எல்ஐசி வீட்டு வசதி நிறு வனம் உள்ளிட்ட நிதிநிறு வனங்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தனிப் பட்ட அதிகாரிகளே என் றும், அவர்களை மத்திய புலனாய்வுக்கழகம்(சிபிஐ) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகத் தின் (எல்ஐசி) தலைவர் டி.எஸ்.விஜயன் கூறினார்.
இந்த அதிகாரிகளின் முறைகேடுகளால் எல்ஐசி எனும் மாபெரும் நிறுவனத் திற்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும், தனிப் பட்ட அதிகாரிகளின் இது போன்ற முறைகேடுகளை தடுக்க ஒழுங்குமுறை நட வடிக்கைகள் மேலும் உறு திப்படுத்தப்படும் என்றும் தில்லியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர் கூறி னார். ரூ.24 ஆயிரம் கோடி உபரி வருமானத்துடன் எல்ஐசி நிறுவனம் மேலும் வலுவான நிலையில் இருக் கிறது என்றும் அவர் குறிப் பிட்டார்.
ஊழல் அல்ல;
லஞ்ச முறைகேடு
இதனிடையே, மணி மேட்டர்ஸ் எனும் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து பெருமளவில் லஞ்சம் பெற்றுக் கொண்டு மிகப்பெரும் தொகையை வீட்டுக்கடன் என்ற பெய ரில் வழங்கிய எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், இந்தி யன் வங்கி, பஞ்சாப் நேஷ னல் வங்கி, சென்ட்ரல் வங்கி உள்ளிட்ட நிறுவனங்க ளின் உயர் அதிகாரிகளை கடந்த புதனன்று சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கை ஊழல் எனக் கூற முடியாது என்றும், பொதுத் துறை மற்றும் தனியார் நிறு வன அதிகாரிகள் ஈடுபட் டுள்ள லஞ்ச முறைகேடு என்ற அடிப்படையிலேயே விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் சிபிஐ இயக்குநர் பல்வீந்தர் சிங் கூறினார்.
No comments:
Post a Comment