகே நடந்த இந்தக் கொடுமைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது பற்றிய விபரம் வருமாறு:
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் தச்சூர் கிராமத்தில் தூய ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. தெலுங்கு ரெட்டியார்களும், தலித் கிறிஸ்தவர்களும் வழிபாடு நடத்தி வருகிற இத்தேவாலயத்தில், தலித் கிறிஸ்தவர்கள் மையப் பகுதியில் அமரக் கூடாது. சுவர் ஓரமாகத் தான் அமர்ந்து வழிபட முடியும்.
வழிபாட்டில் சம உரிமை கோரியதற்காக தேவாலயம் 12 வருடங்கள் பூட்டப்பட்டிருந்தது. தேவாலயம் பூட்டப்பட்டதை எதிர்த்து தலித் கிறிஸ்தவர்கள் தரப்பில் நீதிமன்ற உத்தரவு பெற்றுத்தான் தேவாலயம் திறக்கப்பட்டது. இவ்வழக்கில் அம்பேத்கர் நூற்றாண்டு இயக்க நிறுவ னர் அருட்பணி எல்.ஏசுமரியான் வழக்கறிஞராக செயல்பட்டார்.
தேவாலயம் திறக்கப்பட்ட பின்பும் ரெட்டியார்கள் தங்களுக்கு தெலுங்கில் வழிபாடு வேண்டும் எனக் கோரி தனியாக தெலுங்கில் வழிபாடு நடத்தி சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர்.
தூய ஆரோக்கிய அன்னை தேவாலயத்தையொட்டியே கல்லறைத் தோட்டமும் உள்ளது. இக் கல் லறையிலும் இதுவரை தலித் கிறிஸ்தவர்களை அடக்கம் செய்ய முடியாது. இறந்துபோன தலித் கிறிஸ்தவர்களை அடக்கம் செய்திட இது வரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சாதி ஆதிக் கக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட் டுள்ளது.
இச்சூழ்நிலையில் தலித் இளைஞர் வேளாங்கண்ணி (38) என்பவர் ஜனவரி 22ம்தேதி மரணமடைந்தார். இவர் இதே திருச்சபையில் பங்குத் தந்தையாக உள்ள அருட்பணி ஜான் என்பவரின் சகோதரர். தனது சகோதரனின் மரணத்தோடு கல்லறைத் தோட்டத்தில் உள்ள சாதி பாரபட் சத்தை முடிவுக்கு கொண்டு வர அருட்பணி ஜான் முயற்சி செய்தார். தேவாலயத்தின் பொது கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்திடும் முயற்சிக்கு ஆதிக்கச் சக்தியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இறுதி நிகழ்ச்சியில் மறை மாவட்ட பேராயர் நீதிநாதன், மறை மாவட்ட துணைவேந்தர் லூயிஷ் ராயர், முதன்மை குரு அம்புரோஸ் ஆகியோர் பங்கேற்று பொது மயா னத்தில் அடக்கம் செய்வதற்கு ஆதரவு தெரிவித்தனர். திருச் சபையின் பேராயர் நேரடியாக இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றும் ஆதிக் கச் சக்தியினர் அசை யவில்லை. மாறாக சம் பந்தப்பட்ட தேவாலயத்தின் குரு லூர்து சாமியை தாக்க முயன்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா, சி.ஆர்.டி.எஸ். இயக்குநர் அருட்பணி ஜான் சுரேஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் நிர்வாகிகள் பிற்பகல் 3.30 மணிக்கு வேளாங்கண்ணியின் உடலை அடக்கம் செய்தனர். ஆத்திரமுற்ற ஆதிக்க சக்தியினர் கல்லறை கேட்டை இழுத்துப்பூட்டினர். காவல்துறை வந்து கதவை திறந்த பிறகே வெளிவர முடிந்தது. இந்த சூழ்நிலையில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என ஜி.லதா எம்எல்ஏ, ப.பாரதி அண்ணா, ஜீவா ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அன்று இரவு 8.30 மணி அளவில் நேரடியாக புகார் செய்தனர்.
அப்படி இருந்தும் வேளாங் கண்ணி சடலத்தை புதைப்பதற்கு குழிவெட்டிய தலித் இராஜேந்திரன் (40) ஆதிக்க சமூகத்தினரால் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இறுதி நிகழ்ச்சிக்கு பிறகு மாலையில் தனது தோட்டத்திற்கு சென்ற இராஜேந்திரன் வீடு திரும்ப வில்லை. இரவு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், மறுநாள் ஜனவரி 23 ஞாயிறன்று செய்யூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. இந்நிலையில் கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக ஆள் நடமாட்டம் இல்லாத ஏரியில் ஜனவரி 24 திங் களன்று அதிகாலையில் இராஜேந் திரன் பிணமாக மிதந்தார். கல்லறை யின் வழக்கமான ஊழியர் குழி தோண்ட மறுத்தநிலையில் இராஜேந் திரன் முன்வந்ததால் ஆத்திரமுற்று இப்படுகொலை நடந்துள்ளது. இப் படுகொலை தொடர்பாக இருதயராஜ் ரெட்டியார், சாந்தையா ரெட்டியார், ரெக்ஸ், ஜான் பிரிட்டோ ஆண்ட்ரூ ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்துள்ளனர். கொடூரமான இப்படுகொலையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இப்படுகொலைக்கு காரணமான ஆதிக்க சக்தியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திட வேண்டும். ராஜேந்திரன் குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட வேண்டிய நிவாரணத்தோடு, தமிழக அரசும் நிவாரணம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அதன் தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்
பிரதமரை, காங்கிரஸ் கட்சி வாடகைக்கு எடுத்துள்ளது
பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. மறுபுறம் ரயில்வே சரக்கு கட்டண உயர்வால் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. விலைவாசியை சந்தைதான் தீர்மானிக்கும் என்ற அரசின் தவறான கொள்கையால் விரல்விட்டு எண்ணக்கூடிய சில முதலாளிகள் மட்டுமே பயனடை கின்றனர்.
மத்திய அரசு உள்நாட்டு மக்களை பற்றி கவலைப் படாமல் இந்திய சந்தையை உலகச் சந்தையோடு இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதற்காக உலக வங்கியும், அமெரிக்க முதலாளிகளும் சிபாரிசு செய்த பிரதமரை காங்கிரஸ் கட்சி வாட கைக்கு எடுத்துள்ளது.
டாடா, அம்பானி கம்பெனி முதலாளிகளின் பினாமியாகவே உள்ளார்.
உணவுக் கிடங்குகளில் தேங்கி கிடக்கும் தானியங்களை எலிகளுக்கு தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமுடியாது என்கிறார்.
கருப்பு பணம் ஸ்சுவிஸ் வங்கியில் போட்டுள்ள திருடர்களின் பட்டியலை வெளியிட முடியாது அதை நீதிமன்றம் கூட கேட்க கூடாது என்கிறார்.
முன்று முறை தேர்தலில் ஓட்டுபோடதவர்
தேர்தலில் மக்களை சந்திக்காதவர்
இந்திய குடியுரிமை இல்லாமால் இருந்தவர்
எனவே தான், இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளை பற்றி அறியாமல், ஏழை எளிய மக்களை கண்டு கொள்ளாமல் உள்ளார்.
அனைவருக்கும் இல வசக் கட்டாயக் கல்வி கொடுப் பது என்ற தனது கடமையை அரசு கைகழுவி வருகிறது. காசு இருப்பவர்களுக்கே கல்வி, மருத்துவம் என்று செயல்படுகிறது. அனை வருக்கும் பாதுகாக்கப் பட்ட சுத்தமான குடிநீர் வழங்காததும் இதன் வெளிப் பாடுதான்.
கடுமையான விலையேற்றம், மின்வெட்டு போன்றவை மக்களை கடுமையாக பாதிக்கிறது. விசைத்தறி தொழில் முடங்கிப்போய் உள்ளது. ஆனால் பஞ்சு ஏற்றுமதி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2012ம் ஆண்டிலும் மின்வெட்டு பிரச்சனை தீராது. விலை வாசி உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் கூட வாழ முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. மானியம் கொடுப்பதால் மட்டும் பிரச்சனை தீராது.
சென்னை நகரில் ஆங் காங்கே சாலைகள் தோண் டப்படுவதும், சாலையே இல்லாத தெருவில் நடை மேடை கட்டுவதும் எதனால்? தனது கட்சியின் முன்னணி ஊழியர்களை பணக்காரர்களாகவும், ரவுடி களாகவும் மாற்றும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. அதன்விளைவுதான் சிபிஎம் தலைவர் வெட்டிப்படு கொலை செய்யப்பட்டது.
சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது. அதனை செய்ய மத்திய அரசு மறுக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் தவறான நடவடிக்கைகள் ஏழை எளிய மக்களை பாதிக் கிறது. மக்களுடைய கோபம் தான் ஆட்சியாளர்களை அடிபணியச் செய்யும்.
கடுமையான விலையேற்றம், மின்வெட்டு போன்றவை மக்களை கடுமையாக பாதிக்கிறது. விசைத்தறி தொழில் முடங்கிப்போய் உள்ளது. ஆனால் பஞ்சு ஏற்றுமதி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2012ம் ஆண்டிலும் மின்வெட்டு பிரச்சனை தீராது. விலை வாசி உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் கூட வாழ முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. மானியம் கொடுப்பதால் மட்டும் பிரச்சனை தீராது.
சென்னை நகரில் ஆங் காங்கே சாலைகள் தோண் டப்படுவதும், சாலையே இல்லாத தெருவில் நடை மேடை கட்டுவதும் எதனால்? தனது கட்சியின் முன்னணி ஊழியர்களை பணக்காரர்களாகவும், ரவுடி களாகவும் மாற்றும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. அதன்விளைவுதான் சிபிஎம் தலைவர் வெட்டிப்படு கொலை செய்யப்பட்டது.
சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது. அதனை செய்ய மத்திய அரசு மறுக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் தவறான நடவடிக்கைகள் ஏழை எளிய மக்களை பாதிக் கிறது. மக்களுடைய கோபம் தான் ஆட்சியாளர்களை அடிபணியச் செய்யும்.
டி.கே.ரங்கராஜன்
ஆனந்தமான முதல்வரும், பாவமான ஆனந்தியும்!
அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது; அழகான வீட்டிற்கு நன்றி!
ஒரு சிறுமி, முதல்வருக்கு கடிதம் எழுதுவது போலவும், ஒரு வீட்டின் படத்தை வரைந்து அதில் நன்றி தெரிவித்து முதல்வரிடம் வழங்குவது போலவும், துணை முதல்வரை கையைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் அழைத்து வருவது போலவும் சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் அடிக்கடியும், சினிமா தியேட்டர்களிலும் காண்பிக்கப்படுகிறது.
பின்னணி இசையோடு, பார்ப்பவர்கள் பூரித்துப் போகும் வகையில், அந்த விளம்பரப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கடிதத்திற்குப் பின் உள்ள விபரங்கள், அந்த ஆனந்திக்கு தெரியாது.
தமிழகத்தில் 2011ல் 3 லட்சம் கூரை வீடுகள் கான்கிரீட் வீடுகளாகவும், 2016க்குள் மீதமுள்ள 18 லட்சம் வீடுகள், கான்கிரீட் வீடுகளாக கட்டிக்கொடுக்கப்படும் என்றும், குடிசைகள் இல்லாத தமிழகம் உருவாகும் எனவும், தமிழக அரசால் நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் பாணியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 207 சதுர அடியில் கான்கிரீட் வீடு கட்ட அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.75,000 ஆகும். இதில் அரசால் சிமெண்ட் 50 மூட்டையும், 160 கிலோ கம்பியும் வழங்கப்படுகிறது.
பயனாளி தானே வீடு கட்டிக் கொள்ள வேண்டும். தரை மட்டம் வந்தவுடன் முதல் தவணை தொகை ரூ.9780ம், இரண்டாம் தவணையாக ரூ.16,000-ம், மூன்றாம் தவணையாக ரூ.10,000-ம் மீதி தொகை சிமெண்ட், கம்பிக்கு பிடித்தம் போக, வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் கொடுக்கப்படுகிறது. வீட்டிற்கு செங்கல் மட்டும் 9000 தேவைப்படுகிறது. ஒரு செங்கல் விலை ரூ.6 ஆக உள்ளது. 9000 செங்கல் விலை சுமார் ரூ.55 ஆயிரம். மீதமுள்ள ரூ.20 ஆயிரத்தில் என்ன செய்ய முடியும்? அரசுகொடுக்கும் சிமெண்ட், கம்பி போதுமானதல்ல. அரசு விலையில் சிமெண்ட் மட்டும் ரூ.10,000 கம்பி மட்டும் ரூ.10,000, கம்பி, சிமெண்ட், செங்கல் மட்டுமே ரூ.75,000 ஆகிறது. மற்ற செலவுகளில் கொத்தனார் கூலி, சித்தாள் கூலி, மணல், ஜன்னல், கதவு செலவு குறைந்தது ரூ.80,000 ஆகும். அரசு கொடுக்கும் ரூ.75 ஆயிரத்தை வைத்துக்கொண்டு எப்படி 207 சதுர அடியில் வீடு கட்டுவது மந்திரத்தில் மாங்காய் கதைதான்.
தேர்வு செய்யப்பட்ட பெரும்பாலான பயனாளிகள் குறிப்பாக விவசாயத் தொழிலாளிகள் வீடு கட்ட முன் வரவில்லை. ரூ. ஒன்றரை லட்சம் இல்லாமல் வீடு கட்ட முடியாது. கந்து வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டுவதா, கடனை கட்டுவதா என மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சம் கூரை வீட்டில் வாழ்பவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கு 2016க்குள் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும் என அரசு விளக்கம் சொல்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 16,990 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டும் வேலை நடந்து வருகிறது. 2016ம் ஆண்டிற்குள் வீடு கட்ட 1,05,761 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு அம்மாப்பேட்டை ஒன்றியம், நெல்லித்தோப்பு கிராமத்தில் 86 குடும்பங்கள் வசிக்கின்றன. அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள். இவர்களில் 30 குடும்பங்கள் பாசன வாய்க்கால் ஓரமாக வாழ்கின்றனர். அரசு கணக்கில் இந்த வீடுகள் உள்ள இடம், ஆட்சேபணைக்குரிய வாய்க்கால் புறம்போக்கில் உள்ளது. இவர்களுக்கு குடிமனைப்பட்டா, இதுவரை வழங்கப்படவில்லை. இந்த 30 வீடுகளில் 10 வீடுகள் ஓட்டுவீடுகள்ஆகும். ஓட்டு வீடு என்றால் ஒவ்வொரு வீட்டின் மேல் உள்ள ஓடுகள் 50ல் இருந்து 100 ஓடுகளுக்கு உள்ளாக மட்டுமே இருக்கும். ஆனால் அரசு கணக்கில் இவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடையாது. மீதம் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு செப்டம்பர் 21ல் குடிமனைப்பட்டா கேட்டு தமிழகம் முழுவதும் 5 லட்சம் உழைப்பாளி மக்கள் மாவட்ட ஆட்சியாளர்களிடம் மனுக்கொடுத்தனர். தஞ்சையில் அதே நாளில் மாவட்ட ஆட்சியரிடம் 40,000 மனுக்கள் அளிக்கப்பட்டது. அந்த 40,000ல் நெல்லித்தோப்பைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் குடிமனைப்பட்டா கேட்டு மனுக்கொடுத்தனர்.
இதுவரை அந்த மனுவிற்கு எந்த பதிலும் இல்லை. வட்டாட்சியரிடம் கேட்டபோது, நீங்கள் குடியிருப்பது ஆட்சேபணைக்குரிய நீர்வழிப்புறம்போக்கு. எனவே குடிமனைப்பட்டா வழங்க முடியாது என கூறினார். ஆனால் 2011 ஜனவரியில் வாய்க்கால் புறம்போக்கில் குடியிருக்கும் அதே தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் 2016க்குள் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும் என்று அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2011 மே மாதம் தேர்தலையொட்டி இன்னும் என்னென்ன கூத்துக்களும், பாடல்களும் அரங்கேறப் போகிறதோ?
முதல்வர் சிரித்துக்கொண்டு ஆனந்தமாகத்தான் இருக்கிறார். ஆனந்திகள் தான் பாவமாக இருக்கிறார்கள்.
(தீக்கதிரில், தஞ்சை வசந்த் எழுதியதிலிருந்து…)
தோழர் நாவலன் இறுதி நிகழ்ச்சி
ஜெ.நாவலன் இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் ஜெ.நாவலன் புதன்கிழமையன்று இரவு 7.30 மணியளவில் கள்ளச் சாராய ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார். இவரது இறுதி நிகழ்ச்சி வியாழனன்று பேரளம் திருமெய்ச்சுர் கிராமத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்ட தோழர் நாவலனின் உடல் வியாழக்கிழமையன்று காலை திருவாரூர் மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கட்சி தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்போடு கட்சி ஊழியர்கள் பின் தொடர திருமெய்ச்சுர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அவரது வீட்டில் சிறிது நேரம் வைக்கப்பட்ட உடல் பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக பொதுத்திடலில் வைக்கப்பட்டது. நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லாயிரக் கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று மறைந்த தங்களின் அன்பு தலைவனுக்கு வீர அஞ்சலி செலுத்தினர்.
தோழர் ஜெ.நாவலனின் இறுதி நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார். கட்சியின் மூத்த தலைவர் கோ.வீரையன். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன். என்.சீனிவாசன். ஏ.லாசர். பி.சண்முகம் மாநிலக்குழு உறுப்பினர்கள். இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வெ.வீரசேனன், அதிமுக மாவட்ட செயலாளர ஆர.காமராஜ். சட்டமன்ற உறுப்பினரகள் வி.மாரிமுத்து (சிபிஎம்) கே.உலகநாதன் பி.பத்மாவதி (சிபிஐ) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவரகள் அஞ்சலி செலுத்தினர்.
காவல்துறை தடியடி
மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்லாயிரகணக்கில் மக்கள் திரண்டதை கண்டு மிரண்டுபோன காவல்துறை மக்களை தடியடி மூலமும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும். துப்பாக்கி சூடு நடத்தியும் கலைத்தனர்.
இந்த நடவடிக்கைக்கு கட்சியினரும் பேரெழுச்சியாக திரண்ட மக்களும் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் போலீசார் பின் வாங்கினர். திருச்சி மண்டல ஐ.ஜி கரண்சிங்கா திருச்சி சரக டி.ஐ.ஜி. திருஞானம் நாகை எஸ்.பி.சந்தோஷ்குமார் தஞ்சாவூர் எஸ்.பி. செந்தில்வேலன் உட்பட ஆயிரக்கணக்கான அதிரடிப்படை மற்றும் காவல் துறையினர் பேரளம் திருமெய்ச்சுர் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
படுகொலை சம்பவம் நடந்த புதன்கிழமையன்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. நன்னிலம் வட்டத்தில் நன்னிலம். பேரளம் சன்னாநல்லுர் கொல்லுமாங்குடி ஆண்டிபந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரங்கல் தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களிலிருந்து நுற்றுக்கணக்கான மக்கள் வாகனங்கள் மூலம் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்
மனைவி புகார்
மறைந்த தோழர் ஜெ.நாவலனின் மனைவி என்.வசந்தா தனது கணவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கள்ளச் சாராயத்திற்கு எதிராக போரட்டங்களுக்கு தலைமையேற்றதால் கள்ளச்சாரய ரவுடிகளினால் தனது கணவருக்கு அச்சுறுத்தல் இருந்தது.
அதனால் எனது கணவரை தண்டத்தோப்பு பகுதியில் கள்ளச் சாராய தொழிலை நடத்திவரும் நாராயணன் மகன் பன்னீர் செல்வம் துண்டுதலின் பேரில்
1.பன்னீர் செல்வம் மகன் காளீஸ்வரன்.
2.கோவிந்தன் மகன் பிரகாஷ்.
3.பன்னீர செல்வம் மகன் ஜீவா.
4.நாராயணன் மகன் ராமன்.
5.சுகுமாரன் மகன் பச்சைபிள்ளை.
6.நாரயணன் மகன் பரதன்
ஆகிய ஆறு பேரும் பேரளம் காவல் சரகம் கொட்டூர மாங்குடி பகுதியில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கியதுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் தஞ்சம் புகுந்த அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டனர்.
எனவே. எனது கணவரின் படுகொலைக்கு நியாயம் கிடைத்திட கொலையாளிகளை கைது செய்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்ற வியாழக்கிழமையன்று மாலை பெயர் குறிப்பிட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் கோவிந்தன் மகன் பிரகாஷ். நாராயணன் மகன் ராமன் ஆகிய இருவரும் மானமதுரை காவல் நிலையத்தில் சரணடைந்ததாக காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இரங்கல் நிகழ்ச்சியில் பேசிய தலைவர்கள். திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்த படுகொலை சம்பவமே உதாரணம். திமுகவில் இதுபோன்ற ரவுடிகளின் ஆதிக்கமும் வன்முறை கலாச்சாரமும் பெருகி வருகிறது. திமுகவின் தலைவராகவும் தமிழக அரசின் காவல்துறைக்கும் பொறுப்பாகவும் உள்ள தமிழக முதல்வர் கருணாநிதி இந்த கொலை சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இரங்கல் நிகழ்ச்சிக்கு பிறகு பல்லாயிரக் கணக்கானோர் அணிவகுக்க மக்கள் தலைவர் தோழர் நாவலனின் சொந்த ஊரான திருமெய்ச்சுரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Thursday, January 6, 2011
இரையாக வேண்டியது நாமல்ல - ஆர்.எஸ்.செண்பகம்
அக்டோபர் 29ம் தேதி கோயம்புத்தூர் நகரில் முஸ்கின் மற்றும் அவளுடைய சகோ தரன் ஹிருத்திக் ஆகியோர் கால் டாக்சி டிரைவர் மோகனால் கடத்தப்பட்டு அந்த பெண் குழந்தை பாலியல் வன்முறைக்குட் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள். அவளுடைய சகோதரனும் கொலை செய்யப் பட்டுள்ளான். மோகன் என்பவருக்கு ஒரு தனியார் வங்கியில் ரூ. 2 லட்சம் கடன் இருந் துள்ளது. இந்தத் தொகையை எளிதில் பெறு வதற்கு துருப்புச் சீட்டாக இந்த குழந்தை களை கடத்தியுள்ளார் என்று பின்னர் காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு முடிவதற்குள்ளேயே சென்னை யில் மற்றுமொரு நிகழ்வு, இதில் கடத்தப்பட்ட கீர்த்திவாசன் என்ற அந்த சிறுவன் தமிழகக் காவல் துறையினரால் உயிருடன் மீட்கப்பட் டுள்ளான். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களில் ஒருவரான விஜய குமார் என்ற இன் ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ., படித்த பட்டதாரி, இவருக்கும் இவருடைய நண்பர் பிரபு என்ற மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்த டிப்ள மோ பட்டதாரி இளைஞருக்கும் தொழில் துவங்க மிகப்பெரிய அளவில் பணம் தேவைப் பட்டுள்ளது.
இந்த இரண்டு வழக்குகளிலும் குற்ற வாளிகள் ஏற்கனவே ஏதோ ஒரு வகையில் குழந்தைகளுக்கு அறிமுகமானவர்களாக அல்லது குழந்தைகளைப் பற்றி, அவர்களது குடும்பங்களைப் பற்றி, அவர்களது நடவடிக் கைகளைப் பற்றி அறிந்தவர்களாக இருந்தனர் என்பது நாம் கவனிக்கத்தக்கது. இவை யெல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வந்த போது பெற்றோர்கள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் ஒரு அச்சத்தை கிளப்பிவிட்டுள் ளது. ஆனால் 1998 முதலே (இது போன்ற சம் பவங்கள் அதிகரித்த காலகட்டம் என்ற வகையில்) பள்ளிகளிலும். பள்ளிசெல்லும் வழிகளிலும் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குட்படுத் தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் ஆசிரியர்களால், சக மாணவர்களால், குழந் தைகளுக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆனவர் களால் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய குற்றங்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்பதும் சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிகழ்வுகளை “சம்பவங்கள்” என்று சாதாரணமாகச் சொல்லி விட முடியாது. இந்த வன்முறைகள் அரங்கேறிய இடங்களும், சூழ்நிலைகளும், பல் வேறு கேள்விகளை நம் முன்னே (பெற் றோர்கள் என்ற முறையிலும், இந்த சமூகத்தின் பிரஜைகள் என்ற முறை யிலும்) எழுப்பியுள்ளது.
நாம் நம் பிள்ளைகளுக்கு குழந்தைகள் உரிமை பற்றிய விழிப்புணர்வை தகுந்த வய தில் தகுந்த வகையில் ஏற்படுத்தியிருக் கிறோமா? சமுதாயப் புறச்சூழலை அவர் களை புரிந்து கொள்ளச் செய்துள்ளோடு சமு தாயச் சீர்குலைவுகளையும் அவற்றிலிருந்து விடுபடும் முறைகளையும், தற்காப்பு நடவடிக் கைகளையும் அறிவுறுத்தி இருக்கிறோமா? அதேபோன்று சிறந்த கல்வி தரும் பள்ளி என்று உயர்ந்த மதிப்பெண்களை எடுக்க வைக்கின்ற பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் பெற்றோர்கள் அந்த பள்ளிகளில், பள்ளி செல் லும் வழிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் நடைமுறைகள் உள்ள னவா என்பதையும், மாணவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தும் திட்டவட்ட மான செயல்முறைகள் உள்ளனவா என்பதை யும் கவனிக்கிறோமா? இதையெல்லாம் நாமும் செய்ய வேண்டியுள்ளது, பள்ளிகளும் கவனிக்க வேண்டியுள்ளது, பெற்றோர்- ஆசிரியர் பங்களிப்பும் அவசியமாகிறது. சமூக ஆர்வலர்கள் இன்னும் ஒரு படி மேலான சிந் தனையுடன் நாம் யோசிக்க வேண்டிய மற்று மொரு விஷயத்தையும் முன் வைக்கின்றனர். குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - 2005 பள்ளிகளில் குழந்தைகளுக்கு உரிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதும். ஒரு குழந்தை பள்ளிச் சீருடையில் வீட்டை விட்டு வெளியே வரும் நொடி முதல் அந்த குழந்தையின் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகத்திற்கும் பொறுப்புள்ளது என்பதுமே அவர்கள் முன் வைக்கின்ற கருத்து.
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் சமூக சீர்கேடு களுக்கு மிக எளிதாக இரையாகின்றனர் என்பதுதான் வேதனை தரும் விஷயமாக உள்ளது. பெண்களுக்கும், வயோதிகர்களுக் கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பினை தர வேண்டிய நமது அரசாங்கம் இந்த பிரச்ச னைகளின் ஆணி வேரினை கண்டறிய வேண் டும், பிரச்சனைகளுக்கான காரணிகளை வேரடி மண்ணோடு களைய வேண்டும்.
கட்டுரையாளர், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு, நெல்லை மாவட்ட அமைப்பாளர்.
இந்த இரண்டு வழக்குகளிலும் குற்ற வாளிகள் ஏற்கனவே ஏதோ ஒரு வகையில் குழந்தைகளுக்கு அறிமுகமானவர்களாக அல்லது குழந்தைகளைப் பற்றி, அவர்களது குடும்பங்களைப் பற்றி, அவர்களது நடவடிக் கைகளைப் பற்றி அறிந்தவர்களாக இருந்தனர் என்பது நாம் கவனிக்கத்தக்கது. இவை யெல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வந்த போது பெற்றோர்கள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் ஒரு அச்சத்தை கிளப்பிவிட்டுள் ளது. ஆனால் 1998 முதலே (இது போன்ற சம் பவங்கள் அதிகரித்த காலகட்டம் என்ற வகையில்) பள்ளிகளிலும். பள்ளிசெல்லும் வழிகளிலும் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குட்படுத் தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் ஆசிரியர்களால், சக மாணவர்களால், குழந் தைகளுக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆனவர் களால் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய குற்றங்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்பதும் சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிகழ்வுகளை “சம்பவங்கள்” என்று சாதாரணமாகச் சொல்லி விட முடியாது. இந்த வன்முறைகள் அரங்கேறிய இடங்களும், சூழ்நிலைகளும், பல் வேறு கேள்விகளை நம் முன்னே (பெற் றோர்கள் என்ற முறையிலும், இந்த சமூகத்தின் பிரஜைகள் என்ற முறை யிலும்) எழுப்பியுள்ளது.
நாம் நம் பிள்ளைகளுக்கு குழந்தைகள் உரிமை பற்றிய விழிப்புணர்வை தகுந்த வய தில் தகுந்த வகையில் ஏற்படுத்தியிருக் கிறோமா? சமுதாயப் புறச்சூழலை அவர் களை புரிந்து கொள்ளச் செய்துள்ளோடு சமு தாயச் சீர்குலைவுகளையும் அவற்றிலிருந்து விடுபடும் முறைகளையும், தற்காப்பு நடவடிக் கைகளையும் அறிவுறுத்தி இருக்கிறோமா? அதேபோன்று சிறந்த கல்வி தரும் பள்ளி என்று உயர்ந்த மதிப்பெண்களை எடுக்க வைக்கின்ற பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் பெற்றோர்கள் அந்த பள்ளிகளில், பள்ளி செல் லும் வழிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் நடைமுறைகள் உள்ள னவா என்பதையும், மாணவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தும் திட்டவட்ட மான செயல்முறைகள் உள்ளனவா என்பதை யும் கவனிக்கிறோமா? இதையெல்லாம் நாமும் செய்ய வேண்டியுள்ளது, பள்ளிகளும் கவனிக்க வேண்டியுள்ளது, பெற்றோர்- ஆசிரியர் பங்களிப்பும் அவசியமாகிறது. சமூக ஆர்வலர்கள் இன்னும் ஒரு படி மேலான சிந் தனையுடன் நாம் யோசிக்க வேண்டிய மற்று மொரு விஷயத்தையும் முன் வைக்கின்றனர். குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - 2005 பள்ளிகளில் குழந்தைகளுக்கு உரிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதும். ஒரு குழந்தை பள்ளிச் சீருடையில் வீட்டை விட்டு வெளியே வரும் நொடி முதல் அந்த குழந்தையின் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகத்திற்கும் பொறுப்புள்ளது என்பதுமே அவர்கள் முன் வைக்கின்ற கருத்து.
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் சமூக சீர்கேடு களுக்கு மிக எளிதாக இரையாகின்றனர் என்பதுதான் வேதனை தரும் விஷயமாக உள்ளது. பெண்களுக்கும், வயோதிகர்களுக் கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பினை தர வேண்டிய நமது அரசாங்கம் இந்த பிரச்ச னைகளின் ஆணி வேரினை கண்டறிய வேண் டும், பிரச்சனைகளுக்கான காரணிகளை வேரடி மண்ணோடு களைய வேண்டும்.
கட்டுரையாளர், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு, நெல்லை மாவட்ட அமைப்பாளர்.
Tuesday, January 4, 2011
அம்வே கொள்ளை - - நம்மால முடிஞ்ச நல்ல காரியம்
"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான்MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.
ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பலMLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICALபிரிவை சேர்ந்தவை.
இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).
ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பலMLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICALபிரிவை சேர்ந்தவை.
FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.
பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:
ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும்PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.
இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.
இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள்AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.
ஏமாற்றும் வழிகள்:
இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.
இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.
நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.
►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).
►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)
மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.
TOOTHBRUSH(1) - 19 ரூபாய்
HAIR OIL(500 ML) - 95 ரூபாய்
SHAVING CREAM(70G) - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்
FACE WASH -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்
TOOTHBRUSH(1) - 19 ரூபாய்
HAIR OIL(500 ML) - 95 ரூபாய்
SHAVING CREAM(70G) - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்
FACE WASH -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்
மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.
நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?
► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)
(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)
►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)
► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 %தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.
இப்போது கொள்ளை கும்பலின் கொள்ளை கணக்கை பாருங்கள்:
►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.
►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .
►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995ரூபாய்.
►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .
►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995ரூபாய்.
இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.
►ஒருவன் ஒருலட்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)
100 x 995 = 99500 ரூபாய்
இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.
3000 x 100 = 300000 ரூபாய்
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).
இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.
இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PVஎன்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.
300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.
லட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.
இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.
இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:
தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.----------------------------x---------------------------
நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திர
Subscribe to:
Posts (Atom)