Tuesday, November 30, 2010

தோழர் கருப்பையா நினைவாக படிப்பகம்

காலமெல்லாம் உழைத்த ஒரு மனிதனை எப்படிப்
போற்றுவது?

தொண்டைமான் நல்லூர் கிராமத்தில் தோழர் கருப்பையா
( முன்னாள் துணைத்தலைவர், காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்,
தஞ்சைக் கோட்டம்) நினைவாக ஒரு நூலகம்
செயல்பட்டு வருகிறது. சி பி எம் மாவட்டச் செயலாளராகவும்
செயலாற்றியவர் கருப்பையா. புதுக்கோட்டை மண்ணில்
அறிவொளி இயக்கத்தில் தோழர் கண்ணம்மாவுடன் இணைந்து
அவர் ஆற்றிய பணி அற்புதமானது. குவாரி பெண் உழைப்பாளிகளின்
வாழ்வுரிமைக்கான போராட்டத்திற்கு தலைமை ஏற்று அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தவர்.

அவரின் சொந்த கிராமத்தில் இந் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
சிந்தனைக்கும், கல்விக்கும் மறு பெயர்தானே கருப்பையா.

No comments:

Post a Comment